படுக்கையறையில் பெண்கள் தங்கள் உடலை அசிங்கமாக எண்ணுவது ஏன்?

பெரும்பாலான நடுவயது பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது தங்கள் உடலை அசிங்கமாக எண்ண துவங்குகின்றனர். இவை இல்லற வாழ்விலும் தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றன. ஏன் அவர்களுக்கு இந்த எண்ணம் பிறக்கிறது?

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை 99% இல்லற வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மனிதர்கள் என்றில்லை விலங்குகள் மத்தியிலும் இது சாத்தியமற்றது தான். உடலுறவு என்பது எல்லா உயிரினங்கள் மத்தியிலும் பொது, இயல்பு, அனைத்துக்கும் மேலாக உலகை இயக்கும் ஒரு இயற்கை செயற்முறை.

Why did these women convince themselves they are too ugly for the bedroom?

மனிதர்களாகிய நாம் தான் உடலுறவை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை அதிகரித்து கொண்டு, இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் பெண்கள் மத்தியில் தான் 30களில் பயணிக்கும் போது தாம்பத்தியத்தின் போது உடல் சார்ந்த அழகியல் எண்ணங்கள் காரணமாய் தாக்கங்கள் உண்டாகின்றன. இது ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்!

காரணங்கள்!

பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காரணத்தால் பெண் உடலில் மார்பகம், வயிறு, கீழ் உடல் பகுதிகளில் தசை அதிகரித்து, தொங்குதல் உண்டாகின்றன. சிசேரியன் செய்யும் பெண்கள் மத்தியில் இது அதிகப்படியாக காணப்படுகிறது. இதன் காரணத்தால் உடல் வடிவம் மாறுவதால் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகரிக்கிறது.

உளவியல் எண்ணங்கள்!

உளவியல் எண்ணங்கள்!

பொதுவாகவே உடல் அழகு, வடிவம் இருந்தால் தான் ஆண்கள் தாம்பத்தியத்தில் விரும்பி ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. மிக நடுவயதில் தாம்பத்தியம் என்பது அரிதாக நடக்கும் செயல்.

மேலும், நடுவயதில் கூடுதல் என்பது மனதின் பால் கொண்ட அன்பினால் தான் அதிகம் உண்டாகும். எனவே, ஆண்கள் மத்தியில் நடுவயதிலும் வடிவம் சார்ந்த தாம்பத்திய ஈடுபாடு மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது.

வேறு உறவு...

வேறு உறவு...

பெண்கள், தன் துணை உடல் ரீதியாக தன்னிடம் வடிவத்தை எதிர்பார்க்காமல் செயற்படும் போது, அவர் வேறு பெண்ணுடன் உறவு அல்லது ஈர்ப்பு கொண்டதால் தான் தன்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது இல்லையோ என்ற எண்ணத்திலும் வாழ துவங்குகிறார்கள். இது போன்ற எண்ணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும், சோர்வு தான் உண்டாகிறதே தவிர, எந்தவிதமான நல்லதும் நடப்பதில்லை.

பெண் உடல் கூறு...

பெண் உடல் கூறு...

ஆண்களை விட, பெண்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே வயதாக, வயதாக குறைய துவங்கும். இதற்கு காரணம் அவர்களது உடல் கூறு. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்சிகளில் தாக்கம் உண்டாக்குகிறது.

வயது வித்தியாசம்!

வயது வித்தியாசம்!

இதற்காக தான் நமது இந்திய முறை திருமணங்களில் ஆண், பெண்ணுக்கு இடையே வயது வித்தியாசங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. 25 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் ஒரே சம அளவிலான மனம், மற்றும் உடல் ரீதியான முதிர்ச்சி இருக்கும்.

இது அவர்களுக்குள் மன ரீதியான உடல் ரீதியான குழப்பங்கள், சண்டைகள் அதிகம் எழாமல் இருக்க ஒரு கருவியாக இருக்கிறது.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

உண்மையில் நடுவயதில் பெண்கள் உடல் வடிவ மாற்றங்களால் சண்டைகள் எழுவதை விட, அவர்கள மன அழுத்தம், அவர்கள் எப்போதும் இதை காரணம் கொண்டு சோகமாக காணப்படுவது தான் சண்டைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why did these women convince themselves they are too ugly for the bedroom?

Why did these women convince themselves they are too ugly for the bedroom?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter