For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு பின் இப்படி தூங்குங்க... என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க...

By Ashok CR
|

உங்கள் துணையுடன் நீங்கள் தூங்கும் முறையை மாற்றினால், உங்கள் திருமணத்தின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து தூங்குவது மிகவும் முக்கியமாகும். அதற்கு காரணம் தினமும் நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும் தானே; அத்தகைய ஓய்வு உங்கள் துணையின் அரவணைப்பில் பன்மடங்கு அதிகமாகவே கிடைக்கும்.

அதிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தூங்கும் முறை ஏதாவது ஒரு வகையில் உங்கள் திருமணத்தின் மீது தாக்கத்தை உண்டாக்கும். தம்பதிகள் இருவரும் மிகவும் நெருக்கத்தில் படுக்கும் நிலையை பின்பற்றினால் காதலின் பந்தத்தை உணர முடியும். அவனுடைய மார்பு அல்லது தோளில் படுப்பது, உங்கள் அன்பை உணரக் கூடிய மற்றொரு வழியாக விளங்கும்.

மனைவியிடம் எப்போதும் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்!!!

தூங்கும் அமைப்பு முறையை நெருக்கமில்லாத முறையாக மாற்றினால், உங்கள் உறவிற்கு இடையே ஒரு தடை உண்டாகும். இதனால் உங்கள் இருவருக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். அதுவும் தினமும் படுக்கையில் போர்வைக்கு அடியில் கிடைக்கும் வெப்பத்தை ஒவ்வொரு தம்பதிகளும் உணர வேண்டிய ஒரு விஷயமாகும்.

தாங்கள் தூங்கும் முறையை ஒவ்வொரு தம்பதிகளும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். தங்கள் திருமண வாழ்வில் இது பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமணமான தம்பதிகளுக்காக அப்படிப்பட்ட தூங்கும் நிலைகளை இன்று நாங்கள் விவரிக்க உள்ளோம். படித்து விட்டு பயனை பெறுங்கள்.

மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான 8 முக்கிய காரணங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாணமாக உறங்குதல்

நிர்வாணமாக உறங்குதல்

நிர்வாணமாக தூங்கினால் திருமண பந்தத்தில் நெருக்கமான உறவை மேம்படுத்தும். நிர்வாணமாக தூங்கும் போது, தம்பதிகளுக்கு இடையே அதிகமான வெப்பம் உண்டாகும். உங்கள் துணையுடன் உறவு வைத்துக் கொள்ள இது கண்டிப்பாக அவசியம் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் இருவரும் நெருக்கமாக இருப்பது அவர்களின் திருமண பந்தத்தை வலுப்படுத்த போதுமானதாக இருக்கும்.

எந்தளவுக்கு நெருக்கம் உள்ளதோ அந்தளவுக்கு நல்லது

எந்தளவுக்கு நெருக்கம் உள்ளதோ அந்தளவுக்கு நல்லது

தம்பதிகள் இருவரும் எந்தளவிற்கு நெருக்கமாக உறங்குகிறீர்களோ, உங்கள் திருமண வாழ்வு அந்தளவிற்கு சிறந்து செயல்படும். அதிலும் இந்த முறையில் உங்கள் துணையுடன் நீங்கள் தூங்கும் போது, நீங்கள் விரும்பும் உயிர் உங்கள் அருகிலேயே இருக்கும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.

நெருக்கமான தூக்கம்

நெருக்கமான தூக்கம்

எப்போதும் நெருக்கமான முறையில் தூங்கிடுங்கள். உங்கள் துணையுடன் சேர்ந்து இருக்க ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் கொஞ்சம் காதல் கலந்தோ அல்லது நெருக்கமான தூக்கத்தினாலோ அந்த 8 மணிநேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் பின்னிக் கொள்ளும் முறையை தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு பொக்கிஷமாக கருதப்படும் நிலையாகும். (மல்லாக்க படுத்திருக்கும் ஆணின் மீது பெண்ணின் தலை மற்றும் தோலை சாய்த்துக் கொண்டு தூங்குதல்)

நடு இரவு ஸ்பரிசத்தை மறக்காதீர்கள்

நடு இரவு ஸ்பரிசத்தை மறக்காதீர்கள்

உங்கள் துணை வேகமாக உறங்கினாலும் கூட, நடு இரவில் உங்கள் கணவன் அல்லது மனைவியை ஸ்பரிசிக்க மறக்காதீர்கள். இதனால் அவர் அல்லது அவள் உங்கள் ஸ்பரிசத்தை கண்டிப்பாக உணர்வார்கள். உங்களுக்கும் அது அளவில்லா ஆனந்தத்தையும் சுகத்தையும் அளிக்கும்.

கட்டித் தழுவுவது அவசியம்

கட்டித் தழுவுவது அவசியம்

உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமைய, தூங்கும் முறையை நீங்கள் மாற்ற முற்பட்டால், முதலில் கட்டித் தழுவுவதை தேர்ந்தெடுக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை கட்டிப்பிடித்தாலே போதும், தம்பதிகளுக்கு இடையே அதிகமான பேரார்வத்தை ஏற்படுத்தும். இப்படி செய்வதால் டென்ஷனும் மன அழுத்தமும் கூட நீங்கும்.

கால்களை பேச விடுங்கள்

கால்களை பேச விடுங்கள்

தூங்கும் போது கால்களை பிணைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையில் அதிக பாதுகாப்பு உணர்வு ஏற்படும். தூங்கும் போது இப்படிப்பட்ட காதல் முடிச்சு, திருமணமான பல தம்பதிகளுக்கு இடையே நெருக்கம், காதல் மற்றும் உடலுறவு நடவடிக்கைகளுடன் சேர்த்து காதல் சுதந்திர உணர்வையும் உண்டாக்கும்.

அதிகமான தலையணைகள்

அதிகமான தலையணைகள்

உங்கள் படுக்கையில் அதிகமான தலையணைகளை பயன்படுத்தினால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மிகவும் சொகுசான ஒரு சூழலை உருவாக்கும். நீங்கள் இந்த முறையில் தூங்கி பழக்கப்பட்டவர்கள் என்றால், சீக்கிரமே உங்கள் துணையும் இந்த பழக்கத்தில் ஐக்கியமாகி விடுவார்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleeping Positions & Its Effects On Marriage

Couples should check the ways they sleep as it can affect their marriage in a lot of different ways. Boldsky helps you with some of the best sleep patterns for married couples. So, make best use of it.
 
Desktop Bottom Promotion