For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கணவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை கண்டறிய சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

உங்கள் கணவரின் உணர்வுகள் உங்களை பாதிக்கின்றனவா? அவரின் மாற்றம், ரகசியம், தனிப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றின் மேல் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் இந்த பகுதியை படிக்க வேண்டும். இதனால் அவரது நடவடிக்கைகள் சரியானதா அல்லது நீங்கள் அவர் மேல் கர்வம் கொண்டு இப்படி நினைக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இதுப்போன்று வேறு: கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்...

சரி, இப்போது உங்கள் கணவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால் எந்த மாதிரியான செயல்களையெல்லாம் மேற்கொள்வார் என்று கீழே குறிப்பிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனியாக சென்று தொலைபேசியில் பேசுதல்

தனியாக சென்று தொலைபேசியில் பேசுதல்

ஏமாற்றும் கணவர்கள் பொதுவாக மனைவி முன் தொலைபேசியில் பேச மாட்டார்கள். அவ்வப்போது இதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எப்போது அழைப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் இதை செய்தால் ஏதோ தவறு நடக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இத்தகைய புதிய முறைகளை கையாளும் போது எச்சரிக்கையாக இருங்கள். அவரின் மேல் எப்போதும் ஒரு பார்வை வைப்பது நல்லது.

செல்போனில் வரும் குறுஞ்செய்திகளை அழித்து விடுதல்

செல்போனில் வரும் குறுஞ்செய்திகளை அழித்து விடுதல்

பொதுவாக போனில் உள்ள குறுஞ்செய்திகளை நிரம்ப நிரம்ப யாரும் அழிப்பது கிடையாது. அப்படி அழிக்க நினைத்தாலும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உங்கள் கணவர் அப்படி குறுஞ்செய்திகளை ஒவ்வnhரு முறை வரும் போதும் அனுப்பும் போதும் அழித்துக் கொண்டு இருந்தால் அது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை தவிர்த்தல்

பொது நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை தவிர்த்தல்

குடும்பத்திற்காக குறைந்த நேரத்தை ஒதுக்குவதும், முன்பு இருந்ததை விட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பழகாதிருத்தலும் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இருக்கும் போது தனியாக விலகி இருப்பதும் மற்றும் தினமும் கால தாமதமாக வருவதும் ஆகியவை சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடவடிக்கைகளாகும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது இணையதளத்தின் மூலமோ தொடர்பில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஒருவருடன் அதிக நேரம் செலவு செய்வது

ஒருவருடன் அதிக நேரம் செலவு செய்வது

எப்போதுமில்லாமல் திடீரென்று ஒரு தனிப்பட்ட நபருடன் அதிக நேரம் செலவு செய்கின்றாரா? அவர் எதிர் பாலினமா? ஜாக்கிரதை! நீங்கள் நிச்சயம் அவர்களின் உறவை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

காலையில் சென்றது போல் வீட்டிற்கு களைப்பின்றி வருவது

காலையில் சென்றது போல் வீட்டிற்கு களைப்பின்றி வருவது

வீட்டிற்கு வரும் போது வேறு வாசனை பொருளை போட்டுக் கொண்டு வருகின்றாரா அல்லது காலையில் சென்றது போல் வீட்டிற்கு புதிதாக களைப்பில்லாமல் வருகின்றாரா இதை எல்லாம் கவனிக்க வேண்டும். இதனால் அவர் மற்றவர்களுடன் நேரம் செலவு செய்வது தெளிவாக தெரிகின்றது.

அன்பு மற்றும் அக்கறை குறைந்து காணப்படுவது

அன்பு மற்றும் அக்கறை குறைந்து காணப்படுவது

கணவன் மனைவி இடையே உள்ள சிறிய சண்டை மற்றும் தீராத விவாதங்கள் ஆகியவற்றால் அன்பு தற்காலிகமாக குறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் திடீரென்று காரணம் இல்லாமல் விலகிச் செல்வதும் மற்றும் ஏதேனும் காரணம் சொல்லி விலகி இருப்பதும் அவர்களின் புதிய உறவு பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன.

திடீரென்று சரியாக பேசாமல் இருப்பது

திடீரென்று சரியாக பேசாமல் இருப்பது

முன்பெல்லாம் அவர் தன்னுடைய அலுவலகத்தில் என்ன நடந்தது என்று முழுமையாக விவரித்திருப்பார், ஆனால் அவர் இப்போது அது பற்றி உங்களிடம் ஒன்றும் கூறுவதில்லை. நீங்கள் திரும்பத் திரும்ப கேட்கும் போதும் சரியாக பதில் கொடுப்பதில்லை. இத்தகைய நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவைகளாகும்.

அதிக சண்டைகள்

அதிக சண்டைகள்

சிறிய தவறுகள் மற்றும் பேசிக் கொண்டு இருக்கும் போது சண்டைகள் வந்தாலும் பெரிய பூகம்பம் வெடித்தாலும் இது சராசரியாக நடக்காத காரியமாக இருந்தால் கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவரின் துணி காணாமல் போனால் கூட கவனிக்க வேண்டும்.

ரகசியங்கள்

ரகசியங்கள்

திடீரென்று அதிகம் தள்ளி இருப்பது, உங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் ஆகிய நாட்களில் வெளியே கூட்டிச் செல்லாமல் இருப்பது மற்றும் பரிசு வாங்கித் தராமல் இருப்பது மற்றும் அதிக விஷயங்களை மறைப்பது ஆகியவை அவரை பற்றி தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கின்றன. இதை கவனித்து திருத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Ways To Find That Your Husband Is Cheating On You

If you are feeling afraid about your husband unique behavior, new changes, his distance with you and secretive manner, Then read the below to know whether you are jealous or he is not up to the good indeed.
Desktop Bottom Promotion