Budhaditya Rajyog In Cancer On 05 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருந்து வெளியேறி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். ஆனால் இந்த கடக ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் பயணித்து வருகிறார். இதனால் கடக ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராகிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் குறிப்பாக 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் 05 ஆம் தேதி உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சொத்து விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையிலும் வளர்ச்சியைக் காணக்கூடும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், நல்ல செய்தியைப் பெறக்கூடும். முக்கியமாக பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காடர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வேலை தேடுபவர்களுகு எதிர்பார்த்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதன் காரணமாக பணியிடத்தில் வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது!
- குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
- செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன?
- ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம்
- 2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
- நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!