For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

காலையில் எழுந்திருக்கையில் ஆண்களுக்கு காம உணர்வு அதிகமாக ஏற்பட்டாலும், பெண்களுக்கு அவ்வேளையில் தூங்கவே விருப்பமாக இருக்கும். அது ஏன் என்று தெரியுமா?

By Ashok CR
|

இரவில் உடலுறவு கொள்வது பெண்களை குதூகலப்படுத்தும் அதே வேளையில் ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான விடை இப்போது கிடைத்து விட்டது.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

காலையில் எழுந்திருக்கையில் ஆண்களுக்கு காம உணர்வு அதிகமாக ஏற்பட்டாலும், பெண்களுக்கு அவ்வேளையில் தூங்கவே விருப்பமாக இருக்கும். அது ஏன் என்று தெரியுமா? அதேப்போல் பெண்களுக்கு நடுநிசியில் காம உணர்வு அதிகமாக இருக்கும் போது, அவரது கணவன் குறட்டை விட்டு தூங்குவது ஏன் என தெரியுமா? இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது ஹார்மோன்களே. சரியான நேரத்தில் நம் பாலுணர்வு கடிகாரங்கள் அலாரம் அடிக்காததற்கான காரணங்களைப் பார்க்கலாமா?

கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை 5 மணி

காலை 5 மணி

இந்நேரத்தில் ஒரு ஆண் எழுந்திருக்கும் முன்பாகவே, அவனுடைய டெஸ்டோஸ்டெரோன் அளவுகள், ஒரு நாளின் மற்ற நேரத்தில் இருப்பதை விட 25-50 சதவீதம் அதிகமாக, மிக உச்சத்தில் இருக்கும். அதற்கு காரணமாக இருப்பது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் உற்பத்தியை ஆளுமை செய்யும் பிட்யூட்டரி சுரப்பி, இரவு நேரத்தில் படிப்படியாக உயர தொடங்கி, அதிகாலையில் உச்சத்தில் இருக்கும்.

உடலுறவிற்கு தூண்டுதலாக இருக்கும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கும் உண்டு. ஆனால் லேசாக சுரக்க ஆரம்பிக்கும் அது, நடுநிசியில் சிறிதளவு மட்டுமே சுரந்திருக்கும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய இரண்டும் அவற்றை சமநிலையுடன் வைத்துக் கொள்ளும். உடலுறவு கொள்ளும் உணர்வைப் பெற ஆண்களுக்கு இயல்பான அளவில் டெஸ்டோஸ்டிரோன் இருந்தாலே போதும். காலையில் இது அதிகரித்திருக்கும் நிலையால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளாவது ஆணுறுப்பில் விறைப்புடன் தான் ஆண்கள் விழிப்பார்கள்.

காலை 6 மணி

காலை 6 மணி

நன்றாக தூக்கம் மேற்கொண்டீர்களா? காலையில் எளிதில் காதல் கொள்கிற உணர்வை ஆண்கள் அதிகமாக பெறுவதற்கு காரணமாக இருப்பது நல்ல தூக்கமும் கூட. நீண்ட, ஆழமான தூக்கத்தை ஒரு ஆண் பெற்றால், அவன் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. ஜெர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் படி, ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தூங்கினால் ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் அளவு 15% அதிகமாகும்.

காலை 7 மணி

காலை 7 மணி

காலையில் எழுந்திருக்கும் போது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் வேளையில், பெண்களுக்கு மிக குறைவாக இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அந்த நாளின் எதிர்முனை நேரங்களில் உச்சத்தில் இருக்கும். அதனால் அவர்களால் ஒத்திசைக்க முடியாது என சாண்ட்வெல் அண்ட் வெஸ்ட் பிர்மிங்கம் மருத்துவமனை என்.எச்.எஸ். அறக்கட்டளையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் காப்ரியேல் டௌனி கூறியுள்ளார்.

பெண்களுக்கு பாலுணர்வு ஏற்பட ஹார்மோன்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. அதனால் ஆண்கள் கூடுதல் உழைப்பை போட வேண்டியிருக்கும் என டௌனி மேலும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இயல்பான ஒரு நாளை விட, பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது தான் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும். பெண்களின் மாதவிடாய் காலத்தின் இடையே அவர்களின் டெஸ்டோஸ்டெரோன் அளவு ஆரம்ப நிலையை விட 30 மடங்குகள் அதிகமாக இருக்கும்.

