For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலி உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்கிறார் என்பதை காட்டும் அறிகுறிகள்!!!

By Maha
|

ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்தில் தங்களுக்கு பிடித்தவரை உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்வோம். இதற்கு முக்கிய காரணம் தான் சொல்வதை தவறாமல் கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவேளை அப்படி செய்யாவிட்டால், உணர்ச்சிரீதியாக அவர்களை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிப்பார்கள்.

குறிப்பாக காதலிக்கும் போது ப்ளாக்மெயில் செய்வது தான் மிகவும் அதிகம். அப்படி ப்ளாக்மெயில் செய்து தன் தற்காலிகமாக எண்ணத்தை நிறைவேற்றுவதால், உறவு தான் பாதிக்கப்படுமே தவிர, இருவருக்குள் சந்தோஷம் நீங்கி உறவு நீண்ட நாள் நீடிக்காமல் ஒருகட்டத்தில் முறிந்துவிடும். ஆகவே உங்கள் வாழ்க்கை சந்தோஷேமாக மனதிற்கு பிடித்தவருடன் நீண்ட நாட்கள் செல்ல வேண்டுமானால், உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்யும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு அவர்களது தவறை உணர்த்த வேண்டும். முக்கியமாக பெண்கள் தான் அதிகம் உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்வார்கள்.

* உங்கள் காதலி உங்களை உணர்ச்சிரீதியாக அதிகம் ப்ளாக்மெயில் செய்பவராக இருந்தால், அவர்கள் என்ன சொன்னாலும் நீங்கள் 'முடியாது' என்று சொல்லக்கூடாது என்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி உங்களிடம் எதை சொன்னாலும் நீங்கள் அவர்களை ஒரு கேள்வி கூட கேட்காமல் சரி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை நீங்கள் முடியாது என்று சொன்னால், கோபப்படுவார்கள் அல்லது அழ ஆரம்பிப்பார்கள்.

Signs Your Girlfriend Emotionally Blackmails You

* உங்களால் ஏதேனும் நடைபெற வேண்டுமானால், உங்களிடம் வேண்டுகோள் விடுக்காமல் உங்களுக்கு கட்டளை விடுப்பார். ஒருவேளை நீங்கள் முடியாது என்று சொன்னால், உங்களிடம் சண்டை போட்டுக் கொண்டு, அழுவார்கள்.

* உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று அச்சுறுத்துவது. உதாரணமாக உங்களிடம் ஏதாவது ஒன்றை சொல்லி நீங்கள் செய்யாவிட்டால், அவர் உங்களை அச்சுறுத்துவார். அப்படி அச்சுறுத்தியும் நீங்கள் அவர்கள் வழிக்கு செல்லாவிட்டால், வாழ்க்கை முடித்துக் கொள்வேன் என்று சொல்லி ப்ளாக்மெயில் செய்வார்கள். அதிலும் நீங்கள் மடங்கவில்லை என்றால், அழுது கொண்டு கத்த ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமன்றி நீங்களே வந்து அவர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆகவே உங்கள் காதலி இப்படியெல்லாம் நடந்தால், உடனே அவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டு பிரிவதை தவிர்த்து, அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். பொறுமையாக பேசி புரிய வைத்து, வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் ப்ளாக்மெயில் செய்யும் குணம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும்.

English summary

Signs Your Girlfriend Emotionally Blackmails You

Before discussing about various signs of emotional blackmail, we must admit the fact that both men and women resort to this blackmailing at some point. 
Story first published: Monday, January 12, 2015, 18:41 [IST]
Desktop Bottom Promotion