தவறியும் காதலில் இந்த 6 தவறுகளை செய்துவிட வேண்டாம்...

Subscribe to Boldsky

காதல் முறிவு ஏற்பட பெற்றோர்கள் மட்டுமே காரணமில்லை. பல சமயங்களில் காதலர்களே அவர்களுக்குள் காதல் முறிவிற்கு காரணம் ஆகிவிடுகிறார்கள். சரியான புரிதல் இல்லாமல் இருப்பது, வேலையே கதி என காலத்தை கடத்துவது, அதிகமாக காதலை எதிர்பார்த்து தானாக சோகமடைவது என நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், சில சமயங்களில் தங்கள் காதலில் பிரிவு ஏற்பட்டதற்கு எது உண்மையான காரணம் என்று தெரியாமலேயே காதலர்கள் பிரிந்துவிடுவது தான் கொடுமையே. கடைசி சந்திப்பில் திட்டியது, சண்டை ஏற்பட்டது எல்லாம் தற்செயலாக நடப்பவை.

ஆனால்,அந்த கோபம் வெளிவர கருவாக அமைவது நீங்கள் நாள்பட செய்து வந்த வேறு சில தவறுகளாக இறுகக் கூடும். அந்த வகையில் உங்கள் காதல் பிரிவிற்கு உங்களுக்கே தெரியாமல் நீங்கள் காரணமாய் அமைய வழிவகுக்கும் சிலவன பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அனுதாபம்

மெய் காதல் உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும், துன்பத்தை பாதியை குறைக்கும் என்பார்கள். இந்த இடத்தில் நீங்கள் வருத்தம் கொண்டிருந்தால் அவர்களாகவே அதை தானாக அறிந்து முன்வந்து அதை போக்க முயற்சிப்பார்கள். சிலர் எப்போதுமே அனுதாபம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அனுதாபம்

அதற்காக நிறையவே சோகமாக காட்டிக் கொள்வார்கள். இது அதிகமாகும் போது உறவில் எதிர்வினை மாற்றங்கள் ஏற்பட கருவியாக அமைகிறது. எனவே, இதை தவிர்த்துவிடுங்கள். ஒருவேளை உங்கள் வருத்தத்தை உங்கள் துணையால் கண்டறிய முடியவில்லை எனில், உங்கள் மீதான அவரது ஈர்ப்பு குறைந்துவிட்டது என்று அர்த்தம்.

இருவர் மீதான ஈர்ப்பு குறைவது

நீங்கள் பேசும் நேரத்தை குறைப்பதை விட, உங்கள் இருவரை பற்றி பேசும் நேரம் குறையும் போது தான் உங்கள் உறவில் ஈர்ப்பு குறைந்து வருகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும். எனவே, உங்கள் இருவர் மீதான அக்கறையும், அரவணைப்பும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உதவிட மறுத்தல்

பெண்கள் எப்போதும் உதவி எனும் போது முதலில் தந்தை, சகோதரன், காதலன் போன்றவரிடம் வந்து நிற்பாள். காதலன் எனும் போது உரிமை அதிகமாக இருக்கும்.

உதவிட மறுத்தல்

அந்த நேரத்தில் நீங்கள் வேறு வேலை அல்லது அவர்கள் கூறுவதை தட்டிக் கழித்தல் போன்றவை உறவில் விரிசல் வர காரணமாகிவிடுகிறது. குறைந்தபட்சம் காது கொடுத்து கேட்கவாவது வேண்டும்.

புதிய நபர்களின் வருகை

இன்றைய தலைமுறையில் காதல் உறவில் விரிசல் வர முக்கிய காரணமாக இருப்பது புதிய நபர்களின் வருகை தான். எப்போதுமே நீங்கள் தான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வதிலும், உதவுவதிலும் முதல் ஆளாக இருக்க வேண்டும்.

புதிய நபர்களின் வருகை

இந்த வகையில் புதியதாக வேறு நபர் வந்து முன்னே நிற்கையில் உறவில் விரிசல் விழுந்து பிரிவு ஏற்பட்டு விடுகிறது. பிரேக்-அப் என்பது பைக்கில் போடும் பிரேக்கை போல அதிகரித்து வர காரணம் இது தான்.

வெளி இடங்களுக்கு

பெண்கள் பல இடங்களுக்கு தங்களுக்கு பிடித்த நபருடன் சென்று வர விரும்புவது பிறவி இயல்பு. முடிந்த வரை உள்ளூர்களில் இருக்கும் இடங்களுக்காவது அவ்வப்போது சென்று வாருங்கள்.

வெளி இடங்களுக்கு

இது உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதலை அதிகரிக்கும். வேலை பிஸியில் இருப்பது தவறல்ல, ஆனால், வேலையே கதி என இருந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, February 1, 2016, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter