சின்ன, சின்ன சண்டையும், கொக்கரிக்கும் கோழியும் - சின்ன பாப்பா, பெரிய பாப்பா!

Subscribe to Boldsky

மாமியார், மருமகள் என்றாலே இந்தியா - பாகிஸ்தான் என்பது போல தான் 99.99% சீரியல் மற்றும் திரைப்படங்களில் காண்பிக்கப்படும். ஆனால், உண்மையில் எல்லா உறவுகளை போல மாமியார், மருமகள் உறவும் அற்புதமானது தான்.

மகள் இல்லாத மாமியாருக்கும், அம்மா இல்லாத மருமகளுக்கும் தான் தெரியும் இந்த உறவின் ஆழம் எவ்வளவு உன்னதமானது என்று. ஓர் பாசத்திற்குள்ளான பனிப்போர் தான் இது.

தன் கணவனை அக்கறையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மனைவியும். இத்தனை ஆண்டுகள் தன் மகன் மீது செலுத்தி வந்த அன்பை இனி முழுமையாக காண்பிக்க முடியுமா, முடியாத என்ற நிலையில் அம்மாக்களும் தடுமாறும் போது தான் சண்டைகள் உருவாகின்றன.

இதையும் படிங்க: ஆண்களை குஷிப்படுத்தும் "இல்லற" விஷயங்கள்!!

சிற்சில குழப்பங்கள், பதட்டம் தான் மாமியார், மருமகள் எனும் உறவினை சற்று தருமாற வைக்கும். முழுமையாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் மற்றுமொரு அம்மா, மகளாக தான் வாழ்கிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கவனம்!

எதை பேச ஆரம்பித்தாலும் இயல்பாக, சுதந்திரமாக கருத்தை கூற முடியாமல். ஏதாவது கூறினால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற ஓர் அச்சம் இருக்கும். இதனால், பார்த்து, பார்த்து பேசும் ஓர் சுபாவம் நிலவும்.

அக்கறை!

மருமகள் மீது மாமியாருக்கும், மாமியார் மீது மருமகளுக்கும் இவர் தனது அம்மா/ மகள் மாதிரி அக்கறையாக இருப்பரா? உடல்நலம் சரி இல்லை என்றால் நன்றாக பார்த்துக் கொள்வாரா என்ற எண்ணம் இருக்கும்.

உடை நாகரீகம்!

ஆரம்பக் காலக்கட்டத்தில் மாமியார், மருமகள் இருவருமே தாங்கள் உடுத்தும் உடை மீது அக்கறை எடுத்துக் கொள்வார்கள். முக்கியமாக புகுந்தவீடு சென்ற மருமகள். இதனாலேயே திருமணமான முதல் பத்து நாட்களுக்கு சுடிதாரும், புடவையுமாக சுற்றுவார்கள்.

உர்ர்ர் முகம்!

முகத்தை உர்ர்ர் என்று வைத்திருந்தால் கொடுமை செய்வாரோ, சொல்வதெல்லாம் கேட்க வேண்டுமோ..? என்ற ஒரு அச்சம் உண்டாகும். எனவே, அவரை எப்படியாவது ஐஸ் வைத்து கூல் ஆக்க வேண்டும் என துடிப்பார்கள்.

குழப்பம்!

நாம் இதை செய்தால், இப்படி செய்தால் அவருக்கு பிடிக்குமா? நமது இயல்பு, குணாதிசயங்களை இவர் எப்படி எடுத்துக் கொள்வார், அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு பதட்டமான நிலையை உண்டாக்கும்.

தனிக்குடித்தனம்!

திருமணத்திற்கு பிறகு எல்லா மாமியார்களுக்கும் இருக்கும் ஓர் எண்ணம் இந்த தனிக்குடித்தனம். பையனை பிரித்து கூட்டி சென்றுவிடுவாளோ என்ற அச்சம் பெரும்பாலான ஆண்களை பெற்ற அம்மக்களுக்குள் இருக்கிறது.

இதில் விசித்திரம் என்னவெனில், தன் மகள் இதை செய்தால் மார்தட்டிக் கொண்டாடுவதும் இவர்களே தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Between Daughter in Law and Mother in Law

Emotional relationship between Daughter in Law and Mother in Law, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter