For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் மற்றும் சமூக வலைதள சாட்டிங் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய இரகசியங்கள்!!!

|

புறா மூலம் காதல் தூது அனுப்பி, பிறகு ஓலை, கடிதங்கள், தந்தி, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி என பல உருவம் மாறி இன்று காதலை இணைக்கும் ஊடகமாக சமூக வலைதளங்களும், ஆன்லைன் சாட்டிங்கும் செம்மையான பணியாற்றி வருகிறது.

உடலுறவு கொள்ளும் போது பெண்களை பாதுகாப்பாக உணர வைக்க இதையெல்லாம் தவிர்த்தல் வேண்டும்!!!

ஆனால், முன்பு இருந்த தனியிரிமை, அந்தரங்க இரகசியம் எல்லாம் வெட்டவெளிச்சம் ஆகி வருகிறது. இது எப்படி நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது. யாரால் திருடப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதில் விளங்காத புதிராக இருந்து வருகிறது.

பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!!

ஒளித்துவைத்த கேமரா மூலம் பதிவு செய்யவில்லை, உங்கள் தகவல் சேமிப்பு கார்டில் இருந்து யாரும் திருடவில்லை, பிறகு எப்படி இது நடக்கிறது, இருவருக்குள் நடக்கும் உரையாடல், புகைப்பட பரிமாற்றம், ஒலி தகவல் பரிமாற்றம் எவ்வாறு உலகம் முழுதும் பரவுகிறது....

இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டோரேஜ்ஜில் இருந்து திருடப்படலாம்

ஸ்டோரேஜ்ஜில் இருந்து திருடப்படலாம்

நீங்கள் வாட்ஸ்-அப், மற்றும் ஃபேஸ் புக்கில் பகிரும் தகவல்கள், புகைப்படங்கள், உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு அதன் ஸ்டோரேஜில் இருந்து திருடப்படலாம். க்ளவுட் ஸ்டோரேஜில் இருந்து பரவலாக திருடப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம்.

அழகை கண்டு மயங்கும் மாயோ லோகம்

அழகை கண்டு மயங்கும் மாயோ லோகம்

பெரும்பாலும் ஆன்லைனில் உறவுகளில் ஆண், பெண் அழகை வைத்து தான் உறவை வளர்க்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் போலியான முகவர்கள் தான் இருக்கிறார்கள். இவர்களில் வலிந்து பேசி உங்கள் தகவல்களி உங்களிடம் இருந்தே வாங்குபவர்களும் உண்டு. உங்களுடன் பேசிக்கொண்டே, உங்களது அக்கவுன்ட்டை ஹேக் செய்து திருடுபவர்களும் உண்டாம்.

புகைப்படங்கள் பகிர வேண்டாம்

புகைப்படங்கள் பகிர வேண்டாம்

ஆன்லைன் மற்றும் சமூக வலைதள சாட்டிங்கில் பெரும்பாலும் உங்கள் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்துவிடுங்கள். இதனால் உங்கள் அந்தரங்கள் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திருடப்படலாம். அவசியம் என்றால் ஈமெயில் மூலம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

உருகி பேசுபவர்களை நம்ப வேண்டாம்

உருகி பேசுபவர்களை நம்ப வேண்டாம்

எடுத்த எடுப்பில், ஒருசில நாட்களிலேயே உருகி பேசி, உங்களிடம் புகைப்படம், வேறு முக்கிய தகவல்கள் போன்றவற்றை கேட்கும் நபர்களுடன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். பெரும்பாலும், பெண்களை குறிவைத்து தான் பெரும் கும்பல் ஆன்லைன் சாட்டிங்கில் இயங்கி வருகிறது.

புரியாத தகவல்களை நம்ப வேண்டாம்

புரியாத தகவல்களை நம்ப வேண்டாம்

நீங்கள் சமூக வலைத்தளங்களில் புதிய நபர்களுடன் பழக விருப்பம் உடையவர்களாக இருந்தாலும், அவர் உண்மையான நபரா என்று தெரிந்த பிறகு நட்பை துவக்குங்கள். முக்கியமாக ஒருவரது முக்கிய அடிப்படை தகவல்கள் உண்மையா என பாருங்கள், போலியான முகவர்கள் பெரும்பாலும் அவர்களது ஊர், படித்த இடம், போன்ற தகவல்களை வைத்திருக்கமாட்டார்கள். அதே போல, முகப்பு படம் (Profile Picture) ஒன்றே ஒன்று தான் இருக்கும்.

ஆன்லைனில் மட்டுமே வசிப்பார்கள்

ஆன்லைனில் மட்டுமே வசிப்பார்கள்

நீங்கள் ஆன்லைன் அல்லது சமூக வலைத்தளத்தில் நட்பு பாராட்டும் நபர் உண்மையானவரா அல்ல போலியனவரா என்பதை ஒரு விஷயத்தை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். போலிகள் பெரும்பாலும் சாட்டிங்கில் மாட்டும் தான் இருப்பர்கள் நீங்கள் மாதக்கணக்கில் நட்பு பாராட்டினாலும் கூட அழைப்புகள் அல்லது நேரடியாக பேசமாட்டார்கள்.

 அவதூறாக பேசுபர்கள்

அவதூறாக பேசுபர்கள்

மற்றும் உண்மையான நட்பு இன்றி, வெறும் இச்சைக்காகவும், கெத்துக்காகவும் சாட்டிங் செய்பவர்கள், நீங்கள் பதிலளிக்க தாமாதம் ஆன மறு நொடியே, வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள். உங்களை அவதூறாக பேசுவார்கள். இதை வைத்து அவர்கள் நட்புக்காக பழகவில்லை, வேறு விஷயத்திற்காக பழகுகிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets Everyone Should Know About Online Chatting

Do you know about the secrets about online and social media chatting? read here.
Desktop Bottom Promotion