ஏன்டா இப்படி பண்ண? காதலனை "அந்த" இடத்தில் ஒன்பது முறை உதைத்த காதலி!

பழங்கள் வாங்கி தர மறுத்த காதலனை கவட்டியில் 9 முறை உதைத்து தள்ளிய காதலி.

Subscribe to Boldsky

சின்ன, சின்ன சண்டைதான் காதலை வளர்க்கும் என பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளில் கூறியிருக்கிறார்கள். இது உண்மையும் கூட, காதலில் சண்டைகள் என்பது சாப்பாட்டில் உணவை போல, அது இல்லாமல் உறவில் சுவை காண இயலாது.

Angry Girlfriend Kicks Her Boyfriend on the Groin Nine Times

Image Source

ஆனால், உப்பு மிகுதியாகி போனால் என்ன ஆகும். அறுந்து
தொங்க வேண்டியது கதி தான் நேரிடும். அப்படி தான் இங்கு ஒரு காதலி, தான் கேட்டதை காதலன் வாங்கி தரவில்லை என்பதற்காக காதலனை படக்கூடாத இடத்தில் 9 முறை உதைத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அப்படி என்ன கோபம்?

மார்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது. காதலி, காதலனிடம் பழங்கள் வாங்கி தர கேட்டுள்ளார். அவர் கேட்டது அவர்கள் ஊரில் சற்றே அதிக விலையில் விற்கப்படும் பேரிக்காய். விலை அதிகம் என சொல்லி வாங்கி தர முடியாது என காதலன் கூறியிருக்கிறார். இதனால் தான் காதலிக்கு கோபம் வந்துள்ளது.

கவட்டியில் உதை!!!

தான் ஆசையாக கேட்ட பழத்தை வாங்கி தரவில்லை என படக்கூடாத இடத்தில் 9 முறை கடுமையாக உதைத்து, காதலனை கீழே தள்ளியுள்ளார் அந்த ஆக்ரோஷ காதலி.

கேள்வி கேட்டு அடித்த காதலி!

கவட்டியில் உதைக்க்ம் போது, "எனக்கு பழம் வாங்கி தருவியா மாட்டியா.." என கேள்வி கேட்டுள்ளார். காதலன் மீண்டும் முடியாது என கூற, உதைகள் சரமாரியாக வந்துள்ளது.

வீடியோ எடுத்து வைரலாக்கிய பொதுஜனம்!

திடீரென இப்படி ஒரு சம்பவத்தை கண்ட மக்கள், என்ன செய்வது, ஏது செய்வது என அறியாமல் உடனே தங்கள் மொபைலை எடுத்து வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவர் மட்டுமே தடுத்து விட வந்துள்ளார். (பாவிகளா காப்பாத்தவோ, தடுக்கவோ யாருக்கும் தோணலையா?)

காணொளிப்பதிவு!

பழங்கள் வாங்கி தர மறுத்த காதலனை கவட்டியில் 9 முறை உதைத்து தள்ளிய காதலி - காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Angry Girlfriend Kicks Her Boyfriend on the Groin Nine Times

Angry Girlfriend Kicks Her Boyfriend on the Groin Nine Times
Please Wait while comments are loading...
Subscribe Newsletter