For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு பிறகு பெண்கள் சில்லித்தனமாக பயப்படும் விஷயங்கள்!!

|

திருமணம் என்பது ஓர் புதிய வாழ்க்கையின் ஆரம்பம். உண்மையில் திருமணத்திற்கு பிறகு தான் நாம் உண்மையான வாழ்க்கை என்ன என்று தெரிந்துக் கொள்ள முடியும். பொதுவாகவே எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்பட கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!!

அந்த வகையில் திருமண வாழ்க்கையில் பயம் இருக்கவே கூடாது. ஆயினும் கூட திருமணம் ஆன புதிதில் பெண்களுக்கு சில சில்லித்தனமான பயம் எல்லாம் வரும். இது உடலுறவு சார்ந்தவை எல்லாம் இல்லை பொதுவானவை தான். இதற்காக எல்லாமா பயப்படுவது என்று இருக்கும். ஆனால், புது இடம், புதிய நபர்கள் என்பதால் இதுபோன்ற பயம் இருக்க தான் செய்யும்....

திருமணத்திற்குப் பின் எழும் ஏழு "எழரை"கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ருசியாக சமைப்பது

ருசியாக சமைப்பது

திருமணமான பிறகு பெரும்பாலான பெண்களுக்கு தொற்றிக் கொள்ளும் பயம் சமைப்பது தான். புதிதான ஓர் நபருக்கு நமது சமையல் பிடிக்குமா? சமாளித்து கொள்வாரா? பிடிக்காமல் போய்விடுமோ? என்ற பல கேள்விகள் அவர்களது மனதிற்குள் மூன்று நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தூக்கம்

தூக்கம்

பிறந்த வீட்டில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால், புகுந்த வீட்டில் 7 மணி என்பதை கூட தாமதம் என்று எண்ணி பலர் பயப்படுவது உண்டு.

துடுக்காக பேசுவது

துடுக்காக பேசுவது

நமது வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும் பட்டென்று பதில் கூறிவிட முடியும். ஆனால், புகுந்த வீட்டில் அப்படி கூறிவிட முடியாது. கணவர் வீட்டு ஆட்கள் தவறாக எண்ணுவார்களோ என்ற அச்சம் இருக்கும்.

கால்மேல் கால் போட்டு உட்காருவது

கால்மேல் கால் போட்டு உட்காருவது

இது பலருக்கும் இருக்கும் பயம். உட்காருவது, படுப்பது என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப செய்வது. சிலருக்கு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் தான் வசதியாக இருக்கும். ஆனால், இப்படி அமர்வது பெரியவர்களை அவமதிப்பது போன்று இருக்குமோ என்ற அச்சம் இருக்கும்.

உடை அலங்காரம்

உடை அலங்காரம்

திருமணம் ஆன புதிதில் பெரும்பாலும் புடவை, சுடிதார் மட்டுமே அணிவார்கள். ஏனெனில், முதல் நாளே ஜீன்ஸ், பேன்ட் போன்ற உடைகள் அணிவது சில வீடுகளில் விரும்பமாட்டார்கள். இதுவும் ஒருசிலருக்கு பயமாக தான் இருக்கும்.

சத்தமாய் சிரிப்பது

சத்தமாய் சிரிப்பது

ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சத்தமாய் சிரிக்க கூட முடியாது, திருமணமான புதிதில். சத்தமாய் சிரித்தால் யாரும் ஒன்னும் கூற போவதில்லை. ஆனாலும் கூட சிலருக்கு இது ஆரம்ப நாட்களில் பயமாக இருக்கும்.

வேலைக்கு செல்வது

வேலைக்கு செல்வது

வேலைக்கு சென்று வரும்போது, நேர தாமதம் ஆவது, வீட்டிற்கு வந்த பிறகு வீட்டு வேலை செய்யாமல் ஓய்வெடுப்பது போன்ற செயல்கள் எல்லாம் திருமணம் ஆன ஆரம்ப நாட்களில் பெண்களுக்கு கொஞ்சம் பயமாக தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Silly Things Women Get Afraid After Marriage

Do you know about the silly things women get afraid after marriage? Take a look.
Desktop Bottom Promotion