For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எத்தனை பேரிடம் இந்த நல்லுள்ளம் இருக்கும்? இப்படி திருமணம் செய்தால் உலகே வாழ்த்துமே!

சமுதாயத்தில் பின்தங்கிய 500 குழந்தைகளை விருந்தினராய் அழைத்து திருமணம் செய்துக் கொண்ட அற்புதமான தம்பதியர்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான தருணம். ஒரு கூட்டில் இருந்து புதிய கூட்டுக்குள் பிள்ளைகள் காலடி எடுத்து வைப்பது போன்றது.

அது ஒரு தனி உலகம். அதை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம், எப்படி துவங்குகிறோம் என்பதில் தான், அது சொர்கமா, நரகமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

பெரும்பாலும் திருமணங்கள் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடக்கும். ஒருசிலர் மட்டும் சட்டதிட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்களை உடைத்து தங்களுக்கு பிடித்தபடி திருமணம் செய்துக் கொள்வார்கள்.

அப்படி ஒரு திருமணம் தான் இது...ஒரு அற்புத திருமணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெங்களூர் தம்பதி!

பெங்களூர் தம்பதி!

பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணத்தில் உணவிலும், ஆடம்பரத்திலும் செலவு செய்வதை விட, ஏழை குழந்தைகளை மகிழ்விக்க அந்த பணத்தை செலவு செய்யலாம் என தீர்மானம் செய்தனர்.

Image Source

அக்டோபர் 23, 2016!

அக்டோபர் 23, 2016!

திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுரபி ஃபேஸ்புக் லைவ்-ல் தோன்றி, தனது திருமணத்தை பற்றியும், புதிய முயற்சியை பற்றியும் அறிவித்தார். மேலும், இந்த முயற்சிக்கு உதவவும், தன்னார்வம் உள்ளவர்களையும் தங்களுடன் இனைந்து பணிபுரிய கேட்டுக் கொண்டார். இதற்கான படிவத்தை கூகுல் ஃபாரம்-ல் உருவாக்கினார்.

Image Source

சேகரிப்பு!

சேகரிப்பு!

உதவியற்ற ஏழை குழந்தைகளுக்கு நன்கொடையாக, பரிசுகளாக, புத்தகங்கள், உடைகள், இனிப்புகள் என பல வகைகளில் பொருட்கள் வந்து சேர்ந்தன. இவர்களுடன் சமர்த்தனம் என்ற அறக்கட்டளையும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

Image Source

500 குழந்தைகள்!

500 குழந்தைகள்!

திட்டமிட்டப்படி சுரபியின் திருமணத்தின் போது விருந்தினர்களாக 500 குழந்தைகள் வந்தனர். அவர்களுக்கு திருமண நாளான் நவம்பர் 6, 2016 அன்று விளையாட்டு போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்சிகள், என பல கேளிக்கை போட்டிகள் நடத்தப்பட்டன. அது அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

மகிழ்ந்த தம்பதி!

மகிழ்ந்த தம்பதி!

கேளிக்கை என்று மட்டுமின்றி, வந்த குழந்தைகளுக்கு மனதார உணவும் இட்டு மகிழ்ந்தனர் இந்த அற்புத தம்பதியினர். திருமணத்திற்கு பிறகு இது குறித்து சுரபி முகநூல் பதிவும் செய்திருந்தார். அதில் தனது கனவு நினைவானதற்கு மகிழ்ந்ததாக கூறியிருந்தார்.

பலரும் இவர்களை மனமார வாழ்த்தி கருத்து கூறியிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chief Guest's of This Awesome Couple's Wedding were 500 Underprivileged Kids

Cheif Guest's of This Awesome Couple's Wedding were 500 Underprivileged Kids
Story first published: Tuesday, January 10, 2017, 12:54 [IST]
Desktop Bottom Promotion