For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமாக போகும் பெண்களிடம் இருக்கும் பலவேறு அச்ச உணர்வுகள்!

|

திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரைக் கண்டால் சிலர் பாசக்கயிற் வீசுவது போல எகிறிக் குதித்து ஓடுவார்கள். இதற்கு காரணம் கல்யாணம் மட்டும் பண்ணிடாத மச்சி, உன் சந்தோஷமே போயிடும் என்பார்கள். ஆனால், இப்படி கூறும் அனைவருமே திருமணம் ஆனவர்கள் தான்.

நம்மிடம் எப்போதுமே ஒரு தீய குணம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் 90% சந்தோசமாக இருந்தாலும், மீதமுள்ள 10% துன்பத்தை எண்ணியே மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். திருமண வாழ்விலும் அப்படி தான். பொண்டாட்டி பற்றி குற்றங்குறை கூறியே அவர்கள் பற்றிய நல்ல விஷயங்களை மரித்துவிடுவோம்.

இப்படி ஒருப்பக்கம் இருக்கையில், திருமணம் நெருங்க, நெருங்க பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சங்கள் ஒருபுறம் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவன் வீட்டு உறவுகள்!

கணவன் வீட்டு உறவுகள்!

மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

கணவன், மனைவி உறவு!

கணவன், மனைவி உறவு!

இதுநாள் வரை தான், தன் வாழ்க்கை என்று இருந்த ஓர் சுழற்சியில் இன்று நாம், நம் வாழ்க்கை என்ற மாற்றம் நிகழ போகிறது. தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

சுதந்திரம் இருக்குமா?

சுதந்திரம் இருக்குமா?

தோழிகள், நண்பர்கள், வேலை, உடன் பணிபுரிவோர் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பெண்களுக்குள் வலுவாக இருக்கிறது. ஏனெனில், கணவனுக்கு பணிமாற்றம் ஆனால், தானும் பனி மாற்றம் வாங்கி செல்ல வேண்டும், அல்லது வேலையே விட்டு செல்ல வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான நிபந்தனை நமது சமூகத்தில் நிகழந்து வருகிறது.

நினைத்தது எல்லாம் கூற முடியுமா?

நினைத்தது எல்லாம் கூற முடியுமா?

நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் ஓடுகிறது.

குடும்ப பொறுப்புகள்!

குடும்ப பொறுப்புகள்!

இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் நிலவுகிறது.

நேரம் மற்றும் வேலை மேலாண்மை!

நேரம் மற்றும் வேலை மேலாண்மை!

எல்லா வேலைகளையும் உடனக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

எதிர்காலம்!

எதிர்காலம்!

வீடு, நிலம், வாகனம் வாகுவது, சேமிப்பு, என எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் குழப்பமாக எழும். ஆரம்பத்தில் எல்லா பெண்கள் மத்தியிலும் இதுபோன்ற சில தடுமாற்றங்கள் எழுவது இயல்பு தான்.

குழந்தைகள்!

குழந்தைகள்!

தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?

இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?

திருமணம், நெருங்க, நெருங்க, "இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?" என்ற கேள்வியும் சில பெண்கள் மத்தியில் அச்சம் காரணமாக எழுகிறது. இவை எல்லாம் திருமணம் ஆகும் வரை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kinds Of Fear That Occurs On Woman Who Going To Marry Soon

Kinds Of Fear That Occurs On Woman Who Going To Marry Soon, take a look on here
Story first published: Tuesday, July 5, 2016, 14:47 [IST]
Desktop Bottom Promotion