For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணம் என்பது சொத்துக்காகவா அல்லது காதலுக்காகவா...?

By Ashok CR
|

திருமணம் என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் சமயப்பற்றான உறவாகும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். தங்களை நேசிப்பதற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற்கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பதற்கும் ஒருவர் வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் சில பேர் அதனை லாபம் ஈட்டு தரும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர். அதனால் அவர்கள் அதிக சொத்து சுகம் உடைய ஆண்களையோ பெண்களையோ தான் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கின்றனர். கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் கூட அது தான் உண்மை. பணம் கறப்பதற்காகவே சில பேர் திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் வியாபார நோக்கோடு நடக்கும் திருமணங்களும் வெற்றிகரமாகவே முடிகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்காக திருமணமா அல்லது காதலுக்காக திருமணமா என்ற கேள்வி எப்போதும் உலா வந்து கொண்டே இருக்கிறது. காதல் என்பது வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியம் தான். ஆனால் அதற்காக பணத்தை ஒதுக்கிட முடியுமா? அதிகரித்து கொண்டே இருக்கும் இன்றைய பொருளாதாரத்தோடு போராடா ஒருவர் நடைமுறைக்கு ஒத்து வரும் படியும் யோசிக்க வேண்டும் அல்லவா? நம் வாழ்க்கையை நடத்திட வெறும் காதல் மட்டும் போதாது அல்லவா? நம்மிடம் சுத்தமாக பணம் இல்லாமல் நம்மை சுற்றில் ஒரே பிரச்சனைகளாக நிலவும் போது காதல் வந்து உதவி புரிந்திட முடியுமா என்ன?

Marrying For Wealth Or Love: Which Is More Important

காதலுக்காக திருமணம் செய்வதை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணங்கள் சிறந்ததாக விளங்குவதற்கு பல காரணங்களும் உதாரனங்களும் உள்ளது. பணத்துடைய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இப்போதெல்லாம் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். பணம் அல்லது காதலுக்காக திருமணம் செய்வதற்கு சில உறவுமுறை சார்ந்த டிப்ஸ் இருக்கிறது. அவைகளை கொஞ்சம் பார்க்கலாமா?

பாதுகாப்பு:

பணத்திற்காக திருமணமோ அல்லது காதலுக்காக திருமணமோ, இரண்டிலுமே வருங்காலத்திற்கான பாதுகாப்பு தேவை. இங்கே பாதுகாப்பு என்று நாம் சொல்வதை நிதி நிலைப்புத்தன்மையை. அதனால் அதிக சொத்துக்கள் வைத்து நல்ல நிதி நிலைப்புத்தன்மையுடன் விளங்குபவர்களை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். காதல் என்பது முக்கியம் தான், ஆனால் பாதுகாப்பு என்பதும் முக்கியம் தானே. உங்கள் வருங்காலம் நல்ல படியாக அமைய ஒரு உறுதி வேண்டாமா? அதற்காக தங்கத்தை கொள்ளையடிப்பவர்களை போல் நடக்காதீர்கள். உங்கள் வருங்காலம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டு திருமணம் செய்யுங்கள்.

வசதி வாய்ப்புகள்:

வசதி வாய்ப்புகள் என்று இங்கே நாங்கள் சொல்வது ஆடம்பர வாழ்க்கையை பற்றி அல்ல. திருமணத்திற்கு பின் அடிப்படை தேவைகளும் வசதிகளும் பூர்த்தியாக வேண்டாமா? வெறும் காதலுக்காக திருமணம் செய்தால் இந்த வசதிகள் எல்லாம் உங்கள் கிட்டி விடும் என்று சொல்ல முடியாதல்லவா? நீங்கள் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்களுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்த இந்த அடிப்படை வசதிகள் வேண்டும் தானே.

மன நிறைவு:

ஒரு உறவு நிலைத்திட காதல் என்பது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு குடும்பம் நிலைத்திட பணமும் சொத்து சுகமும் காதலை போலவே தேவைப்படுகிறது. சொத்து சுகமோ அல்லது காதலோ, இரண்டையுமே குறைவாக எடை போட முடியாது. ஒரு குடும்பத்திற்கு மனதுக்கு நிறைவான வாழ்க்கை வேண்டுமானால் அதற்கு பணம் தேவை. ஒரு பெண்ணுக்கு வேண்டியது எல்லாம் அவளின் குடும்ப பந்தம் நீண்ட ஆயுளோடு விளங்கி அவளின் தேவைகள் பூர்த்தியாவதே. இதுவே ஒரு ஆண் என்றால், அவன் குடும்பத்தை அன்பாக கவனித்துக் கொள்ளவும் அவனை திருப்தியாக வைத்துக் கொள்ளும் ஒரு மனைவியை எதிர்பார்க்கின்றான். பணம் அல்லது காதலை அடிப்படையாக கொண்டதோ; எதுவாக இருந்தாலும் அந்த திருமண பந்தத்தில் மன நிறைவு கிடைக்க வேண்டும். காதலை விட பணத்திற்காக திருமணம் செய்தவர்களுக்கு தான் அதிக மன நிறைவு கிடைக்கிறதாம்.

குடும்ப பந்தம்:

பழங்காலத்தில் இருந்து நம் சமுதாயத்தில் பெரியோர்களால் நடத்தப்படும் திருமணங்கள் சொத்து சுகத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. தங்களுக்கு நிகரான சாதி, சமுதாயம், ஆஸ்தி மற்றும் அந்தஸ்தை கொண்ட குடும்பத்தில் தான் சம்பந்தம் செய்து கொள்கின்றனர். பணத்திற்காக திருமணம் என்பது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியது அல்ல; நம் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் அந்த அடிப்படையில் தானே திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு பின் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. தங்கள் சாதி சனத்திலிருந்து தங்களுக்கு நிகரான அந்தஸ்தை உடைய சம்பந்தத்தை பெறவே பணத்தை அடிப்படையாக கொண்ட திருமணங்கள் நடை பெறுகின்றன. சமுதாய கோட்பாடுகளை சில நேரம் காதல் திருமணங்கள் உடைத்தெறியும்.

நீடித்து நிலைத்திட:

காதலுக்காக செய்யப்படும் திருமணங்களை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணம் தான் அதிக நாட்களுக்கு நீடித்து நிற்கும்; கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அது தான் உண்மை. அதற்கு காரணம் உங்களின் காதலும் ஈர்ப்பும் காலப்போக்கில் மறைந்து விடும். தினசரி பிரச்சனைகள், குடும்ப தேவைகள் மற்றும் வேலை பளு ஆகியவைகள் உங்கள் காதலை தேயச் செய்யும். இதனால் அடிக்கடி சண்டையும் சச்சரவும் உண்டாகும். பணத்திற்காக செய்யப்படும் திருமணத்திலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அழுவதென்று வந்து விட்ட போது ஒரு பி.எம்.டபிள்யூ காரில் உட்கார்ந்து அழலாமே; எதற்கு சைக்கிளில் உட்கார்ந்து அழ வேண்டும்?

English summary

Marrying For Wealth Or Love: Which Is More Important

There are many reasons and examples to show that marrying for money is better than marrying for love. People have become practical and understand the growing value and importance of money. The following are some relationship tips for marrying for wealth or love:
Story first published: Friday, December 20, 2013, 16:55 [IST]
Desktop Bottom Promotion