காதல் வாழ்கையில் பெண்கள் தங்கள் காதலர்களிடம் எதிர்பார்க்கும் சில சின்ன சின்ன ஆசை!!!

Subscribe to Boldsky

காதலில் பிரிவு தான் பிரியத்தை அதிகரிக்கும் என்பார்கள். இது உண்மைதான் என்றாலும், பிரிந்து இருக்கும் காதலர்களுக்கு தான் அதில் இருக்கும் இன்னொரு முகமான வலியும் தெரியும். இவ்வுலகில் எல்லா வலிகளுக்கும் அதை சரி செய்ய இன்னொரு வழி இருக்கிறது. அதை கண்டறிந்து சரியாக பயணித்தல் நல்ல தீர்வு காண முடியும்.

பிரிந்திருக்கும் காதலும் அவ்வாறு தான். பிரியும் கூடும் அதே சமயத்தில், காதலி விரும்பும் சில விஷயங்களை தவறாது செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த பிரியமே விரிசலுக்கு காரணமாகிவிடும். இனி, பிரிந்திருக்கும் காதலில் பெண்கள் தங்கள் காதலர்களிடம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகளும், விருப்பங்களும் என்னென்ன என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என விரும்புவர்கள்

நீங்கள் ஊர் திரும்பியவுடன், உங்களோடு முடிந்தவரை நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆண்கள் என்ன தான் உருகி உருகி காதலித்தாலும், அதே அளவு நண்பர்களுடுனும் நேரம் செலவழிக்க விரும்புவர்கள். இங்கு தான் சிக்கல் பிறக்கும். எனவே, வெளியூர்களில் இருக்கும் ஆண்கள், காதலி விரும்பும் வண்ணம், அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம்.

போன் உரையாடல்கள்

அதே போல, கிடைக்கும் நேரம் எல்லாம் பேச வேண்டும் என்ற ஆசை பெண்களின் மனதில் சிட்டுக்குருவி பல பறந்துக்கொண்டிருக்கும். அதை சிறையிலிட்டு வேடிக்கை பாராமல். நீங்களும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவருடன் பேசி மகிழ்விக்க வேண்டியது உங்கள் கடமை.

பரிசுகள்

ஊரில் இருந்து வரும்போது கண்டிப்பாக தனக்காக ஏதேனும் வாங்கி வருகிறீர்களா என்ற ஆசை பெண்களிடத்தில் இருக்கும். கண்டிப்பாக இந்த வகை காதல் கதைகளில் நிறையவே இருக்கும். தங்கம், வைரம் இல்லாவிடினும், தெருவோர கடைகளில் விற்கும் சின்ன சின்ன கம்மல், வளையல்களே அவர்களது ஆசையை திருப்தி செய்துவிடும் என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் போதுமானது.

மாற்றங்கள் கூடாது

பெரும்பாலும் ஆண்கள் வெளியூர் சென்றால் தங்களது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தி கொள்வார்கள். அல்லது அதுவாக கூட சிலருக்கு மாறிவிடும். இதை பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விரும்பும், விரும்பிய காதலர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பார்கள். இன்னொரு வகையில் எங்கே வேறு பெண்ணை விரும்பிவிடுவர்களோ என்ற அச்சமும் இருக்க தான் செய்கிறது.

பழையதை மறந்துவிட கூடாது

கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலும் ஆண்களுக்கு ஒரு மமதை வந்துவிடும். அதை கூடாது என்று எதிர்பார்கிறார்கள் பெண்கள். உண்மை தான் இது சேமிப்பை கரைத்துவிடும். மற்றும் அவப்பெயர் உண்டாக்கிவிடும்.

உங்களை பற்றிய அப்டேட் முக்கியம்

நீங்கள் வெளியூரில் இருந்தாலும் கூட, நீங்கள் என்ன செய்கிறீர்கள், "இப்ப எல்லா, நீ என்கிட்டே எதையுமே சொல்றது இல்லை, நீ நிறையா மாறீட்ட.." என்று புலம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Things She Definitely Wants From You

Love expects love alone. In distance love, girls will expect some addtional things from her man. Do you know about those expectations? take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter