ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை அமைய உதவும் சிறந்த 10 குணாதிசயங்கள்!!

Subscribe to Boldsky

திருமண வாழ்க்கை எனும் உறவு மகிழ்ச்சியாக அமைவதும், துன்பமாக அமைவதும் அவரவர் அந்தந்த சூழல்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. ஜாதகத்தில் பத்து பொருத்தம் என்பதை விட, இருவரது மனதும், குணாதிசயங்களும் சரியாக பொருத்தமாக இருக்க வேண்டும்.

ஒருவர் மீது அக்கறையாக இருத்தல், அவர்களுக்கான சுதந்திரம், உரிமை அளித்தல். அவரது மதிப்பிற்கு இடம் கொடுத்தல், உணர்வுக்கு மதிப்பு அளித்தல் என கணவன், மனைவி இருவரும் ஆரோக்கியமான குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

குணாதிசயம் #1

அவரவர் மகிழ்ச்சிக்கு யார் காரணம் என்று அறிதல். உங்கள் சந்தோசத்திற்கு யார் காரணம் என்று அறிந்தாலே போதுமானது உங்கள் உறவு வலுப்பெற ஆரம்பித்துவிடும். எல்லாம் என்னால் தான் என்ற எண்ணம் கண்டிப்பாக உறவை சிதைத்துவிடும்.

குணாதிசயம் #2

ஒத்தாசையாக இருப்பது மட்டுமின்றி. மற்றொருவருடைய பிரச்சனையை தீர்க்க உதவி புரிதல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த குணாதிசயம் உங்கள் உறவு பாலத்தை வலுவாக்க உதவும்.

குணாதிசயம் #3

உறவில் சமநிலை, நான் தான் பெரிது, நீதான் பெரிது என்றில்லாமல் உறவில் இருவர் மற்றும் இருவருக்கான இடம் கொடுத்தல், மதிப்பு, மரியாதை என அனைத்திலும் சமநிலை அளித்தல் மிகவும் அவசியமானது.

குணாதிசயம் #4

பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண முயற்சிக்க வேண்டுமே தவிர அதை தலைமேல் வைத்துக் கொண்டு நீ தான் இதற்கு காரணம், இவையெல்லாம் உன்னால் தான் என்று குற்றம் சாட்டக் கூடாது.

குணாதிசயம் #5

நேர்மையாக, வெளிப்படையாக உங்கள் உணர்வினை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். உங்கள் இருவருள் ஒளிவுமறைவு இன்றி இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

குணாதிசயம் #6

அக்கறையும் அரவணைப்பும் இல்லாத உறவு விரிசல் விழுந்த படகாக தான் பயணிக்கும். ஒருவர் மீது மற்றொருவர் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

குணாதிசயம் #7

எந்த ஒரு நிகழ்வு அல்லது செயலாக இருப்பினும் அதில் இருவரின் பங்கீடும் இருக்க வேண்டும். அப்போது தான் இருவரும் சம அளவு மகிழ்ச்சியை உணர முடியும். எல்லாமே உன்னால் தான், நான் எதுவுமே செய்யவில்லை என்பது ஆரம்பத்தில் இல்லை என்றாலும், இடையே மகிழ்ச்சியை சிதைக்க ஆரம்பித்துவிடும்.

குணாதிசயம் #8

புரிதல், நாம் செய்யும் அனைத்துமே சரியாக நடக்க வாய்ப்புகள் இல்லை எனும் போது தவறுகள் ஏற்படும். அதை ஒப்புக்கொள்ளும் புரிதலும், மனமும் வேண்டும்.

குணாதிசயம் #9

இருவருக்கும் மதிப்பு அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டிலும், ரோட்டிலும், நாட்டிலும் எங்கும் உங்களுக்கான மதிப்பு, உங்கள் துணைவிக்கும் கிடைக்க வேண்டும். மற்றவருடைய மதிப்பை எங்கும் குறைத்துவிட கூடாது.

குணாதிசயம் #10

எளிமையாக இருந்தாலே போதுமானது, வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் குணாதிசயம் இருக்கும் தம்பதி எப்போதுமே மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Characteristics of a Healthy Relationship

Ten Characteristics of a Healthy Relationship
Story first published: Thursday, November 19, 2015, 13:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter