For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உறவுக்கு வேட்டு வைக்கிறதா தொழில்நுட்பம்? அதிர்ச்சியான தகவல்கள்!!!

By John
|

வாட்ஸ்-அப், ஃபேஸ் புக், வீடியோ காலிங், டேட்டிங், சாட்டிங் என்று தொட்டதற்கு எல்லாம் செயலிலி (App) வாயுலாக ஊடுறவி உறவாடும் வகையாக கலாச்சாரம் மருவிவிட்டது. இதன் காரணமாக உறவுகள் சீக்கிரம் ஒட்டிக்கொள்வதை போல, வெகு விரைவாக பிரிந்தும் விடுகின்றன.

ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது நேரடி உணர்வின் பிரதிபலிப்பு இல்லாததுதான். சாட்டிங்கில் நீங்கள் அனுப்பும் செய்து எழுத்தாக தான் வெளிப்படுமே தவிர உணர்வாக வெளிப்படாது. நீங்கள் விளையாட்டாக அனுப்பும் செய்து வினையாக மாறும். சீரியசாக கூறும் செய்தி விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.

பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?

முகபுத்தகத்தில் பதிவேற்றம், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என அனைத்தும் உறவை இறுக்கவும், முறிக்கவும் காரணமாக திகழ்கிறது. பெரும்பாலும் முறித்து எறிந்துவிடுகிறது என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தவறான புரிதல்...

தவறான புரிதல்...

முன்பு கூறியவாறு, செய்திகள் அனுப்புவம் முறை தான் இந்த தவறான புரிதல்களை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் நாம் எந்த பாணியில், தொனியில் செய்தியினை அனுப்புகிறோம் என்பதை எதிர்முனையில் செய்தியை பெறுபவருக்கு தெரியாமல் இருப்பதே ஆகும்.

நேரமின்மை

நேரமின்மை

போதிய நேரம், ஒருவரோடு ஒருவர் செலவழிப்பது இல்லை என்பது முக்கியமான காரணம் ஆகும். என்னதான், பல மணி நேரம் மொபைலில் பேசினாலும், செய்திகள் அனுப்பினாலும் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதை போல இருப்பதில்லை.

அந்நியன் போன்ற வாழ்க்கை

அந்நியன் போன்ற வாழ்க்கை

பல சமயங்களில் ஒன்றாக இருப்பினும் கூட, ஒருவரை ஒருவர் முக பார்த்து பேசாது, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது உறவினை பெருமளவு பாதிக்கிறது. ஒரே வீட்டில், ஒரே அறையில், அருகருகே இருந்தும் கூட சிலர் ஃபேஸ் புக் மோகத்தில் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, உறவினுள் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கின்றனது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

சண்டைகள்...

சண்டைகள்...

முகப்புத்தகத்தில் போடும் பதிவுகளில் இருந்து, கருத்து, விருப்பம் என பல விஷயங்களினால் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, வேறொரு பெண்ணின் புகைப்படத்திற்கோ, பதிவேற்றதிற்கோ கருத்துகள் தெரிவிப்பது, பகிர்வது போன்றவை கூட உறவில் விரிசல் ஏற்பட, சின்ன சின்ன சண்டைகளை பெரிதாக்க காரணமாக இருக்கின்றது.

உணர்வுகள் வலுவிழப்பு

உணர்வுகள் வலுவிழப்பு

இதன் காரணங்களால் உணர்வுகள் குறைந்துக் போய்விடுகிறது. உறவுகள் பிரிய பெரும் காரணமாகிவிடுகிறது. புன்னகை, அழுகை, ஆச்சரியம், பூரிப்பு என எந்த ஒரு உணர்வும் முழுமையாக உறவுகளுக்கும் எழுவதை தடுக்கும் தடையாகிவிட்டது தொழிநுட்பம்.

தூரம் அதிகரிக்கிறது

தூரம் அதிகரிக்கிறது

நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ச்சியடைவதன் அதே அளவு உறவுகளுக்குள்ளான இடைவேளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. காதலன், காதலி மட்டுமல்லாமல், தாய், தந்தை, அண்ணன், தங்கை போன்ற உறவுகளையும் கூடப் பாதிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Technology Is Destroying Your Relationship

Do you know technology is the one of the main reason for your relationship destroying? read here.
Desktop Bottom Promotion