இது நம்ம ஆளு படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

Subscribe to Boldsky

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது "இது நம்ம ஆளு". சிம்பு நயன் நடித்த முழுக்க முழுக்க காதல், குடும்பம், உறவுகளை சுற்றி நகரும் இந்த திரைப்படத்தில் இருந்து உங்கள் வாழ்க்கை, காதல் மற்றும் இல்லறம் குறித்தும் சிலவற்றை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

"24" படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

முக்கியமாக கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போகும் நபர்கள் அல்லது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து உறவுகள் மற்றும் காதல் சார்ந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்...

தெறி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கவனிக்க வேண்டியது #1

அப்பா மகன் உறவு! மனைவி தன்னை விட்டு பிரிந்த பிறகும் கூட, தன் மகன் மீதான பாசத்தை சற்றும் குறைக்காமல் வளர்க்கும் அப்பா. மேலும், நண்பர்கள் போன்று பழகும் அப்பா மகன்களின் உறவு சிறந்து விளங்குகின்றது.

கவனிக்க வேண்டியது #2

குட்டி காதல்! நிச்சயம் செய்த திருமணமாக இருப்பினும், இப்போது காதலித்து தான் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஆம், இடைப்பட்ட மூன்று நான்கு மாதத்தில் முடிந்த வரை ஒருவரை பற்றி ஒருவர் நன்கு புரிந்துக் கொள்கின்றனர். இந்த புரிதல் இருவர் மத்தியில் ஏற்பட்டாலே இல்லற வாழ்க்கை சிறக்கும்.

கவனிக்க வேண்டியது #3

பெண்ணை அணுகும் முறை! ஆண் நண்பர்களிடம் பேசுவது போல பெண்களிடமும் பேசக் கூடாது. பெண்களிடம் கொஞ்சம் ஷார்ப்பாகவும், கொஞ்சம் சாமார்த்தியமாகவும் பேச வேண்டும். இல்லையேல் அவர்களை மன ரீதியாக நெருங்குவதே கடினம்.

கவனிக்க வேண்டியது #4

கட்டன்ட் ரைட்! எதுவாக இருந்தாலும், உங்கள் துணையிடம் நேரடியாக கேட்டு அறிந்துக் கொள்வது உத்தமம். தேவையில்லாமல், மூன்றாவது நபரிடம் யோசனை கேட்டு, உளவு பார்க்கும் வேலைகள் செய்வது, இன்று இல்லையெனிலும், பின்னாளில் தெரியவரும் போது சங்கடங்களை உண்டாக்கும்.

கவனிக்க வேண்டியது #5

நோண்டி நுங்கெடுப்பது! பெண்கள் சும்மாவே கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அதுவும், தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் நோண்டி நுங்கெடுக்கும் அளவிற்கு கேள்வி கேட்பார்கள். முக்கியமாக முன்னால் காதலி பற்றி. எனவே, சற்று உஷாராக இருங்கள். முடிந்த வரை உண்மையை சொல்லிவிடுங்கள்.

கவனிக்க வேண்டியது #6

திருமணதிற்கு முன்னரே ஒரே குடும்பத்தை போல இருவீட்டாரும் பழகுவது நல்லது விஷயம். இருப்பினும், சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளும் முன்னர் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசித்து பகிர்ந்து கொள்வது நல்லது.

கவனிக்க வேண்டியது #7

மொபைல் பேச்சு! திருமணதிற்கு முன்னர் பேசுவது தவறில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவிற்கு பேசுவது தவறு. திருமணதிற்கு பிறகு உங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ள கொஞ்சம் விஷயத்தை மிச்சம் மீது வைத்துக் கொண்டு பேசுவது நல்லது.

கவனிக்க வேண்டியது #8

சின்ன, சின்ன ஆசை! பெண்களுக்கு எப்போதுமே சின்ன சின்ன ஆசைகள் ஏராளமாக இருக்கும். அதை அவர்கள் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். ஆனால், அதை உடனே நிறைவேற்றாமல். அவர்கள் எதிர்பாராத போது நிறைவேற்றி அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும்.

கவனிக்க வேண்டியது #9

நட்பு! எத்தனை காதல் செய்தாலும், முட்டி மோதி அலுத்து அழுது நின்றாலும், எல்லா கட்டத்திலும் ஒன்றாக துணையாக நிற்பது நட்பு தான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

திருநெல்வலி இருட்டு கடை அல்வா..!!

English summary

Relationship Tips From Idhu Namma Aalu

Relationship Tips From Idhu Namma Aalu, read here in tamil.
Story first published: Wednesday, June 1, 2016, 14:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter