For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரணத்தின் பிடியில் இருந்து மனைவியை மீட்டு வந்த அதிசய கணவன்!

|

ராச்சல் ஃபரோக் கலிபோர்னியாவை சேர்ந்தவர். அனோரெக்ஸிக் எனும் இந்த பிரச்சனை ஏற்படும் முன்னர் இவர் ஒரு பர்சனல் ட்ரெய்னியாக பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது.

தன் வாழ்க்கையில் இப்படி ஒரு தருணத்தை சிந்திப்போம் என எப்போதும் ராச்சல் ஃபரோக் எண்ணியிருக்க வாய்ப்பே இல்லை. ராட், ராச்சல் ஃபரோக்-ன் கணவர். தனது மனைவி மிகவும் ஆக்டிவாக தான் இருந்தார்.

அனோரெக்ஸிக் பிரச்சனைக்கு பிறகு தான் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என வருத்ததுடன் கூறினார். அப்படி ராச்சல் ஃபரோக்-ன் வாழ்வில் என்ன தான் நடந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசி இல்லை!

பசி இல்லை!

ராச்சல் ஃபரோக்-க்கு முதலில் பசியின்மை தான் ஏற்பட்டிருந்தது என எண்ணினர். சரியாக சாப்பிடுவதை இவர் நிறுத்தினார். கிட்டத்தட்ட 56 கிலோவில் இருந்த ராச்சல் ஃபரோக் இப்போது வெறும் 18 கிலோ தான் இருக்கிறார்.

18 கிலோ எடை என்பது சராசரியாக ஐந்திலிருந்து ஆறேழு வயது இருக்கும் ஒரு குழந்தையின் உடல் எடை ஆகும். இதற்கு காரணம் ராச்சல் ஃபரோக்-க்கு ஏற்பட்ட அனோரெக்ஸிக் எனும் மென்டல் பிரச்சனை என்கின்றனர் மருத்துவர்கள்.

Image Courtesy

நல்ல வயிறு வடிவம்!

நல்ல வயிறு வடிவம்!

ராச்சல் ஃபரோக் முதலில் ஓரிரு கிலோ எடை குறைத்து சிறந்த வயிறு வடிவம் பெற வேண்டும் என்று தான் இருந்தார். ஆனால், உடல் எடை குறைவது அவரது கட்டுப்பாட்டை மீறி சென்றது.

ராச்சல் ஃபரோக்-ன் கணவர் தான் முன்னர் இவரது பர்சனல் ட்ரெய்னரும் கூட. தனது மனைவியை நாள் முழுக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணத்தால் தான் பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டார் ராட்.

Image Courtesy

பல்வேறு கோளாறுகள்!

பல்வேறு கோளாறுகள்!

ராச்சல் ஃபரோக்-க்கு அனோரெக்ஸிக் மட்டுமின்றி, மாரடைப்பு, கல்லீரை செயலிழப்பு என பல கோளாறுகள் ஏற்பட துவங்கின. அவரது கணவர் இன்றி ஒரு அடி கூட நகர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் ராச்சல் ஃபரோக்.

Image Courtesy

மூளை செயற்பாடு!

மூளை செயற்பாடு!

உடல் எடை குறைய, குறைய தனது மூளையின் செயற்பாடும் தன் கட்டுப்பாட்டை மீறி குறைய சென்றது. தான் எண்ணுவதை விட மூளையின் செயற்பாடு குறைவாக இருப்பதாக, உணர்வதாக ராச்சல் ஃபரோக் கூறுகிறார்.

Image Courtesy

கலோரிகள்!

கலோரிகள்!

வெறுமென அதிக உணவு உட்கொள்வதால் மட்டுமே ராச்சல் ஃபரோக்-ன் உடல் எடை அதிகரித்துவிடாது. அப்படி முயற்சிப்பது அவரது உயிருக்கு தான் அபாயமானது என்கிறார் ராட்.

அப்படி அதிக கலோரிகள் எடுத்துக் கொண்டால் ராச்சல் ஃபரோக்-ன் வளர்சிதை மாற்றம் தான் தாக்கம் அடையும். அதுமட்டுமில்லாமல் மேலும் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

Image Courtesy

விழிப்புணர்வு!

விழிப்புணர்வு!

தனது வாழ்க்கை மற்றும் உடல்நிலை மற்ற அனோரெக்ஸிக் நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என தனது பேட்டிகளில் ராச்சல் ஃபரோக்கூறியிருக்கிறார்.

Image Courtesy

பொதுமக்கள் கொடை!

பொதுமக்கள் கொடை!

ராச்சல் ஃபரோக் - ராட் தம்பதிகள் இவர் மீண்டு வர பொதுமக்களிடம் நன்கொடை கேட்டு அணுகினர். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பெற்ற $200,000 டாலர்கள் கொண்டு, இவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராச்சல் ஃபரோக் அனோரெக்ஸிக் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார்.

Image Courtesy

காதலுடன் ராட்!

காதலுடன் ராட்!

மதிப்பே இல்லாத காரணத்தை காட்டியும், மோகத்தின் பேரிலும் இல்லறத்தை விட்டு விலகி, வேறு வாழ்க்கையில் இணையும் தம்பதிகளுக்கு மத்தியில் ராட் - ராச்சல் ஃபரோக் உன்னதமான காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Her Weight Only Dropped Not Her Husbands Love and Care

Her Weight Only Dropped Not Her Husbands Love and Care, a true love story of fantastic couple.
Desktop Bottom Promotion