பெண்களின் இந்த 6 செயல்கள் தான் ஆண்களை அதிகம் முகம் சுளிக்க வைக்கிறதாம்!

பெண்கள் இந்த 6 செயல்களை செய்யும் போது முகம் சுளிக்க வைக்கிறது என ஆண்கள் கூறும் விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

பெண்களை விரும்பாத ஆண்கள் இருப்பார்களா என்ன? அப்படி இருந்தால் அவர் ஆயிரத்தில் ஒருவனாக தான் இருக்க முடியும். நாம் விரும்பும் எந்த ஒரு விஷயமும் மிகுதியாகும் போது அல்லது அலட்டல் செய்யும் போது அதன் மீது நமக்கு சற்று கோபம், வெறுப்பு உண்டாவது சாதாரணம் தான்.

அப்படி பொதுவாக பெண்கள் செய்யும் சில அளவுக்கு அதிகமான சில விஷயங்கள் தங்களை முகம் சுளிக்க வைக்கிறது என ஆண்கள் சிலவற்றை கூறுகின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்ப்ரே!

அளவுக்கு அதிகமாக பர்ஃபியூம் அல்லது பாடி ஸ்ப்ரே பயன்படுத்தும் பழக்கம், ஈர்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக வெறுப்பை தான் அதிகரிக்க செய்கிறது என்கின்றனர் பெரும்பாலான ஆண்கள்.

தொந்தரவு!

சுயமாக தேடாமல், பழகாமல், சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட தங்களை பிடித்து தொங்கிக் கொண்டு தொந்தரவு செய்யும் பெண்களை பார்த்தால் கடுப்பாகும் என்கிறார்கள் ஆண்கள், முக்கியாமாக காதலிக்கும் ஆண்கள்!

பொறாமை!

தொட்டதற்கெல்லாம் பொறாமை படும் குணாதிசயங்கள் கொண்ட பெண்களை பார்க்கும் போது முகம் சுளிக்கும்படி இருக்கும். நண்பர்களுடன் வெளியே சென்றால் கூட, பாரு நீ ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய எல்லாம் போயிட்டு வர, நான் வீட்டிலேயே இருக்கேன் என கூறும் போதே கடுப்பின் உச்சத்திற்கு சென்றுவிடுவோம் என்கிறார்கள்.

அழகு!

தேவையற்றவை மீது அதிக கவனம் செலுத்தும் பெண்கள். முக்கியமாக அழகு சார்ந்து, தங்கள் சருமம் சார்ந்து தேவையற்ற / அளவக்கு மிஞ்சிய அக்கறை எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளும் பெண்களை கண்டால் சற்று வெறுப்பாக இருக்கும் என்கிறார்கள் ஆண்கள்!

எதிர்பார்ப்பு!

பெண்களிடம் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் இருக்கும். இது ஊர் அறிந்த விஷயம் தான். தங்களுக்கு பிடித்து வாங்கிய உடையை ஊரே பாராட்டி தள்ள வேண்டும். ஆஹா, ஓஹோ என புகழ வேண்டும் என விரும்புவர்கள்.

நவநாகரீக உலகம்!

இது நவநாகரீக மங்கைகள் சிலர் மத்தியில் இருக்கும் பழக்கம். குடித்து விட்டு அலப்பறையை கூட்டும் பெண்களை கண்டால் முகத்தை 8 நம்பர் போல சுளிக்க தோன்றும் என்கின்றனர் ஆண்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men Reveal That Unattractive in Women

Things Men Reveal That Unattractive in Women
Please Wait while comments are loading...
Subscribe Newsletter