Jupiter Rise In Cancer On 12 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் காரணியாவார். இந்த குரு பகவானின் அருள் இருந்தாலோ அல்லது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தாலோ, அந்நபர் கல்வி, தொழில், திருமணம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

Advertisement

தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் ஜூன் 02 ஆம் தேதி முதலாக குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் ஜூலை 14 ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார்.

Advertisement

குரு பகவான் உதயமாவதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் 4 ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவானால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, நிதி ஆதாயங்களும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

Advertisement

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். மன அமைதி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புக்களை திறம்பட முடிப்பீர்கள் மற்றும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், ஃபேஷன், வணிகத் துணையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். அலுவலகத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல செய்தியைப் பெறலாம்.

Advertisement

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்ற பாதை திறக்கும். நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உள்ள தடைகள் நீங்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)