For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் பார்னை சுய வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடாது? 7 காரணங்கள்!

பார்னை உங்கள் சுய வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொள்வது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளுள் ஒன்று. பார்ன் என்பது செயற்கையான ஒன்று, அதை இயற்கையான தாம்பதியத்தோடு ஒப்பிடுவது தீய விளைவுகளை உண்டாக்கும்.

|

இளம் வயது முதல் பார்ன் என்பது 90% மக்களின் வாழ்க்கையில் பங்குபெற ஆரம்பிக்கிறது. பார்ன் என்பது தவறல்ல. ஆனால், அதை நம் சொந்த வாழ்வோடு, தாம்பதியத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது தான் தவறு.

நமது வாழ்க்கையின் பல சமயங்களில் நாம் இதெல்லாம் பெரிய தவறா என எண்ணி செய்பவை தான், நமது வாழ்வில் நாம் செய்த பெரிய தவறாக நிலைக்கின்றன.

பார்னும் அப்படி தான், அதை ஒரு எல்லையை தாண்டி உங்கள் சுய வாழ்க்கையில் ஒப்பிடும் போது தேவையில்லாத பிரச்சனைகள், குளறுபடிகள், சங்கடங்களை உருவாக்கிவிடுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

பார்ன் என்பது எழுதி, இயக்கப்படும் ஒரு பதிவு. அதில் நீங்கள் காண்பது எல்லாமே நடிப்பு மற்றும் போலியான பாவனைகளும், செயல்களும் தான். அதனுடன் உங்கள் திறனையும், உங்கள் இல்வாழ்வையும் ஒப்பிடுவது முட்டாள்தனம்.

நீங்கள் பார்க்கும் அனைத்து பார்ன்களும் எடிட் செய்து தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்ன் என்பது செயற்கை, உங்கள் இல்வாழ்க்கை என்பது இயற்கை. எனவே, செயற்கையை இயற்கையுடன் ஒப்பிட வேண்டாம்.

காரணம் #2

காரணம் #2

பார்னை வெறும் பார்னாக மட்டும் பார்க்காமல், சுய வாழ்க்கையோடு ஒப்பிட்டால், ஒருக்கட்டதில் உங்களை நீங்களே கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு எடுத்து செல்லும். இதனால், இல்லறத்திலும், தாம்பத்தியத்திலும் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

காரணம் #3

காரணம் #3

சில வகை பார்ன்களில் தகாத உறவுகள் சார்ந்து இருப்பது, உங்கள் வாழ்க்கை மற்றும் எண்ணங்களில் தீய சிந்தனை அதிகரிக்க காரணமாக இருக்கும். எனவே, அதுப்போன்றவற்றை நீங்கள் துளியளவும் ஒப்பிடாமல், சிந்தனை சிதறாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சில பார்ன் இயக்குனர்கள், பார்வையாளர்களை சீண்டி பார்க்க வேண்டும், தூண்டி பார்க்க வேண்டும் என்பதற்காக இதுப் போன்ற தகாத உறவுகள் சார்ந்து இயக்குகின்றனர். இது, உங்கள் மனநிலையை சீர்குலைக்கும்.

காரணம் #4

காரணம் #4

பார்னில் நீங்கள் காணும் ஒருசில செக்ஸ் நிலைகள், உண்மையில் நீங்கள் செயற்படுத்தி பார்க்க உகந்தது அல்ல. அது உங்கள் துணையை மிகையாக துன்புறுத்தும் வகையில் அல்லது மிகுந்த வலியை தரவல்லதாக கூட இருக்கும்.

காரணம் #5

காரணம் #5

பார்ன் என்பது வேறு தாம்பத்தியம் என்பது வேறு. பார்ன் உடலை மட்டும் மேம்படுத்தி காட்டுவது. கணவன் - மனைவி உறவில் எழும் தாம்பத்தியம் மனதில் ஆரம்பித்து உடலில் சம்கமிப்பது. எனவே, பார்ன் போன்ற முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட முயல வேண்டாம்.

காரணம் #6

காரணம் #6

பார்ன் என்பது வேறு தாம்பத்தியம் என்பது வேறு. பார்ன் உடலை மட்டும் மேம்படுத்தி காட்டுவது. கணவன் - மனைவி உறவில் எழும் தாம்பத்தியம் மனதில் ஆரம்பித்து உடலில் சம்கமிப்பது. எனவே, பார்ன் போன்ற முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட முயல வேண்டாம்.

காரணம் #7

காரணம் #7

பலரும், பார்ன் கண்டுவிட்டு, அதை போல தங்களால் செயற்பட முடியவில்லை என மன அழுத்தமும், பதட்டமும் கொள்கின்றனர். உண்மையில், நாம் மேற் கூறியது போல பார்ன் எடிட் செய்து, ரீடேக் எடுத்து ஒரு படம் போல வெளியாகிறது. உங்கள் தாம்பத்திய வாழ்க்கை என்பது இப்படிப்பட்டது அல்ல.

எனவே, பார்ன் என்பதும் ஒருவிதமான செயற்கை படைப்பு தான் என்பதை உணர்ந்து, அதை உங்கள் சுய வாழ்க்கையில் ஒப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Don't Compare Porn with Real Life

Don't Compare Porn with Real Life, because our life isn't either scripted nor fake.
Desktop Bottom Promotion