August 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2026 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதிக பொறுப்புக்களை ஏற்பீர்கள். உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் அதிக விவேகத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து அதிக பாசத்தை எதிர்பார்ப்பீர்கள். இம்மாதத்தில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு பதிலாக வெளிப்படுத்துவது உங்கள் உறவை மேம்படுத்தும். மன அழுத்தம் உங்கள் உடல் வலிமையைக் குறைக்கக்கூடும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒழுக்கமானது நல்ல வெற்றியைத் தரும். கல்வி, எழுத்து, ஆலோசனை, சந்தைப்படுத்தல், ஊடகம் அல்லது கலைத் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். திட்டமிடுவது மட்டுமல்லாமல், அவற்றை முழுமையாக செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்க வரக்கூடும். தினசரி வழக்கத்தைப் பின்பற்றுங்கள். இது உங்கள் வேலையை எளிதாக்கும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால் இந்த பொறுப்புகள் தான் எதிர்காலத்தில் உங்களுக்குப் புகழைக் கொண்டு வரும். தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் கருத்துக்களை யார் மீதும் திணிக்காமல் கவனமாக இருங்கள். வேலையில் மும்முரமாக இருக்கும்போது உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுமையான நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது தவறான புரிதல்களைத் தடுக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்வது மனச்சோர்வை ஏற்படுத்தும். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்துங்கள்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் தொழில் கனவுகளை நிறைவேற்ற ஊக்குவிக்கும். உறவுகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால் உங்கள் பொறுப்புகள் சற்று அதிகரிக்க வேண்டியிருக்கலாம். நிதி விஷயங்கள் குறித்து வீட்டில் விவாதங்கள் எழலாம். அன்புக்குரியவர்களின் ஆதரவு உங்களை வலுப்படுத்தும். மற்றவர்களுக்கு உதவும் போது உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது உங்கள் புரிதலை யதார்த்தமாக மாற்றுவதற்கான மாதமாக இருக்கும். படிப்பு, ஆராய்ச்சி, எழுத்து, ஆலோசனை வழங்குதல் அல்லது ஐடி துறையில் ஈடுபடுபவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். உறவுகளில் அதிக ஆழத்தையும் நெருக்கத்தையும் விரும்புவீர்கள். உங்கள் உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துங்கள்; இது அவருடனான உறவை வலுப்படுத்தும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். தொழில், பெரிய லட்சியங்கள், பொறுப்பு மற்றும் நிதி வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். கடந்தகால கடின உழைப்பு பலனளிக்கத் தொடங்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒழுக்கத்துடன் நடந்தால் வெற்றி பெறலாம். அலுவலகப் பணிகள், விளையாட்டு, பாதுகாப்பு அல்லது சமூக சேவை ஆகியவற்றில் பெரிதும் முன்னேறுவீர்கள். உங்கள் வேகத்திற்கு மற்றவர்கள் ஈடுகொடுக்க முடியாதபோது கோபப்படுவதையோ அல்லது எரிச்சலடைவதையோ தவிர்க்கவும். உடனடியாகக் கோபமடைவதற்குப் பதிலாக, மற்றவரின் முழு கதையையும் கேளுங்கள். இது உறவுகளை மேம்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம்
- July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்..
- இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
- இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
- உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்