Ketu In Leo 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர கதியில் தான் பயணிப்பார். மேலும் கேதுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. இந்த கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது கேது சூரியனின் சிம்ம ராசி மற்றும் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் மாதம் வரை இருப்பார்.
ஜோதிடத்தில் கேது ஞானம், பற்றின்மை மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இந்த கேது ஒருவரை பௌதிக இன்பத்தில் இருந்து விலகி, மன அமைதிக்கு கொண்டு சென்று, முந்தைய பிறவில் செய்த செயல்களின் பலனைத் தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
மேலும் ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், திடீர் ஆதாயங்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு பின் கேது காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் இருக்கும் கேதுவால் டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் இருக்கும் கேதுவால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் வரை சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் இருக்கும் கேதுவால் கடக ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். இக்காலத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையின் படி நடந்தால், எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம்
கேதுவின் அருளால் சிம்ம ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் டிசம்பர் வரை அவசரப்பட்டு எந்த ஒரு முக்கியமான பெரிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கேதுவின் அருளால் நிதி ரீதியாக மங்களகரமானதாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பண பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். ஆனால் எந்த ஒரு முக்கியமான முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும் தொழிலில் படிப்படியாக நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
- ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது..
- கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
- ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
- சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
- ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்