ஆணுறை பெண்ணுறுப்பினுள் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ ஆலோசனை!

சில சமயங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, ஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிகொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த சமயத்தில் தம்பதிகள் என்ன செய்ய வேண்டியவை / கூடாதவை.

Subscribe to Boldsky

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது சில எசக்குபிசக்கான காரியங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. வியட்நாம் தம்பதிகள் பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்த முயன்று, பிறப்புறுப்பில் ஏடாகூடமாக காயங்கள் உண்டாகின, ஒரு 50 வயது மிக்க நபர் வாட்டர் பாட்டிலுடன் உடலுறவுக் கொள்ள முயன்று ஆணுறுப்பையே இழந்தார்.

What To Do When A Condom Gets Stuck Inside Her?

இவை அசாதாரணமானவை. ஆனால், ஆணுறை என்பது அனைவரும் பயன்படுத்துவது தான். இது பெண்ணுறுப்பில் தவறுதலாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும், அந்த சமயத்தில் நீங்கள் எப்படி செயற்பட வேண்டும்? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எப்படி நடக்கும்?

விந்து வெளியேறிய பிறகு, ஆணுறுப்பு விறைப்பு தன்மை இழக்கும் போது ஆணுறை தவறுதாலாக பெண்ணுறுப்புக்குள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

எப்படி தவிர்ப்பது?

இவ்வாறு சம்பாவிதமாக ஏதும் ஏற்படாமல் இருக்க நீங்கள் விந்து வெளியேறியவுடன் / விறைப்பு நீங்கியவுடன் ஆணுறையை கழற்றிவிடுவது நல்லது. இது ஆணுறை மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்க உதவும்.

எப்படி அகற்றுவது?

ஒருவேளை தவறுதலாக ஆணுறை பெண்ணுறுப்பினுள் மாட்டிக் கொண்டால், ஆணுறையின் நுனி வெளியே தெரியும்படி இருந்தால், உங்கள் துணையே அதை காயம் ஏதும் ஏற்படாதவாறு அகற்ற கூறலாம்.

தட்டுப்படவில்லை எனில்?

ஒருவேளை ஆணுறை தட்டுப்படவில்லை எனில், உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று அகற்ற கூறலாம். மகப்பேறு மருத்துவர்களிடம் இதை எளிதாக அகற்ற எளிதான கருவிகள் இருக்கும்.

இதன் விளைவுகள் என்ன?

ஒருவேளை சிறுதுண்டு ஆணுறை பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டால், பெண்களுக்கு அவ்விடத்தில் எரிச்சல் மற்றும் இன்பெக்ஷன் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இது பின்னாட்களில் தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.

கருத்தரிப்பு?

ஒருவேளை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்ட ஆணுறையில் விந்தணு இருந்தால், அதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், இது மிகவும் குறைவான சதவிதம் தான் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Do When A Condom Gets Stuck Inside Her?

What To Do When A Condom Gets Stuck Inside Her?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter