For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மனைவியை அடக்கி ஆள நினைக்கும் கணவரா நீங்க?

மனைவியை அடக்கி ஆள நினைப்பதால், உங்கள் இல்லறத்தில் உண்டாகும் தீய விளைவுகள் பற்பல. இதனால், ஒருநாள் நீங்கள் இருவரும் விவாகம் வெறுத்து விவாகரத்து செய்யும் நிலை கூட ஏற்படலாம்.

|

இது ஆணாதிக்க உலகம். ஆம், ஒரு பெண் நினைப்பதை செய்து முடிக்க கூட அதில் ஒரு ஆணின் ஒப்புதல் தேவைப்படுகிறது. சில சமயங்களில் அதட்டலாக. பல சமயங்களில் அக்கறை, அதீத அன்பு, பாதுகாப்பு என்ற பெயரில்.

திருமண வாழ்வில் ஒரு ஆண், தன் மனைவியை அடக்கி ஆள நினைப்பதால் என்னென்ன தீய தாக்கங்கள் எல்லாம் காண வேண்டியிருக்கும் என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது...

Why You Shouldn’t Control Your Spouse

அடைப்பட்ட உணர்வு...
இதை செய், இப்படி செய் என நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் செய்முறை விளக்கம் அளித்துக் கொண்டே இருப்பது அவர்களை ஏதோ கூண்டுக்குள் அடைத்தது போன்ற உணர்வை தர ஆரம்பித்துவிடும். இது இப்படிப்பட்ட உறவில் நாம் இனியும் நீடிக்க வேண்டுமா என்ற எண்ணம் எழ காரணமாகிவிடும்.

பழிக்கு பழி...
நீங்கள் உங்கள் மனைவியை அடக்கி ஆளவேண்டும் என நினைப்பது, செயற்படுவது, ஒருநாள் அவர்கள் எரிமலை போல வெடிக்கவும், உங்களை எதிர்க்கவும் கூட காரணமாகலாம். தம்பதியில் நீ பெரிதா, நான் பெரிதா என்ற எண்ணம் எப்போதும் எழ கூடாது.

தவறான எண்ணம்...
அடக்கி ஆள நினைக்கும் நீங்கள் நல்லதை சொன்னாலும் கூட அதை தவறான கண்ணோட்டத்தில் காண வைக்கும். இது, இருவர் மத்தியிலும் பிரிவை மென்மேலும் அதிகரிக்கும்.

அவரும் அடக்கலாம்....
நீங்கள் அடக்கி ஆள நினைப்பது போலவே, ஒரு கட்டத்தில் இருந்து அவரும் உங்களை அடக்கி ஆள நினைக்கலாம். இந்த ரிவெஞ் பலவகைகளில் உறவை சிதைக்கும்.

நிம்மதி....
ஒருவரை ஒருவர் அடக்கி ஆள நினைக்கும் எண்ணம் காலப்போக்கில் உறவில் இருக்கும் நிம்மதியை இழக்க செய்யும். இதனால், இல்லற வாழ்க்கை மீதான பற்று குறைய ஆரம்பிக்கும்.

வெறுப்பு அதிகரிக்கும்...
நாளுக்கு நாள் இருவர் மத்தியில் இருந்த அன்பும், காதலும் குறைந்து, வெறுப்பு மட்டுமே அதிகரித்துக் கொண்டிருக்கும்.

English summary

Why You Shouldn’t Control Your Spouse

Anyone would hate being controlled all the time. The moment we try to exercise power in our relationships, the beauty is lost. This is why you shouldn’t control your spouse.
Story first published: Friday, October 28, 2016, 12:10 [IST]
Desktop Bottom Promotion