For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக பொஸசிவ் குணமுடைய கணவனைக் கையாள சில டிப்ஸ்...

By Ashok CR
|

தனக்கே சொந்தம் என்ற எண்ணமுடைய, பொஸசிவ் குணமுடைய கணவனை நீங்கள் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அவரை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையே. பொதுவாக கணவன் மனைவி இடையே பொஸசிவ் குணம் நிலவுவது சகஜமே. ஆனால் அந்த உணர்வே அதிகமாக இருந்தால் அது அவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு பெரிய சுமையை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த உறவுக்குள் விரிசலை உண்டாக்கிவிடும். இவ்வகை சூழ்நிலைகள் வரும் போது அதை கையாளுவது கடினமாக மாறிவிடும். அதற்கு காரணம் எதிர்ப்பு நடவடிக்கை நாளடைவில் மன நோயாக மாறிவிடும். அதன் பின் அதை கட்டுப்படுத்துவது என்பது கையை மீறி போய்விடும். அதனால் ஆரம்ப நிலையிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட கூடாது.

ஆழமான காதல் அல்லது தன் கணவன் அல்லது மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் போன்றவைகள் தான் அளவுக்கு அதிகமான பொஸசிவ் குணத்திற்கு காரணமாக விளங்குகிறது. சில நேரம் இந்த குணம் அந்த நபரின் இயற்கை குணமாக கூட இருக்கலாம். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது சிரமம் தான். அதற்கு காரணம் தான் அப்படி இருக்கிறோம் என்பதை அவர் உணர்வதில்லை. அவர் உங்களை பாதுகாக்கிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார். அதனால் அவரை கையாள போதுமான முயற்சியும் பொறுமையும் தேவைப்படும்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள தொழில் ரீதியான திருமண ஆலோசனையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை சமாளிக்க விவாகரத்தை நாடலாம். விவாகரத்து என்பது நொடிப்பொழுதில் நடந்தேறி விடும். ஆனால் அது அவ்வளவு எளிதில் எடுக்க கூடிய தேர்வாக இருக்காது. அதற்கு காரணம் ஒரு உறவை வளர்க்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாதல்லவா? உங்கள் கணவனின் நிலையை சரியாக கையாண்டால் நல்ல பயனை பெறலாம். அதற்காக திறம்பட செயலாற்றும் சில டிப்ஸ்கள் இருக்கிறது. அவைகளை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவை தெரிந்து கொள்ளுங்கள்

அளவை தெரிந்து கொள்ளுங்கள்

உங்களால் எவ்வளவு தூரம் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற அளவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருமே ஒரு அளவுக்கு பொஸசிவாக இருக்கத் தான் செய்வார்கள். நீங்கள் உங்கள் கணவனுடைய பொஸசிவ் குணத்தை ரசித்தீர்களானால் உங்கள் இருவருக்குமான காதல் வலுவாக உள்ளது என்று அர்த்தமாகும். அவருடைய பொஸசிவ் குணம் நடுத்தரமானதாக இருந்தால் அதனை பொறுத்துக் கொள்ளலாம்.

வெளிப்படுத்துங்கள்

வெளிப்படுத்துங்கள்

அவருடைய பொஸசிவ் குணத்தால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள். இந்த உரையாடலை ஆரம்ப நிலையிலேயே ஏற்படுத்துங்கள். அதனால் நிலைமை கையை விட்டு போவதற்கு முன் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பொஸசிவான கணவனை சமாளிக்க மனம் விட்டு பேசுவது ஒரு சிறந்த வழியாகும்.

கவுன்சிலிங் செல்லுங்கள்

கவுன்சிலிங் செல்லுங்கள்

உங்கள் கணவன் இவ்வளவு சுயநலமாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய தொழில் ரீதியான கவுன்சிலிங் செல்வது முக்கியமாக கருதப்படுகிறது. முன்னாட்களிலோ அல்லது இந்நாளில் நிகழ்ந்த ஏதாவது மோசமான அனுபவத்தால் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம். தொழில் ரீதியான முறையில் இதை கையாண்டால் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

உரிமையை கோருதல்

உரிமையை கோருதல்

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள உங்கள் சுதந்திரத்துக்காக அவரிடம் நீங்கள் கலந்துரையாடுங்கள். உங்கள் கணவரின் பொஸசிவ் குணத்தை பற்றி அவரிடம் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை அமைதியான மனநிலையில் அவரிடம் வெளிப்படுத்துங்கள்.

வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்

வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள்

உங்கள் உறவில் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கணவனிடம் வெளிப்படையாக பேசி விட வேண்டும். திருமணமான அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை இது. இது உங்கள் உறவில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து விடும். பொஸசிவ் குணமுடைய உங்கள் கணவனையும் சுலபமாக கையாளலாம்.

உரையாடல்களை மேம்படுத்துங்கள்

உரையாடல்களை மேம்படுத்துங்கள்

எந்த ஒரு நல்ல உறவுக்கும் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அறிவுரை உண்டு - உங்கள் துணையிடம் மனம் விட்டு நன்றாக பேசுங்கள். சரிவர பேசினாலே பல சந்தேகங்களும் பாதுகாப்பின்மை உணர்வுகளும் விலகி விடும்.

பாராட்டுங்கள்

பாராட்டுங்கள்

உங்கள் கணவன் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் பாராட்டுங்கள். இது அவருடைய பாதுகாப்பின்மை உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் குறைக்கும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

அதிகமாக பொஸசிவ் குணமுடைய கணவனை சமாளிப்பதற்குள் உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடலாம். ஆனால் மனம் தளராமல், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி அவரிடம் அமைதியாக பேசுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். சூடான வாக்குவாதங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். அமைதியாக இருந்து அன்பான முறையில் அவருக்கு புரிய வையுங்கள்.

கால அவகாசம் கொடுங்கள்

கால அவகாசம் கொடுங்கள்

எல்லா காயங்களும் காலப்போக்கில் ஆறும். அதனால் உங்கள் உறவு உறுதியாக கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இதனால் உங்கள் கணவனுக்கு யோசிக்க நேரம் கிடைக்கும். அதனால் உங்கள் உறவு மேம்பட அவர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழியே.

ஊக்குவிக்கவும்

ஊக்குவிக்கவும்

எப்போதும் சிரித்த முகத்துடன் கணவனை ஊக்குவிக்க வேண்டும் - இது திருமணமான அனைத்து பெண்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான அறிவுரையாகும். மறப்பதும் மன்னிப்பதும் மன ரீதியாக ஒரு சிறந்த ஆற்றலாகும். உங்கள் உறவு நீண்ட காலம் நீடித்து உறுதியாக இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dealing With A Possessive Husband

For dealing possessive husband, most often professional marriage advice will be needed for women. Breaking up is comparatively less time consuming and seemingly an easy choice. But, building a relation is a time consuming effort. Here are some effective tips that you may try.
Story first published: Friday, December 13, 2013, 20:23 [IST]
Desktop Bottom Promotion