அது மட்டும் போதுமா, இந்த 5 வேண்டாமா? தம்பதிகள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

Posted By:
Subscribe to Boldsky

நிரந்தரமற்றவை மீது நிரந்தர மோகம் கொள்வது, நிரந்தரமான இன்பத்தை அளிக்காது என்பதை நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதே இல்லை. ஆம், காதலில், உறவில் ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ வெறும் வடிவும், முக அழகும் சார்ந்து ஈர்ப்பு கொள்ளலாம். ஆனால், அதையே கருவாய் கொண்டு இல்லறத்தில் இணைய நினைப்பது அடிமுட்டாள்தனம்.

Five Most Important Things A Man Expecting From His Wife

உங்கள் இல்வாழ்க்கை சிறக்க வேண்டும், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மை காண வேண்டும் எனில், வடிவத்தை தாண்டி, ஓர் கணவனாக உங்கள் மனைவியிடம் எதிர்பார்க்க வேண்டிய ஐந்து விஷயங்கள் இருக்கின்றன....

அடக்குமுறை இல்லாத அன்பு!

நான் சொல்வதை கேள், நான் சொல்வதை செய், நீயாக எதையும் முடிவெடுக்காதே, என் கட்டளைக்கு கட்டுப்படு என நாம் எனும் திருமண பந்தத்தில் நானாக திகழ்வது அன்பு செலுத்தும் கணவனாக இருப்பினும், அடக்குமுறை, ஆணாதிக்கம் நிறைந்த காரணத்தால் அன்பை அழித்து, இல்லறத்தை சீர்குலைந்து போக செய்யும். எனவே, அடக்குமுறை இல்லாத அன்பு செலுத்த வேண்டும். இது, இருபாலார் மத்தியிலும் பொருந்தும்.

Five Most Important Things A Man Expecting From His Wife

உறுதியான பிணைப்பு!

தான் நிலைகுலைந்து போன போதும், தோல்விகளில் துவண்ட போதும் உறுதி இழக்காத பிணைப்பும், அரவணைப்பும் காட்டும் ஓர் மனைவி இருந்தால், அந்த ஆண் உலகை என்ன பிரபஞ்சத்தையே வெல்ல முடியும். இந்த உறுதியான பிணைப்பு இருந்தால், எந்தவொரு கடினமாக சூழலையும் எளிமையாக கடந்து வந்துவிட முடியும்.

ஆசுவாசமான, இலகுவான நேரம்!

அலுவலகம், தொழில், களைப்பு என எதுவாக இருப்பினும், வீடு திரும்பினால் அவை அனைத்தையும் போக்க, அன்பை மலையாய் பொழிந்து, சோர்வை நீக்கும் துணை ஒருத்தி வேண்டும் என்பதே ஆண்களும் கனவு. இருளின் மடியில் கட்டி தவழ்வதை காட்டிலும், ஒளியின் வெளியில் கைகோர்த்து இருப்பதே பெரிய இன்பமாகும்.

Five Most Important Things A Man Expecting From His Wife

பிரிவை எண்ணாத பிரியம்!

உன்னோடு இருக்கும் போதோ, பிரிவோ, துக்கமோ, சோகமோ எந்த ஒரு எதிர்மறை எண்ணமும் என்னில், என் மனதில் எழாமல் இருக்கிறது என்ற எண்ணம் பிறக்கிறது எனில், அவளே உங்களுக்கான சிறந்த துணை. எக்காரணம் கொண்டும் அப்படிப்பட்ட துணையை இழந்துவிடாதீர்கள். வாய்ப்புகள் மட்டுமல்ல, நல்ல மனைவி அமைவதும் இன்றியமையாத வரம் தான்.

Five Most Important Things A Man Expecting From His Wife

கட்டுப்படுத்தாத தன்மை!

எந்த ஒரு சூழலிலும் ஒருவரை ஒருவர் ஆதிக்கத்தின் பெயரிலோ, அன்பின் முன்னிறுத்தியோ அவரவர் வழியை கட்டிப்படுதாமல் இருக்க வேண்டும். தீய செயல் எனில், தடுத்த நிறுத்தவும் உரிமை இருக்கிறது. ஆனால், சுயநலம் கருதி ஒருவரது வளர்ச்சியை துணையாக இருப்பினும் கட்டுப்படுத்த நினைப்பது தவறு தான்.

இந்த ஐந்தும் ஒருவரது வாழ்வில் நன்றாக அமைந்துவிட்டால். உங்கள் இல்லறத்தில் இரவு மட்டுமல்ல, பகலும் இனிமையாக கழியும்!

English summary

Five Most Important Things A Man Expecting From His Wife

Five Most Important Things A Man Expecting From His Wife , read here in tamil.
Story first published: Friday, June 17, 2016, 13:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter