For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதை நெருங்கும் போது பெண்கள் கணவனிடம் அதிகம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்!

|

முப்பது வயதை தாண்டிய பிறகு தான் இல்லறத்திலும், தனிப்பட்ட நபராக உங்கள் மனதிலும் ஓர் முதிர்ச்சி எட்டிப்பார்க்கும். உடல் சுகம், எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி, வேறு ஒரு உலகம் இருப்பதை நீங்கள் பார்த்து உணரும் தருணம் அது தான்.

இந்த முப்பதை தாண்டும் போது தான் பலருக்கும் தங்களது எல்லை கோடு எது, எவற்றை எல்லாம் நாம் எட்டிப்பிடிக்க வேண்டும், நமது நிலை உயர நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என எண்ணுவார்கள். ஆண்களை, காட்டிலும் பெண்களுக்கு இந்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க: வருங்கால கணவனிடம் பெண்கள் கேட்க தயங்கும் 13 கேள்விகள், இதற்கான உங்கள் பதில் என்ன?

காரணம், மனைவிகள் தங்கள் நிலை மட்டுமின்றி, கணவன் மற்றும் குடும்பத்தின் நிலையும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்பார்ப்பு #1

எதிர்பார்ப்பு #1

குழந்தைகள்! முப்பது வயதுக்குள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது, கண்டிப்பாக ஓர் அவப்பெயரை பெற்றுத்தரும்.

மேலும், முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஆரோக்கிய ரீதியாக சற்று கடினம்.

கரு முட்டையின் வலிமை மற்றும் ஆரோக்கியம் முப்பது வயதுக்கு மேல், மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு #2

எதிர்பார்ப்பு #2

கடன் தீர்வு! கடன் தொல்லை இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. முப்பது வயதுக்குள் கடன் தொல்லைகளை தீர்த்துவிடுங்கள்.

ஏன் எனில், குழந்தை பள்ளி செலவு என வர துவங்கிவிட்டால் கடன் சுமை அதிகரிக்குமே தவிர, குறையாது.

எதிர்பார்ப்பு #3

எதிர்பார்ப்பு #3

வீடு, வாசல்! நடுத்தர வாழ்க்கை நடத்தும் அனைவரின் கனவும் சொந்த வீட்டில் குடியேறுவது தான்.

முப்பதை தாண்டுவதற்குள் ஹவுசிங் லோன் போட்டாவது ஓர் வீடு வாங்கிவிட வேண்டும் என மனைவியர் எதிர்பார்ப்பார்கள்.

எதிர்பார்ப்பு #4

எதிர்பார்ப்பு #4

குடும்பத்திற்குள் ஓர் நல்ல பெயர், நாம் சொல்வதை பிறர் கேட்கும் அளவிற்கு ஓர் நிலை. தனக்கு இல்லை எனிலும், தன் கணவனுக்காவது இந்த நிலை இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.

எதிர்பார்ப்பு #5

எதிர்பார்ப்பு #5

மதிப்பு, மரியாதை! நாம் மேற்கூறிய அந்த நிலையை எட்டிவிட்டாலே இந்த மதிப்பும், மரியாதையும் தானாக வந்துவிடும்.

சில வீடுகளில் திருமணமாகி இருந்தாலும் கூட, திருமண அழைப்பிதழ் அவரது அப்பா, அம்மாவிற்கு மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

இதுப் போன்ற சின்ன, சின்ன விஷயங்களில் கூட மதிப்பு, மரியாதை இழப்பு நடந்துவிட கூடாது என பெண்கள் எதிர்பார்ப்பார்கள்.

எதிர்பார்ப்பு #6

எதிர்பார்ப்பு #6

நகை, ஆபரணங்கள்! தங்கத்தின் மீது ஈர்ப்பு இல்லாத பெண்கள் மிகவும் குறைவு தான்.

ஆயினும், குறைந்தபட்சம் ஒருசில ஆபரணங்கள் தனக்கென இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் விரும்புவார்கள்.

அதுவும் இல்லையெனில், மனதளவில் சில தருணங்களில் அவர்கள் மிகவும் வருந்தும் நிலை ஏற்படலாம்.

எதிர்பார்ப்பு #7

எதிர்பார்ப்பு #7

சேமிப்பு! வங்கியில் எதிர்பாராத செலவுகளுக்கு என ஓர் அளவு பணம் எப்போதுமே இருக்க வேண்டும். இது, இல்லாமல் போகும் போது தான் கடன் எனும் இல்லறத்தின் இன்பத்தை சீர்குலைக்கும் கருவி முளைக்க ஆரம்பிக்கும்.

எதிர்பார்ப்பு #8

எதிர்பார்ப்பு #8

வேலை மட்டுமே இன்றி, தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம். சாகும் வரை மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதும் கூட சிலருக்கு கசப்பாக தான் இருக்கும்.

லாப, நஷ்டங்கள் இருப்பினும் கூட சொந்த தொழில் செய்வதில் ஓர் ஈடிணையற்ற மகிழ்ச்சி இருக்கும். அது, சமுதாயத்தில் உங்களை தனி நிலையில் அமர்த்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girls Expectation From Their Partner When They Are Reaching 30s

Girls Expectation From Their Partner When They Are Reaching 30s
Desktop Bottom Promotion