For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலில் பட்டையைக் கிளப்பும் இந்த காலத்து இளசுகள்!!!

|

இந்த காலத்து இளைஞர்களுக்கு காதல் பற்றி ஒன்றும் தெரிவதில்லை. அந்த காலத்தில் அம்பிகாபதி அமராவதி, தேவதாஸ் பார்வதி போல இன்று யாரும் காதலிப்பதில்லை என்று ஒரு கட்சிக் குறைக்கூறிக் கொண்டிருக்க. அட போங்கய்யா இப்ப இருக்குறவங்க பண்ற லவ்வு தான் ரைட்டு என்கிறது மறுபக்க கட்சி.

காதல் டூ திருமணம், காதலர்களுக்கு நோ சொல்லும் பெண்கள்!

முன்பு என்ன தான் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் நேசித்தாலும். அது சோகத்தையே பரிசாக அளித்தது. இடையில் இது ஒத்துவராத காரியம் என்று புரிந்தும் அவர்கள் மனதினுள் புழுங்கிக் கொண்டு வெளிவேசம் கட்டி வந்தனர். ஆனால் இந்த காலத்து இளசுகள் அதில் எல்லாம் கவனமாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவரையே சரியாக தேர்வு செய்கின்றனர் என ஒரு கோஷ்டி பேசி வருகையில்....

முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?

அப்படி என்னய்யா இந்த காலத்து பசங்க அந்த காலத்து காதல விட பெருசா பண்ணி கிழிச்சுட்டாங்க என்று எதிர்முனை கோஷ்ட்டி கேள்வி கேட்கிறது. உங்களுக்கான பதில் ஸ்லைடுகளில் கூறப்பட்டுள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயக்கம் இல்லை

தயக்கம் இல்லை

தயக்கம், கூச்சம் என்ற பெயரில் நமக்கு பிடித்த பெண்ணிடம் பேசவே வருடங்கள் ஓட்டிய காலம் அது. ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு சில நிமிடங்கள் போதும் தங்களுக்கு பிடித்திருந்தால் உடனே பேசிவிடுவார்கள்.

பயம் இல்லை

பயம் இல்லை

காதலிக்கலாமா, வேண்டாமே, சரி வருமா, வராதா என பல கேள்விகளுக்குள் சிக்கி தவித்து பயந்தது அந்த காலம். ஆனால், இன்று அப்படி இல்லை. அவர்களுக்கு ஒத்துவரும் என தெரிந்தால் தான் காதலிக்கவே ஆரம்பிக்கின்றனர்.

முன்னுரிமை

முன்னுரிமை

இந்த காலத்து இளைஞர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிந்து வைத்திருகின்றனர். காத்திருக்க மறுக்கும் காதலுக்காக அவர்கள் வாழ்க்கையை தொலைக்க முடிவெடுப்பது இல்லை.

சமூகத்தைப் பற்றி கவலை இல்லை

சமூகத்தைப் பற்றி கவலை இல்லை

தனக்கு ஒன்றும் செய்திடாத சமூகத்திற்காக நான் ஏன் எனது சுய இன்ப துன்பங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணும் இளைஞர்கள். சமூகத்திற்காக தங்களது காதலை மூடி மறைப்பது இல்லை

சம உரிமை

சம உரிமை

அந்த காலத்து காதலில் பெண்களுக்கு சம உரிமை இருந்ததாக இல்லை. ஆனால், இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் சமமாக பழகுகின்றனர்.

தைரியம்

தைரியம்

அன்று சாதி, மதம், இனம் காதலுக்கு தடைகளாக இருந்தது. இன்று சாதி, மதம், இனம் போன்றவை வெறும் வார்த்தைகளாக மட்டும் தான் இருக்கிறது. இன்றைய தலைமுறை மிகவும் தைரியசாலிகள்.

நடைமுறை அறிந்தவர்கள்

நடைமுறை அறிந்தவர்கள்

நாடக வாழ்க்கை வாழாது, நடைமுறை அறிந்து வாழ தெரிந்தவர்கள் இன்றைய தலைமுறையினர். காதலை கண்மூடித்தனமாக செய்யாமல் அதையும் நடைமுறை அறிந்து ஒருவரை ஒருவர் புரிந்து காதலிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Our Generation Is Actually Better At Relationships

You know this generation is actually acting better at relationships than previous generation. They have a clear mind set and picks right person for them.
Story first published: Friday, March 27, 2015, 18:07 [IST]
Desktop Bottom Promotion