இந்த 10 வகையான ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்...

Subscribe to Boldsky

எப்போதுமே எதிரும், புதிருமாக இருப்பவை தான் விரைவாக ஈர்ப்புக் கொள்வார்கள். இந்த எதிரும், புதிரும் பட்டியலில் எப்போதுமே டாப்பில் இருப்பவர்கள் ஆண்களும், பெண்களும் தான். காதலில் அல்லது ஓர் பந்தத்தில் இணையும் முன்பு வரை ஒருவரை பற்றி இன்னொருவர் குற்றம் குறைக் கூறிக் கொண்டே தான் இருப்பார்கள்.

பெண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என ஆண்களும், ஆண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என பெண்களும் காலம், காலமாக கூறிவருகிறார்கள். ஆனால், இதுவரை இருவரில் யாருமே அவர்களிடம் இவையெல்லாம் எங்களுக்கு பிடிக்கும் என பெரியளவில் கூறியதில்லை. ஒருவேளை கெத்துக்கு குறைச்சல் வந்துவிடும் போல.

இதன் தொடர்ச்சியாக தான், ஆண்களில் சில வகை ஆண்களை தங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என 10 வகைகளை பட்டியலிட்டுள்ளனர். இதில் நீங்களும் ஒருவரா என்று பார்த்துக் கொள்ளுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கெஞ்சும் நபர்

சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் கெஞ்சுவார்கள். வெளியே போகலாம் ப்ளீஸ் என் கூட வா, இன்னிக்கி நாம டின்னர் எங்கயாவது போலாம் ப்ளீஸ் என எதற்கெடுத்தாலும் ப்ளீஸ் சேர்த்துக் கொண்டு திரியும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லை.

நான் தான் சரி

எது செய்தாலும், கூறினாலும் நான் செய்தது தான் சரி, நீ செய்தது தவறு தான் என்று ஒருதலைப்பட்சமாக பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

வெற்றியில் மிதப்பவர்

பெண்களுக்கு வெற்றியாளர்களை பிடிக்கும். ஆனால், எப்போது பார்த்தாலும் அந்த வெற்றியின் மிதப்புலேயே உலா வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லையாம்.

நான் ரொம்ப பிஸி

பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்கள், தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதற்கு நேர் மாறாக எப்போது பார்த்தாலும் நான் பிஸி என்று காட்டிக் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

ஆணாதிக்கம்

பெண்களை தரக்குறைவாகவும் பேசும், ஆண்கள் தான் வலிமையனாவர்கள். தங்களால் தான் எதுவும் செய்ய முடியும் என்று நெஞ்சை நிமிர்த்தும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

பொறாமை

பொறாமை குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.

சொந்தம் கொண்டாடும் நபர்

தனக்கு மட்டும் தான் உன் மீது உரிமை இருக்கிறது. வேறு யாரும் உன்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று கூறும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. சில சமயங்களில் அதிகமான காதல் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

நாடோடி

எதிர்கால திட்டங்கள் இன்றி நாடோடி போல ஊர் சுற்றுவதை விரும்பும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.

தற்பெருமை

நான் எல்லாம் அப்படி, நாங்க வந்து நின்னா பூமி அதிரும், கடல் கொப்பளிக்கும் என தன்னை பற்றி தானே பெருமையாக பேசிக்கொள்ளும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

மன்னிச்சுக்கோங்க!!!

ஏதாவது ஒன்றை முந்திக் கொண்டு செய்துவிட்டு, பிறகு அதற்காக சாரி கேட்டுக் கொண்டு திரியும் முந்திரிக்கொட்டை ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Types Of Men That Women Hate

Ten Types Of Men That Women Hate, take a look.
Story first published: Friday, January 29, 2016, 14:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter