உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்!

இங்கு உண்மையாக காதலிக்கும் ஆண்கள் உடலுறவுக்கு பின் செய்யும் சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Posted By:
Subscribe to Boldsky

பெண்களுக்கு எப்போதுமே தனக்குரியவன் தன் மீது உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார்களா, உயிருக்கும் மேலாக காதலிக்கிறார்களா என்பதை கேள்விகளின் மூலமும், ஆண்களின் சில நடவடிக்கைகளின் மூலமும் தெரிந்து கொள்வார்கள்.

அதில் ஒரு ஆண் தன் காதலி/மனைவியின் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால், உடலுறவுக்கு பின் ஒருசில செயல்களைச் செய்வார்களாம். இங்கு உண்மையாக காதலிக்கும் ஆண்கள் உடலுறவுக்கு பின் செய்யும் சில செயல்களாக பெண்கள் கூறுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்தம்

முத்தம்

உடலுறவில் ஈடுபட்டு அசதியில் தூங்கி விழித்ததும், ஒரு ஆண் தன் துணையிடம் முத்த மழையைப் பொழிந்தால், அந்த ஆண் தன் துணையை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான் என்று அர்த்தமாம்.

புத்துணர்ச்சி அடைய உதவுதல்

புத்துணர்ச்சி அடைய உதவுதல்

காதல் என்பது வெறும் படுக்கையுடன் முடிவதில்லை. அதையும் மீறி தன் துணையின் மீது காட்டும் அக்கறையில் அதிகம் உள்ளது. எனவே உறவுக்கு பின் புத்துணர்ச்சி அடைய, உங்களுக்கு உதவி செய்தால், அதுவும் ஓர் ஆணின் உண்மையான காதலை வெளிக்காட்டும் செயலாகுமாம்.

உரையாடல்கள்

உரையாடல்கள்

படுக்கை விளையாட்டுக்குப் பின், தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், அது அந்த ஆணின் போலியான அன்பை வெளிக்காட்டுமாம். உடலுறவுக்கு பின், துணையுடன் தன் மனதை விட்டு பேசும் ஆண்களே உண்மையான காதல் கொண்டவர்களாம்.

வர்ணனை/பாராட்டு

வர்ணனை/பாராட்டு

பொதுவாக பெண்களுக்கு ஆசையாக நான்கு வார்த்தைகள் அவர்களை பாராட்டுவது அல்லது வர்ணிப்பது போன்று பேசினால், அதுவே அவர்களை மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். அதிலும் உடலுறவுக்கு பின், பாராட்டியோ அல்லது வர்ணித்தோ பேசினால், காதலன்/கணவன் தீவிரமாக காதலிக்கிறார் என்று அர்த்தமாம்.

நோக்குதல்

நோக்குதல்

உறவு கொண்ட பின், ஓர் ஆண் தன் துணையை நீண்ட நேரம் காதல் பார்வையுடன் ரசித்தவாறு இருந்தால், அதுவும் அந்த ஆணின் உண்மையான அன்பின் அடையாளமாகுமாம்.

கட்டி அணைத்தல்

கட்டி அணைத்தல்

முக்கியமாக உடலுறவுக்கு பின்னும், தன் துணையை விடாமல், தன்னை கட்டிப் பிடித்து தூங்க வைப்பதும், அந்த ஆணின் உண்மையான காதலைக் குறிக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If Your Man Does These Things After Intercourse The Love Is Real

If your man does these things after sex the love is real. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter