For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியிடம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாத விஷயங்கள்!

|

திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என ஆண் பெண்ணிடம் வேறுபாடுகள் குறித்து ஒரு ஆய்வு செய்தால் பெண்கள் தான் பெருவாரியாக மாற்றங்களை சந்தித்திருப்பார்கள். படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என யாராக இருந்தாலும் இது சமநிலையில் தான் இருக்கிறது.

உடல்நலம் குன்றியிருக்கும் மனைவி கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன?

இதற்கு முக்கிய காரணம் பிறந்த வீடு, புகுந்த வீடு என பெண்கள் தான் பெரும் மாற்றத்தை காண்கிறார்கள். இது மட்டுமல்ல திருமணதிற்கு பிறகு கணவன் மற்றும் கணவனின் வீட்டார் அந்த பெண்ணின் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளும் கூட முக்கிய காரணம் எனலாம்.

காதலி உங்களுக்காக இந்த 7 விஷயங்களை செய்தால், உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்!

இந்த எதிர்பார்ப்புகள் எல்லை அல்லது அளவைக் கடந்து போகும் போது நிச்சயமாக உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குணாதிசயம்

குணாதிசயம்

திருமணத்திற்கு பிறகு ஒருவருக்காக மற்றொருவருடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். ஒருவர் போலவே மற்றொருவர் இருப்பதற்கு கண்ணாடியை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ளலாம், அதற்காக முற்றிலுமாக மாற்றியமைக்க நினைக்க வேண்டாம்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஷாப்பிங் செய்யாமல் பெண்களால் இருக்க முடியாது. சிலர் மால்களுக்கு செல்வர்கள், சிலர் கடைவீதிக்கு செல்வார்கள். இடங்களும், விலையும் மாறுபடுமே தவிர இந்த குணாதிசயம் மாறுபடாது.

ஷாப்பிங்

ஷாப்பிங்

பெரும்பாலான பெண்கள் அளவிற்கு அதிகமாக செலவு செய்வதில்லை என்பது தான் உண்மை. ஏனெனில், சேமிப்பில் ஆண்களை விட பெண்கள் பலே கில்லாடிகள் என்பதை கணவன்மார்கள் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

பிறந்த வீடு

பிறந்த வீடு

பிறந்த வீட்டுக்கு சென்று வருவதை குறைத்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பால இல்லறங்களில் சண்டைகள் துவங்குவதே இந்த காரணத்தினால் தான்.

பிடித்தமான காரியங்கள்

பிடித்தமான காரியங்கள்

மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு பிறது பொறுமை என்ற பெயரில் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பலவற்றை இழக்கின்றனர்.

பிடித்தமான காரியங்கள்

பிடித்தமான காரியங்கள்

36 வயதினிலே ஜோதிகா மாதிரி தான், பள்ளி கல்லூரி காலத்தில் பல திறமைகள் கொண்டிருந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு, வேலை, குடும்பம் என சுருங்கிவிடுகிறார்கள்.

தோழமை

தோழமை

பொதுவாகவே பெண்களின் தோழமை வாழ்க்கை மிக குறுகிய வட்டம். பள்ளியில் ஒரு தோழமை கூட்டம், கல்லூரியில் ஒரு தோழமை கூட்டம், வேலை இடம், இல்லறம் என இவர்களது தோழமை மாறிக் கொண்டே இருக்கும்.

தோழமை

தோழமை

பள்ளி முதல் திருமணம் முடிந்தும் அதே தோழமையுடன் தொடர்வது என்பது பெண்களின் வாழ்க்கையில் அதிசயம் தான். இந்த தலைமுறையில் தான் இது மாற்றம் அடைந்து வருகிறது.

தாம்பத்தியம்

தாம்பத்தியம்

தாம்பத்தியத்தில் சிலருக்கு ஈடுபாடு, ஆர்வம் அதிகமாக இருக்கும். சிலருக்கு இது குறைவாக தான் இருக்கும். விருப்பதை தெரிவிப்பது தவறல்ல, வற்புறுத்துவது தான் தவறு. அதிகமாக இதில் எதிர்பார்ப்பு கொள்வது உங்கள் மீதான நற்கருத்தை குலைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சுபக் காரிய நிகழ்வுகள்

சுபக் காரிய நிகழ்வுகள்

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகும் இந்த தருணத்தில், வேலைக்கு சென்று வந்த பிறகு வீட்டு விஷேசங்களையும் முழுமையாக, நேர்த்தியாக கோலாகலமாக கொண்டாட வேண்டும் என எண்ண வேண்டாம்.

சுபக் காரிய நிகழ்வுகள்

சுபக் காரிய நிகழ்வுகள்

பெரும்பாலான வீடுகளில் மனைவி அனைத்தையும் ஏற்பாடு செய்த பிறகு உறுப்பினர்கள் மொத்தமாக கொண்டாவிட்டு சென்றிவிடுவார்கள். நிகழ்வு முடிந்த பிறகும் அனைத்தையும் ஒழுங்கு செய்வதும் கூட பெண்கள் தலையில் தான் விழும். எனவே, ஒன்றாக சேர்ந்த எவ்வளவு செய்ய முடியுமோ செய்து, ஒன்றாக நிகழ்வுகளை கொண்டாடுங்கள்.

மாத்திக்கணும்

மாத்திக்கணும்

குழந்தை வளர்ப்பு, சமையல் வீட்டு வேலை என அனைத்தும் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை, எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது, அவர்களுக்கு இணையாக ஆண்களும் வீட்டு வேலைகளை செய்யக் கூடாதா என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dont Expect These Things A Lot From Your Partner

Dont Expect These Things A Lot From Your Partner, read here in tamil.
Desktop Bottom Promotion