For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மனைவிக்கிட்ட இந்த 12 குற்றங்குறைகள் நீங்கள் கண்டதுண்டா?

|

என்னதான் விட்டுகொடுத்து போனாலும், சில விஷயங்கள் நமது இதயத்தை அரித்துக்கொண்டிருக்கும். அளவிற்கு அதிகமான பாசம், நேசம், அன்பு, காதல் போன்றவற்றின் காரணமாக. நமக்கு பிடித்த நபரின் மீதான குற்றம் குறைகளை நாம் எப்போதுமே வெளிப்படுத்த மாட்டோம்.

ஆனால், ஒருக்கட்டதில் ஒன்றுமில்லாமல் இருந்த இந்த சிறிய விஷயம், பெரிய பூகம்பமாக வெடிக்கும். எனவே, ஊசி பட்டாசை அணுகுண்டாக மாற்றிவிடாதீர்கள். சின்ன சின்ன பிரச்சனை என்றாலும், அதற்கு உடனே தீர்வு கண்டுவிடுங்கள். பேசு தீர்த்துக் கொள்ளுங்கள்.

இனி, தாங்கள் அதிகமாக விரும்பும் தங்கள் மனைவி மீது கணவன்மார்கள் கூறும் சின்ன சின்ன குற்றங்குறைகள் பற்றி பாப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #1

படுக்கைக்கு செல்லலும் முன்னர் மனைவி என்னை கேலி செய்வது அசௌகரியமாக உணர்கிறேன். இது, தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கிறது என்று கருதுகிறேன்.

குற்றம் குறை #2

குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் மேன்மை குறித்து எங்கள் பேச்சு / கருத்தை விட மற்றவர்களது கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதை தான் வெறுக்கிறேன். என் மனைவி இதை அதிகமாக செய்கிறார்.

குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #3

நான் வீட்டு வேலைகள் செய்து, வீட்டை சுத்தம் செய்து வைக்கும் போது ஒருபோதும் என் மனைவி என்னை பாராட்டுவதில்லை. இதனால், பெரும்பாலும், நானும் வீட்டு வேலைகளில் உதவ முன்வருவதில்லை.

குற்றம் குறை #4

சில சமயங்களில் ஐ லவ் யூ சொல்லிய பிறகு, என் மீது குற்றம் குறை கண்டுபிடித்து கூறுவது, மாலையிட்டு செருப்பில் அடிப்பது போல இருக்கும் என ஒரு கணவர் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #5

நான் வருந்தும்படியான காரியங்களில் ஈடுபட்ட பிறகு, என் மனைவி ஒருபோதும் அதற்கான் வருத்தத்தை வெளிப்படுத்துவதில்லை. ஓர் மன்னிப்பு கூட கேட்பதில்லை. இது, எங்களை நாங்களே நொந்துக்கொள்ள செய்கிறது.

குற்றம் குறை #6

சில பல ஆயிரங்களை காபி ஷாப் செல்ல மட்டுமே என் மனைவி செலவிடுகிறார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என ஒரு கணவர் கூறியுள்ளார்.

குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #7

ஏதேனும் மொக்கையான காரியத்தை கூற அல்லது நினைவுபடுத்த அதிகாலை எங்களை எழுப்புவதை மனைவிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குற்றம் குறை #8

அலுவலகத்தில் இருக்கும் போது அளவிற்கு அதிகமாக குறுஞ்செய்தி மற்றும் கால் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால், அவர்கள் மீது வெறுப்பு, வேலை மீது கவன சிதறலும் தான் ஏற்படுகிறது.

குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #9

என் மனைவி மாதத்திற்கு ஒருமுறை தான் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒப்புதல் தெரிவிப்பார். நான் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், இது எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது.

குற்றம் குறை #10

ஏன், எதற்கு, எதனால் கோபமாக / கவலையாக இருக்கிறார்கள் என்பதை நேரடியாக கூறாமல், அமைதி காத்து, சுற்றிவளைத்து கூறுவது எங்கள் இரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்க செய்கிறது.

குற்றம் குறைகள்!

குற்றம் குறைகள்!

குற்றம் குறை #11

உண்மை மட்டும் பேசுங்கள் என்பார்கள். சரி என்று ஓர்நாள், "நீ ரொம்ப அழகா இருக்க.." என்று கூறினால். "பொய் சொல்லாதிங்க போங்க.." என்று சொல்லி சென்றுவிடுவார்கள். நாங்கள் என தான் செய்தவது.

குற்றம் குறைகள் #12

குழந்தைகள் பிறந்த பிறகு முற்றிலுமாக எங்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வதை தவிர்த்துவிடுகிறார்கள். எங்கள் மீதும் சிறிது நேரம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முற்றிலுமாக எங்கள் மீதான அரவணைப்பை ஒதுக்குவது எங்களை மனதளவில் பாதிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Complaints Men Are Keeping From Their Spouses

Complaints Men Are Keeping From Their Spouses, read here in tamil.
Desktop Bottom Promotion