For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம் அந்த கேள்வியை கேட்க சரியான நேரம் எது??

|

ஆண்கள், பாத்ரூமில் கூட வழுக்கி விழ மாட்டார்கள், ஆனால், காதலில் "தொபக்கடீர்.." என விழுந்துவிடுவார்கள். காதலில் விரைவாக விழும் ஆண்களுக்கு, அந்த காதலை வெளிப்படுத்த நீண்ட நேரம்.... அல்ல, அல்ல காலம் எடுத்துக் கொள்ளும். காரணம், காதலை, எப்போது, எந்த சூழ்நிலையில் கூற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது.

உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

வருட கணக்கில் காத்திருந்து, ஓர் மொக்கையான தருணத்தில் காதலி வெளிபடுத்தி "பல்பு.." வாங்குவது, ஆண்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் செயல். எனவே, எந்த நேரத்தில் காதலை வெளிபடுத்தலாம், அந்த பெண் உங்கள் மீது காதலில் தான் இருக்கிறாளா? அல்லது இந்த தருணத்தில் கூறினால் அந்த பெண்ணுக்கு உங்கள் மீது காதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை உச்சமடைய வைக்கும் ஆச்சரியமான எளிய வழிமுறை!!!

இதையெல்லாம் எப்படி தெரிந்துக் கொள்வது என யோசிக்கிறீர்களா.... போய் படிங்க பாஸ்....

சூர்யா ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மாடர்ன் காதல் டிப்ஸ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவனம் தேவை

கவனம் தேவை

முதலில் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் பழகும் அதே விதத்தில் தான் அவரும் பழகுகிறாரா? என அறிந்துக் கொள்ள வேண்டும். உங்களை தொடர்புக் கொள்ள அவர் அடிக்கடி முயற்சிக்கிறார் என்றால். சரியான சந்தர்பத்தில் நீங்கள் உங்கள் மனதை திறந்து காதலை வெளிபடுத்திவிடலாம்.

உற்சாகம் அடைதல்

உற்சாகம் அடைதல்

உங்களை காணும் போதெல்லாம் காரணமே இல்லாமல் உற்சாகமாக அவர் காணப்படுகிறார் என்றால், இந்த ஒரு அறிகுறியை வைத்தே நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தி விடலாம். ஏனெனில், பெண்கள் அவர்களது இதயத்திற்கு அருகாமையில் வைத்திருக்கும் நபர்களை கண்டால் தான் உற்சாகம் அடைவார்கள். (பசங்களுக்கு ஒரு பாட்டில் பீர் கூலிங்கா இருந்தாலே போதுமே...)

தனது விருப்பங்களை பட்டியிலிடுவது

தனது விருப்பங்களை பட்டியிலிடுவது

எப்போது ஓர் பெண் தனக்கு பிடித்த விஷயங்கள், இடங்கள், உணவு என ஒன்றைவிடாமல் உங்களிடம் பட்டியலிட்டு கூற ஆரம்பிக்கிறாரோ, அப்போதே அவருக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது என்று தான் பொருள், இந்த நிகழ்வு நடந்துவிட்டால், நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி உங்கள் காதலை கூறிவிடுங்கள்.

திட்டங்களை கூறுவது

திட்டங்களை கூறுவது

அவசியமே இன்றி, நாளை நான் அங்கு போகிறேன், எனக்கு பெரிதாய் வேலை ஏதும் இல்லை என்று ஓர் பெண் கூறுகிறார் என்றால், மறைமுகமாக அவர் உங்களையும் உடன் அழைக்கிறார் என்று அர்த்தம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது, நீங்கள் அவளிடம் காதலை தைரியமாக கூறலாம் என்பதற்கான அறிகுறிகள்.

உங்களை சோதனை செய்தல்

உங்களை சோதனை செய்தல்

நீங்கள் பெண்கள் விஷயத்தில் எப்படி, புகை, மது போன்ற பழக்கங்கள் போன்றவை சார்ந்து உங்களை ஓர் பெண் சோதனை செய்ய அல்லது ஆராய ஆரம்பித்தால், அவருக்கு உங்கள் மீது அபிப்பிராயம் இருப்பதை அறிந்துக் கொள்ளலாம். தோழிக்கு கூட இது போன்ற அக்கறை இருக்கும். எனவே, அவள் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக இது சார்ந்து கேட்கிறாள் என்றால், நீங்கள் உங்கள் காதலை வெளிபடுத்திவிடலாம்.

காதலிக்க ஆசை

காதலிக்க ஆசை

உங்களிடம், திரும்ப, திரும்ப, எனக்கு சிங்கிளாக இருப்பது போரடிக்கிறது, காதல் கொள்ள விரும்பிகிறேன், தகுந்த ஆணை தேடுகிறேன் என கூறி வருவது, உங்கள் மீது அவளுக்கு விருப்பம் இருப்பதை மறைமுகமாக தெரிவிக்கும் முறை என பெண்களே கூறுகிறார்கள்.

கூறுவதெல்லாம் வேத வாக்கு

கூறுவதெல்லாம் வேத வாக்கு

நீங்கள் கூறுவதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொள்வது, நீங்கள் "ஜோக்" என்று சொன்னால் கூட விழுந்து, விழுந்து சிரிப்பது போன்றவை, அந்த பெண் உங்கள் மீது மிகவும் பிரியமாகவும், ஆவலாகவும் இருக்கிறார் என்பதன் பொருள்.

பொன்னான தருணங்கள்

பொன்னான தருணங்கள்

நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கும் தருணங்கள் அனைத்தும் நினைவை விட்டு அகலாத வண்ணம், பொன்னான தருணங்களாக இருக்கின்றன என்றால், வேறென்ன வேண்டும். தாராளமாக உங்கள் காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தலாம்.

சில தீண்டல்கள்

சில தீண்டல்கள்

வெறும் நட்புடன் பழகும் பெண்ணிடம் அந்த தீண்டல்கள் இருக்காது. தோளடு உரசுதல், உங்கள் கையை பற்றிக்கொண்டு விளையாடுதல். முடியை பிடித்து இழுத்து விளையாடுவது போன்றவை அந்த பெண்ணிற்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று சொல்லும் அறிகுறி.

உங்கள் குடும்பத்தோடு நெருங்கி பழகுதல்

உங்கள் குடும்பத்தோடு நெருங்கி பழகுதல்

மற்ற தோழிகளை விட உங்க குடும்பத்தோடு நெருங்கி பழகும் குணம் மற்றும் உங்கள் தாய், தந்தையர் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறை போன்றவை கூட நீங்கள் காதலை அந்த பெண்ணிடம் தாராளமாக வெளிப்படுத்தலாம் என்பதற்கான அச்சாரம் தான். ஆனால், சில பெண்களிடம் தங்களது நண்பர்களின் அப்பா, அம்மாவையும், அப்பா, அம்மா என்று கூறி மகள் போல பழகும் குணம் இருக்கும். எதற்கும் முழுதாய் புரிந்துக் கொண்டு செயல்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Signs It's Time You Should Ask Her Out

Do you know about the 10 Signs It's Time You Should Ask Her Out? take a look.
Desktop Bottom Promotion