காலை 8 மணி

காலை 8 மணி

அன்றைய நாளுக்கு இரண்டு பாலினருமே தயாராக வேண்டும் என்பதால், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரித்து, அவர்களை எழுந்திருக்க உதவிடும். அதனால் செக்ஸ் ஹார்மோன்களின் அதிகரிப்பும் அடங்கும். கார்டிசோல் என்பது ஆண் மற்றும் பெண் என இருவரின் பாலியல் இயக்கியையும் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

அன்றைய நாள் நகர நகர, ஆண்கள் படிப்படியாக டெஸ்டோஸ்டிரோன் அளவை அடைவார்கள். தசை வளர்ச்சி மற்றும் விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்க தேவையான ஹார்மோன் இது. உடலில் உள்ள கடிகாரத்தின் அங்கமாக, நாள் முழுவதும், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை இதன் அளவுகள் வீழ்ச்சி அடைந்து பின் எழும்.

நண்பகல் 12 மணி

நண்பகல் 12 மணி

உடன் வேலைப்பார்க்கும் வசீகரிக்கக்கூடிய பெண், வேலையிடத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறாளா? இதை பார்க்கும் ஆணின் செயலை ஊக்குவிப்பது நரம்பிய அமைப்பே தவிர அவனின் ஹார்மோன்கள் அல்ல.

ஈர்க்கக்கூடிய ஒருவரை பார்த்த உடனேயே நல்ல உணர்வை ஏற்படுத்தக்கூடிய மூளை நரம்பியல் கடத்திகளான என்டார்ஃபின்ஸ் சுரக்கும். இது ஆணின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி விடும். செக்ஸ் ஹார்மோன்கள் என்றால் உயர்ந்திட தாமதமாகும். இருப்பினும், உங்கள் முன் கவர்ச்சியான நபர் இருக்கும் போது, ஏற்கனவே அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை கொண்டுள்ள ஆண், அப்பெண்ணிடம் கடலை போட தொடங்குவார். உயர்ந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோனை கொண்ட ஆண்களால் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என்றும் கூட மிக்சிகனில் உள்ள வேயின் ஸ்டேட் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நண்பகல் 1 மணி

நண்பகல் 1 மணி

மதிய உணவில், தன்னை வசீகரிக்கும் பெண்ணை ஒரு ஆண் பார்க்கும் போது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை விட, ஆண்மையுள்ள ஒரு ஆணை ஒரு பெண் பார்க்கும் போது ஏற்படும் ஈர்ப்பு குறைவே. ஆனால் தன் சொந்த துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது, ஒரு பெண்ணின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிக்கும் என ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது.

டெக்சாஸ் பல்கலைகழகம் நடத்திய ஒரு ஆய்வின் படி, நீண்ட தூர உறவுகளை கொண்ட பெண்கள் ஐந்து எச்சில் மாதிரிகளை கொடுத்தனர். தங்கள் துணையை பார்ப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு முன்பு, உடலுறவு கொள்வதற்கு முன்பு, உடலுறவு கொண்ட மறு நாளைக்கு பிறகு மற்றும் அவர்கள் பிரிந்த ஒரு வாரத்திற்கு பின்பு என ஐந்த சூழ்நிலைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. தன் கணவனை காண்பதற்கு ஒரு நாள் முன்பு தான் பெண்ணின் டெஸ்டோஸ்டிரோன் அளவு உச்சத்தில் இருந்தது. அதற்கு காரணம் அவரை பார்க்க போகிறோம் என்ற ஆவலே.

மாலை 6 மணி

மாலை 6 மணி

மாலை நெருங்கும் போது, ஆணின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையத் தொடங்கும். அதே நேரம் பெண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் மெதுவாக உயரத் தொடங்கும்.

ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தால், அதற்கு பிறகு இரண்டு பாலினருக்குமே பாலுணர்ச்சி ஊக்குவிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைகழகம், சான் டீகோவை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியின் படி, உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி உயர்ந்திருக்கும்.

இந்நேரத்தில் உடலுறவில் 30 சதவீதமும் புணரின்பத்தில் 26 சதவீதமும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளனர். உடற்பயிற்சியில் ஈடுபடாத பெண்களுடன் ஒப்பிடுகையில், கார்டியோ உடற்பயிற்சியில் 20 நிமிடங்களுக்கு ஈடுபடும் பெண்கள் நீலப்படம் பார்க்கையில் அவர்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும் என டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

மாலை 7 மணி

மாலை 7 மணி

அழுத்தம் நிறைந்த நாளை முடிக்கும் நேரம் வருகையில், இசையை ஒலிக்கச் செய்வது கூட, செக்ஸ் ஹார்மோன் அளவுகளை பாதிக்கக்கூடும். டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை பெண்களுக்கு உயர்த்துவதில் இசை முக்கிய பங்கை வகிக்கிறது; ஆனால் ஆண்களுக்கோ அது எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தும் என நாரா பல்கலைகழகத்தை சேர்ந்த ஜப்பானிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

அதற்கு காரணம் இசை என்பது பெண்ணை அமைதியுறச் செய்யும், பிணைப்புடன் வைத்திருக்கும், பாலுணர்வை அதிகமாக தூண்டும். ஆனால் ஆண்களுக்கோ தங்களின் மூர்கத்தனத்தைக் கட்டுப்படுத்தும்; அதனால் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இரவு 8 மணி

இரவு 8 மணி

தொலைகாட்சியில் முக்கியமான கிரிக்கெட் போட்டி இருந்தால், அப்போதும் கூட ஒரு ஆணின் டெஸ்டோஸ்டெரோன் பாதிக்கப்படும். உடாஹ் பல்கலைகழகம் நடத்திய எச்சில் சோதனைகள் ஆய்வின் படி, உலக கோப்பை போட்டியை காணும் ஆண்களுக்கு, தங்களின் அணி வெற்றிப் பெற்றால், அவர்களின் ஹார்மோன் அளவுகள் 20 சதவீதம் ஊக்குவிக்கப்படுகிறது.

மிகப்பெரிய போட்டியில் அவர்கள் தோல்வியுற்றால், இந்த அளவுகள் 20 சதவீதம் வீழ்ச்சியடைகிறது. மாறாக பெண்களுக்கோ, விளையாட்டை பார்ப்பதை விட அதனை விளையாடும் போது அந்த தாக்கத்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இரவு 9 மணி

இரவு 9 மணி

இப்போது, ஒரு ஆணின் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள், அந்த நாளிலேயே மிகவும் குறைவான அளவில் இருக்கக்கூடும். ஆனால் பெண்ணுக்கோ உச்சியை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பெண்ணின் பாலுணர்வு ஆசை என்பது எளிய கதையல்ல.

உடல் உருவம் தான் செக்ஸ் உணர்வை ஊக்குவிக்கும் மிகப்பெரிய காரணி என டௌனி கூறுகிறார். ஒரு பெண் தன்னை வசீகரமற்றவளாக பார்த்தால், உடலுறவு கொள்ள அவள் அவ்வளாவாக விரும்பவதில்லை. அதனால் தான் பாலிசிஸ்டிக் ஓவரியை கொண்ட பெண்கள், அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் கொண்டிருந்தாலும் பாலுணர்வு அதிகரிப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் தன்னை அதிக எடையுள்ளவராக, வசீகரமற்றவராக கருதுவார்கள். இந்த உணர்வுகள் செக்ஸ் ஹார்மோன்களை வீழ்த்தும்.

இரவு 10 மணி

இரவு 10 மணி

இப்போது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மிக குறைவாக இருந்தாலும், இந்த வேளைகளில் கூட ஆண்கள் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம், பெண்களின் அளவுகளை விட ஆண்களின் அளவு இந்நேரமும் கூட அதிகமாக தான் இருக்கும் என டௌனி கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், உடலுறவு கொள்ளும் போது, மாதவிடாய் சுழற்சியில் ஒரு பெண் இருந்தால் (கிட்டத்தட்ட 13-ஆம் நாள்), அதனால் அப்பெண்ணின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உச்சத்தில் இருந்தால், அவளுடைய புணரின்பம் மிக தீவிரமாக இருக்கும். அவள் உடல் முழுவதும் அதனை உணர முடியும்.

அளவுகள் குறைவாக இருக்கும் போது, அவளுடைய உச்ச நிலை குறைவான தீவிரத்தோடு இருக்கும். அதுவும் பாலின உறுப்புகளைச் சுற்றியே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do Men Want Physical Intimacy In The Morning?

Why do men want sex or physical intimacy in the morning while women get frisky at night? Mystery solved.
Desktop Bottom Promotion