இல்லறத்திற்கு வேட்டு வைக்கும் அந்த நான்கு விஷயங்கள்!!!

Subscribe to Boldsky

சண்டை, சச்சரவுகள் இல்லாத தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இல்லறத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணினால், அந்த எண்ணத்தை உடனே உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள். சண்டை, சச்சரவு இல்லாத உறவும், உப்பு, காரம் இல்லாத உணவும் ருசிக்காது. ஆனால், இங்கு இதன் அளவு தான் ருசியை தீர்மானிக்கிறது.

அளவுக்கு அதிகமாக உப்பும், காரமும் இருந்தால் சாப்பிட முடியாது. அளவுக்கு அதிகமாக சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் இருந்தால் ஒன்றாக வாழ முடியாது. ஓர் உறவில் விரிசல் ஏற்பட சில காரணங்கள் தான் இருக்கிறது. முக்கியமான ஒன்று புரிதல் மற்றும் மதிப்பளித்தல். உங்கள் குணாதிசயமாக நீங்கள் கருதும் செயல்பாடுகள் உறவை அழிக்கும் கருவியாக கூட மாறலாம்.

எனவே, இல்லற உறவிற்கு பாதகமாக அமையும் அந்த நான்கு விஷயங்கள் பற்றி முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

விமர்சனம்

குழந்தைகளுக்கே அவர்கள் செய்யும் செயல்கள் குறித்து விமர்சனம் செய்வது, ஒப்பிடுவது பிடிக்காது. இதே நீங்கள் உங்கள் துணையை, அவர் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் குற்றம் குறை கூறுவது, விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பது நிச்சயம் ஒருநாள் உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

பாதுகாப்புத்தன்மை

திருமணத்திற்கு முன்பு தந்தை, திருமணத்திற்கு பிறகு கணவன். இந்த இருவர்களை தான் தனது முழுமையான பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் என ஓர் பெண் கருதுகிறாள். எனவே, இந்த பாதுகாப்பை சுவரை நீங்கள் பலப்படுத்த வேண்டுமே தவிர, தவிடுபொடியாக்கிவிடக் கூடாது.

மழுப்பும் பதில்கள்

கணவன், மனைவி மத்தியிலான உரையாடலின் போது மழுப்பும் பதில்கள் வருவது, சந்தேகத் தன்மை அதிகரிக்க கருவியாகிவிடுகிறது. எனவே, பொய் கூறினாலும் கூட தைரியமாக பதட்டமின்றி கூறுங்கள். பிறகு அந்த தவறை, பொய் கூறியதை அவர்கள் கண்டறியும் முன்னரே கூறிவிடுங்கள். இல்லையேல் கண்டிப்பாக பூக் கம்பமாக இருப்பவர்கள், பூகம்பமாக வெடிக்கக் கூடும்.

அலட்சியம்

உங்கள் துணை உங்களிடம் கூறும் விஷயங்கள், உங்களுடன் கலந்தாய்வு செய்யும் விஷயங்கள் போன்றவற்றை மிக அலட்சியமாக எடுத்துக் கொள்வது மிகவம் தவறு. இது நீங்கள் அவரை உதாசினம் படுத்துவது போல ஆகிவிடும். எனவே, எந்த விஷயமாக இருப்பினும் காதுக் கொடுத்து கேட்டு பதில் அளியுங்கள்.

உடலுறவு

உடலுறவில் ஈடுபடுவது இயற்கை. ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் கொஞ்சி கொஞ்சி பேசுவது, மற்ற நேரங்களில் கொஞ்சமாக பேசுவது. நீங்கள் அவரை அதற்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாகும். இது, உறவில் பிளவு ஏற்படுத்தும் செயலாகும். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Four Things That Kill Any Relationship

The Four Things That Kill Any Relationship, Its too dangerous. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter