விராத் கோலி அனுஷ்கா ஷர்மா காதல் பிரிவுக்கு இது தான் காரணமா?

Subscribe to Boldsky

காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. அனைவரும் அவரவர் நண்பர்களிடமும், முன் அனுபவம் உள்ளவர்களிடம் தனித்துவமாக பரிசு கொடுத்து எப்படி காதலை வெளிப்படுத்துவது என முனைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகள் இடையே உண்டான காதல் முறிவுகள்!!

நம் நட்பு வட்டாரத்தில் ஒருவர் காதலித்தாலே அதை சேர்த்து வைக்க அனைவரும் நிறைய உதவுவார்கள். அவர்களது காதல் சேர வேண்டும் என எதிர்பார்பார்கள். இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரும் இப்படி எதிர்பார்த்த ஜோடி விராத் - அனுஷ்கா.

அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!

உலகம் மட்டுமல்ல, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து இடங்களிளும் இவர்களது கால்களை ஒன்றாக பதித்தனர். எப்போது திருமணம் என்ற செய்திக்காக காத்திருந்த தருணத்தில் இவர்கள் பிரிந்தது, இவர்களை காட்டிலும் இவர்களது ரசிகர்களுக்கு தான் சோகம்.

ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!

இவர்களது காதல் பிரிவிற்கு தெரிந்தோ, தெரியாமலோ பொதுவான சில காரணங்களும் அமைந்துவிட்டன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புகழ்

இவர்களது காதல் பிரிவிற்கு இவர்களது புகழும் கூட ஓர் காரணம் தான். இருவருமே அவரவர் துறையில் முதன்மை தரத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருவருக்காக மற்றொருவர் ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால், இவர்களது இரண்டு துறையிலும் அது வாய்ப்பில்லை.

ஊடகம்

ஊடகம் எனும் சமூதாய கண்ணாடியும் கூட இவர்களது காதல் முறிவிற்கு ஓர் முக்கிய காரணம். இந்த கண்ணாடியில் சமூகத்தின் பிரதிபலிப்பை காட்டிலும், பிரபலங்கள் தான் அதிகமாக பிரதிபலிக்கிறார்கள். இதனால், இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும் கூட பொது மக்கள் பார்வைக்கு வந்துவிடுகிறது.

ரசிகர்கள்

மாற்றி, மாற்றி இருவரது முக்கிய தருணத்திலும் யாரேனும் சொதப்பினால் காதல் தான் காரணம் என்ற பொதுச்சொல் பரவியதும் கூட இவர்களுக்குள் காதல் உறவில் அலுப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

பழிச்சொல்

விராத் கோலி பேட்டிங்கில் சொதப்பினாலும் அவர் தான் காரணம், இல்லையேல் அனுஷ்கா மைதானத்தில் இல்லை அதனால் தான் விராத் சரியாக விளையாடவில்லை என மாற்றி, மாற்றி ஒருவர் மீது பழிச்சொல் சுமத்துவதும் கூட அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

தொழில் முனைப்பு

மற்ற காதலர்களை போல நினைக்கும் போதெல்லாம் பார்ப்பது சற்று கடினம். படப்பிடிப்பு, முக்கியமான போட்டி என இருவருக்கும் நேரம் சரியாக ஒத்துவராமல் போகலாம்.

கருத்து வேறுபாடு

திருமணம் என்ற பேச்சு வரும் போது நிச்சயமாக சினிமாவை விட்டு வெளிவர வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் அமைந்திருக்கலாம், அது இப்போதைக்கு வேண்டாம் என தவிர்த்திருக்கலாம் இது போன்று இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக பல தடைகள் அமைந்தன.

காதல் முறிவு

வட இந்திய ஊடகங்களில், விராத் இப்போதே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அனுஷ்காவிடம் கேட்டுக் கொண்டார் என்றும், ஆனால், அனுஷ்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை அதனால் தான் இருவரும் பிரிந்துவிட்டனர் என்றும் கூறுகிறார்கள்.

தாடியின் காரணம்

விராத் கோலி குடும்ப வழக்கத்தின் படி, திருமணத்தின் போது மாப்பிள்ளை தாடி வளர்க்க வேண்டும். அதற்காக தான் விராத் சமீப காலமாக தாடி வளர்த்தார் என்றும். அனுஷ்கா ஒப்புக் கொள்ளாததால், காதல் முறிவு ஏற்பட்டு இப்போது அந்த தாடியை எடுத்துவிட்டார் என்றும் கூற ஒரு செய்தி பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Virat Kohli Anushka Sharma Break-Up

These things may be the reasons behind Virat Kohli Anushka Sharma's Break-Up, take a look.
Story first published: Friday, February 12, 2016, 15:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter