உடலுறவை பற்றி பெண்கள் இரகசியமாக தெரிந்துக் கொள்ள விரும்பும் விஷயங்கள்!!!

Subscribe to Boldsky

என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் நாம் வெளிப்படையாக பேசக் கற்றுக் கொண்டாலும். நமது நாட்டில் கொச்சை வார்த்தைகளில் திட்டிக் கொள்வது, அடித்துக் கொண்டு ரோட்டில் புரளுவதை விட, உடலுறவு பற்றி பேசுவது என்பது தவறு என்பதை போன்று தான் காணப்படுகிறது.

ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால், இதுக் குறித்து பெண்கள் எங்காவது பேசினால், "இது கலிகாலம், கலாச்சார சீர்கேடு, இதுங்கெல்லாம் எங்க உருப்பட போகுது.." என்று ரவுண்டுக் கட்டி பேச ஒரு கூட்டமே இருக்கிறது. இதனாலேயே உடலுறவுக் குறித்து பெண்களுக்கான சந்தேகம் தீராமல் இருக்கிறது.

இதில் பெண்கள் இரகசியமாக தங்கள் துணையிடம் இருந்து தெரிந்துக் கொள்ள விரும்பும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலுறவு நிலைகள்

பெரும்பாலும் பெண்கள் உடலுறவு விஷயத்தில் வெளிப்படையாக பேச மறுப்பது உடலுறவு நிலைகள் பற்றி தான் (Position). இதில் எந்த நிலையில் உடலுறவுக் கொள்தல் நிறைவான இன்பத்தை தரும் என்பது பெண்களுக்கு தெரிவதில்லை. இதை இரகசியமாக தன் துணை இடமிருந்து தெரிந்துக் கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள்.

உச்சம் சார்ந்த சந்தேகங்கள்

பெண்களுக்கு உடலுறவில் உச்சம் அடைய கொஞ்சி விளையாடுதல் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்த கொஞ்சி விளையாடுதல் மற்றும் ஆண்களின் அந்தரங்க தீண்டுதல் பற்றி பெண்கள் இரகசியமாக தெரிந்துக் கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள்.

அந்தரங்கள் பாகங்களில் முத்தம்

நிறைய பெண்களுக்கு ஏன் ஆண்கள் அந்தரங்கள் பாகங்களில் முத்தமிட அதிகமாக ஆர்வம் கொள்கிறார்கள் என்று தெரிவதில்லை. இதனால் அவர்களுக்குள் உணர்வு ரீதியாக என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இரகசியமாக தெரிந்துக் கொள்ள பெண்கள் விரும்புகிறார்கள்.

ஆண்களுக்கு ஏன் முத்தமிட வேண்டும்

அதே போல, ஆண்களின் அந்தரங்க பாகங்களுக்கு ஏன் முத்தமிட வேண்டும் என்ற கேள்வியும் பெண்கள் மனதில் உடலுறவில் ஈடுபடும் போது எழுகிறது. நம் நாட்டு பெண்கள் பெரும்பாலும் இதை விரும்புவதில்லை. ஆயினும், ஏன் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் இருக்கிறது.

சுய இன்பம்

ஆண்களை போலவே பெண்களுக்கும் சுய இன்பம் காணும் பழக்கம் இருக்கிறது. ஆனால், எத்தனை முறை சுய இன்பம் காணாலாம் என்ற கேள்வி அவர்களுள் எழுகிறது. நிபுணர்கள், இதில் எந்த தவறும் இல்லை. பெண்கள் சுய இன்பம் காணுவதால் அவர்களது மன அழுத்தம் குறைகிறது மற்றும் இலகுவாக உணர்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

உடலுறவின் போது உள்ளாடை

இன்னும் நமது நாட்டில் பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது உடையின்றி ஈடுபட மறுப்பது உண்டு. ஆனால், ஆண்கள் இதில் கொஞ்சம் ஆர்வம் காட்டி உடைகள் வேண்டாம் என்று கருதுவது உண்டு. ஏன் உடலுறவு கொள்ளும் போது ஆடை உடுத்த கூடாது என்று இரகசியமாக பெண்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவது உண்டு.

வெளிப்படையாக பேசலாமா?

உடலுறவுக் குறித்து தனது துணையிடம் வெளிப்படையாக பேசலாமா, கூடாதா என்று தெரிந்துக் கொள்ளவும் பெண்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், நமது நாட்டில் பொதுவாகவே உடலுறவு குறித்து பேசுவது தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Women Secretly Want to Know About Love Making

Here we have discussed about the several things that women secretly want to know about love making, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter