For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

இந்த அறிகுறியெல்லாம் இருக்கா.. சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை 'லவ்' பண்றான்!

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

Important Tips for Couples on Facebook

போலி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம்

தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள். இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள். நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.

சில நண்பர்கள் தேவையில்லை

உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது. இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட வாய்ப்புகள் உண்டு. இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே. ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

இரகசியம் தேவையில்லை

ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான். நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு 'ஓகே' என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே கவனம் தேவை இக்கனம்!

உறவில் நிலையை மறைக்க வேண்டாம்

உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை. எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!

உங்களுடைய படங்களை பதிவேற்றம் செய்தல்

உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன். எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை. இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும் முடியும். எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் தள்ளி விடும். இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்.

உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்யுங்கள்

ஃபேஸ்புக்கில் உள்ள 'டைம்லைன்' பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார். இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும் காண முடியும். நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை.

English summary

Important Tips for Couples on Facebook

Couples are divorcing and separating because of some inappropriate relations that unintentionally begins on Facebook. If you are a happy pair and want to remain the same throughout, you must follow the tips which I am going to prescribe here.
Desktop Bottom Promotion