பெண்கள் விளையாட்டு வீரர்கள் மீது அளப்பரிய மோகம் கொள்வது ஏன்?

Subscribe to Boldsky

டிவியில் விளையாட்டு போட்டிகள் காணும் போது நீங்கள் இதை கண்டிருக்கலாம். வெளிப்படையாக என்ன திருமணம் செய்துக் கொள்ளுங்கள், நான் உங்களை காதலிக்கிறேன் என பெண்கள் பலகை ஏந்தி நின்றுக் கொண்டிருப்பார்கள். வேறு எந்த துறை சார்ந்த ஆண்கள் மீதும் பெண்களுக்கு இவ்வளவு அளப்பரிய மோகம் உண்டாவது இல்லை.

ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!

ஹீரோக்கள் விளையாட்டு வீரர்கள் ஆவது கடினம். ஆனால், உலகம் முழுக்க விளையாட்டு வீரர்களை ஓர் ஹீரோவாக தான் பார்க்கின்றனர். ஐரோப்பிய கண்டங்களில் கால்பந்து, இந்தியாவில் கிரிக்கெட், அமெரிக்காவில் கூடைபந்து மற்றும் பேஸ்பால் என அனைத்து பகுதி மக்களுக்கும் விளையாட்டு வீரர்கள் என்றால் ஓர் அளப்பரிய ஆசை இருக்க தான் செய்கிறது.

அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!

ஏன் விளையாட்டு வீரர்கள் மீது இவ்வளவு பெரிய காதல் அல்லது ஆசை உண்டாகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் #1

அனைத்து பெண்களும் தாங்கள் விரும்பும் ஆண் வீரனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். பொதுவாக விளையாட்டு வீரர்கள் என்றால் உடற்கட்டை பேணிகாத்து வலுவாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பாகிவிட்டது.

காரணம் #2

ஊக்கம்! விளையாட்டு வீரர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். இது அவர்கள் வெற்றியடைய ஊக்கமளிக்கிறது. இது விளையாட்டில் மட்டுமின்றி, வாழ்விலும் பெரிய நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும். இவர்கள் தோல்வியை கண்டு துவண்டு போமாட்டர்கள்.

காரணம் #3

பொதுவாகவே பெண்கள் மத்தியில் பெருமையாக பேசுவது இயல்பான குணமாக இருக்கும். அதிலும், காதலன் மற்றும் கணவனை பற்றி மற்றவரிடம் தம்பட்டம் அடித்து பேசுவதில் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது. விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே பிரபலமாக இருப்பார்கள். எனவே, இவர்கள் பேச வேண்டாம், இவர்களை பற்றி ஊரே பேசும் என்ற சிறிய நப்பாசை.

காரணம் #4

பெண்களுக்கு தன் காதலனுக்கு பரிசுகள் அளிப்பது எனில் மிகவும் பிடிக்கும். இதுவே விளையாட்டு வீரர்கள் என்றால் கூறவே வேண்டாம். ஸ்போர்ட்ஸ் கியர், கிரிக்கெட் கிட், டிஷர்ட் என ஏகபோகமாக பரிசுகள் தரலாம்.

காரணம் #5

நான் அங்கு போகிறேன், இங்கு போகிறேன் என பொய் கூறிவிட்டு எங்கும் செல்ல முடியாது. எங்கு சென்றாலும் தெரிந்துக் கொள்ளலாம். இதற்காகவே விளையாட்டு வீரர்கள் மீது பெண்களுக்கு காதல் அதிகம் வரலாம்.

காரணம் #6

"நீ நிறைய ஷாப்பிங் செய்கிறாய்.." என்ற குற்றசாட்டு வரவே வராது. வேண்டுமெனில், அவர்களும் உடன் வந்து நிறைய செலவு செய்வார்கள்.

காரணம் #7

கேளிக்கை கொண்டாட்டம்! பொதுவாகவே நாம் குடும்பமாக ஒன்றாக இருக்கும் போது கேளிக்கையாக பேச சினிமா மற்றும் விளையாட்டை தான் கையில் எடுப்போம். விளையாட்டு வீரர் துணையாக இருந்தால் சொல்லவே வேண்டாம், கேளிக்கை நேரம் தாறுமாறாக எகிறும்.

காரணம் #8

விளையாட்டு வீரர்கள் எப்போதுமே தாங்கள் விளையாடும் விளையாட்டின் மீது அதீத காதல் கொண்டிருப்பார்கள். ஏமாற்ற நினைக்க மாட்டர்கள். இது உறவிலும் கூட தொடரும். எனவே, இவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் கருதுவதுண்டு.

காரணம் #9

துணிச்சல்! விளையாட்டு வீரர்கள் மத்தியில் துணிச்சல் அதிகமாக இருக்கும். பயணம், வேலை, தொழில் போன்றவற்றில் எந்த ஒரு முடிவையும் துணிச்சலாக எடுப்பார்கள்.

காரணம் #10

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே வாழ்க்கையை தொடர விளையாட்டு வீரர்கள் சம்மதிப்பார்கள். சமூகம் என்ன சொல்லும் என்பது பற்றி எல்லாம் கவலைப் படமாட்டார்கள். இந்த சுதந்திரம் தான் பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Most Of The Girls Attracted Towards Sportsmen

Reasons Why Most Of The Girls Attracted Towards Sportsmen, read here in tamil.
Story first published: Wednesday, May 18, 2016, 14:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter