For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!

By Babu
|

திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை. சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும்.

அப்படி திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்.

மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும் எதிர்பார்ப்புக்கள், அதிகப்படியான அன்பு மற்றும் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களால் தான் வருகிறது. இங்கு கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான சில பொதுவான விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றில் நீங்கள் எதற்காக அன்றாடம் சண்டை போடுவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாமியார், நாத்தனார்

மாமியார், நாத்தனார்

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு முதன்மையான காரணம் மாமியார். இந்த மாமியார் பிரச்சனையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சந்திக்கின்றனர். இந்த காரணம் தான் பெரும்பாலான வீடுகளில் சண்டை வருவதற்கு முதன்மையாக உள்ளது.

போதிய நேரம் செலவழிக்காதது

போதிய நேரம் செலவழிக்காதது

திருமணமான தம்பதிகள் சண்டைகள் போடுவதற்கு மற்றொரு காரணம் தான் இது. இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நிறைய தம்பதிகளால் ஒருவருடன் ஒருவர் போதிய நேரத்தை செலவழிப்பதில்லை என்று சண்டைப் போடுகின்றனர்.

சுத்தமின்மை

சுத்தமின்மை

இன்றைய காலத்தில் நிறைய தம்பதிகளுக்கு சண்டை வருவதற்கு சுத்தமின்மையும் ஒரு காரணம். அதிலும் படுக்கையில் துணியை அப்படியே போடுவது, காலையில் எழுந்ததும் பயன்படுத்திய போர்வையை மடிக்காமல் அப்படியே போட்டுவிடுவது போன்றவற்றால் கூட சண்டைகள் வருகின்றன.

ரொமான்ஸ் இல்லாமை

ரொமான்ஸ் இல்லாமை

தம்பதியர்களுள் ஒருவர் ரொமான்ஸாக அருகில் வரும் போது, புரிந்து கொண்டு, ரொமான்ஸ் செய்யாமல், சோர்வாக உள்ளது என்று சொல்லி, அவர்களை புறக்கணிப்பதால், தற்போது பலருக்கு சண்டைகள் வருகின்றன.

அளவுக்கு அதிகமான அன்பு

அளவுக்கு அதிகமான அன்பு

அளவுக்கு அதிகமாக அன்பு அதிகரிக்கும் போது, துணை தம்மிடம் சிறிது கோபமாக நடந்து கொண்டாலும், அவரின் மீது கோபம் அதிகரித்து, புரிந்து கொள்ளும் திறன் குறைந்து சண்டைகள் வந்துவிடும்.

குழந்தைகளைப் பராமரிப்பது

குழந்தைகளைப் பராமரிப்பது

சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் சண்டைகள் வரும். அதில் பெரும்பாலான ஆண்கள் குழந்தைகளை கவனிப்பது பெண்களின் பொறுப்பு என்று

நினைக்கின்றனர். ஆனால் பெண்களோ, கணவன், மனைவி இருவருமே சரிசமமாக கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருக்க, தம்பதியர்களுக்குள் சண்டைகள் எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Reasons For Husband Wife Fights

Boldsky has come up with some of the most common reasons behind husband and wife fights. If you are facing disagreements with your spouse over these reasons, then it is time to sort it out and stop fighting with your partner.
Story first published: Wednesday, March 26, 2014, 15:01 [IST]
Desktop Bottom Promotion