உங்க மனைவியை மகிழ்விக்க இந்த 5 வழிகளை முயற்சி பண்ணியிருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற பரிசுகளையும் தாண்டி. நீங்கள் அவருடன் செலவழிக்கும் நேரம் தான் மனனவிகள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை இந்த தலைமுறையில் பல ஆண்கள் புரிந்துக் கொள்வதில்லை.

இந்நாட்களில் பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். இந்த புரிதல், ஒருவர் பற்றி ஒருவர் அறியாதிருப்பது போன்றவை உண்டாக காரணியாக இருப்பது சரியாக நேரம் ஒதுக்கி பேசாமல் இருப்பது தான். இதுப் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கவும், உங்கள் மனைவியை மகிழ்விக்கவும் உதவும் 5 வழிகள் பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேலையின் போது உதவுதல்

வேலையின் போது உதவுதல்

பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு துடைத்தல் என எந்த வேலையாக இருந்தாலும், சின்ன சின்ன உதவிகள் செய்துக் கொடுக்க மறக்க வேண்டாம். இந்த சின்ன வேலை உதவிகள் உங்கள் மனைவியை பெருமளவு மகிழ்ச்சியடைய உதவும் என்பதில் துளியும் சந்தேகம் தேவையில்லை.

வேலையின் போது உதவுதல்

வேலையின் போது உதவுதல்

மேலும், நீங்கள் இது போன்ற வேலைகள் செய்துக் கொடுப்பதை தம்பட்டம் அடித்து தோழிகளிடம் பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள் மனைவிகள். இந்த மகிழ்ச்சியை உங்கள் மனைவிக்கு நீங்கள் தந்தே ஆகவேண்டும்.

தேவையின் போது முன்னுரிமை

தேவையின் போது முன்னுரிமை

தேவையான போது மட்டும் முன்னுரிமை அளித்து, பிறகு அவர்களை பின் தள்ளி நிப்பாட்டுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய முதல் நபர் உங்கள் மனைவி.

பேரார்வதிற்கு உதவுங்கள்

பேரார்வதிற்கு உதவுங்கள்

உங்கள் தொழில், வேலை சார்ந்து மட்டுமில்லாமல், உங்கள் மனைவியின் வேலை சார்ந்தும் சற்று ஆர்வம் செலுத்துங்கள். வேலை ரீதியாக அவர் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என அறிவுரைக் கூறுங்கள்.

செய்கை பாசை

செய்கை பாசை

உங்கள் இருவருக்கு மத்தியிலான ஒரு செய்கை பாசையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்கை, சத்தம் போன்ற ஏதேனும் ஒன்று சுயமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வபோது இந்த முறையில் உரையாட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற சில விஷயங்கள் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சியடைய உதவும்.

நேரத்தை ஒதுக்குங்கள்

நேரத்தை ஒதுக்குங்கள்

முக்கியமாக நேரம் ஒதுக்குங்கள். வேலையே கதி என இருக்க வேண்டும். வீடும், இல்லறமும் கூட முக்கியம். இரண்டையும் இரு கண்களாக பாவியுங்கள். அப்போது தான் இல்லறமும் சிறக்கும், தாம்பத்தியமும் சிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Simple Ways To Love Your Wife Well

Five Simple Ways To Love Your Wife Well, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter