For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உடலுறவுக் குறித்து வேறுப்பட்ட கருத்துகள் நிலவுவது ஏன்?

By John
|

குழாய்யடிச் சண்டையிலும், சாரயக்கடை வாசலிலும் பச்சை பச்சையாக கூட வசைபாடும் நிகழ்வுகள் சாதாரணாமாக நடக்கும். ஆனால், எங்காவது ஓர் மூலையில் யாரவது உடலுறவு என்று கூறினால், இந்தியாவில் அது தான் மாபெரும் கெட்ட வார்த்தையாக கருதப்படுகிறது.

அம்மா, ஆத்தா என்ற வார்த்தைகள் கூட நமது நாட்டில் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன. மிக சத்தமாக சிரித்தப்படி உபயோகிக்கப்படும் இந்த வார்த்தைகளுக்கு மத்தியில் இன்னமும்கூட, காண்டம், விஸ்பர் போன்ற வார்த்தைகள் மிக அமைதியாக பேசி வருகிறோம்.

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

ஏன் இந்தியாவில் உடலுறவு என்பது தீய அணுகுமுறையா என்ன? இல்லை. உலக அளவில், உடலுறவில் உச்சகட்ட இன்பத்தை அனுபவிப்பவர்களில் இந்தியர்கள் தான் முடஹ்ல் இடத்தில இருக்கின்றனர். இந்திய ஆண்கள் உலக பெண்களின் விருப்பத்திற்கு உரியவர்கள் என்று உலக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!!

ஆயினும் கூட, இந்தியாவில் உடலுறவு குறித்து சாதாரணமாக பேசுவது ஏறத்தாழ தடை செய்யப்பட்டதை போல தான் இருக்கிறது. இனி, இந்தியாவில் உடலுறவு வெளிப்படையாக மறுக்கப்படுவாதாகவும், இரகசியமாக விரும்பப்படுவதாகவும் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ப்பு முறை

வளர்ப்பு முறை

குழந்தைகளை, குழந்தைகளாகவே வளர்ப்பது, 5 - 25 வரை அவர்களை பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் முறை. ஆனால், இன்றைய அதிநவீன சமூக வலைதள வாழ்வியல் முறையில், வாட்ஸ்-அப் என்ற ஒன்று எல்லா விஷயங்களும் அவர்களை நேரடியாக சென்றடைய உதவுகிறது என்பதை பெற்றோர்கள் ஏனோ அறிவதில்லை. பொத்தி பொத்தி வளர்க்கும் முறையானது தான் முதல் காரணமாக இருக்கிறது.

புனிதம் கெட்டுவிடும்

புனிதம் கெட்டுவிடும்

உடலுறவு என்பது எல்லா உயிர்களுக்கும் மத்தியில் வாழ்வியல் அடிப்படையாக இருப்பது. ஆனால், நமது ஒருவருக்கு ஒருவர் என்ற கலாசாரத்தில், ஒருவர் பலருடன் உடலுறவில் ஈடுபடுவது புனிதம் கெட்டுவிடும் என்ற கருத்தினை உட்புகுத்தி காத்து வந்தனர். ஆதலால் தான், குழந்தைகள் வளரும் வரை உடலுறவுக் குறித்து எந்த விஷயங்களும் பகிரப்படாமல் வளர்க்கப்படுகின்றனர்.

 புனிதம் கெட்டுவிடும் - காரணம்

புனிதம் கெட்டுவிடும் - காரணம்

மற்றும் பலருடன் உடலுறவுக் கொள்வதால் உடல் சார்ந்த கொடிய நோய்களின் தாக்கம் ஏற்படும் என்பதை அறிந்து தான் வாழ்வியல் இலக்கணம் வகுத்தனர் நமது முன்னோர்கள்.

 சமூகக் கட்டுப்பாடு

சமூகக் கட்டுப்பாடு

சமூகத்தில் உடலுறவு குறித்து பேசுவது அநாகரிகமான செயலாக கருதப்படுவது. தீவிரவாதத்தை வளர்க்கும் வகையில் கூட நம் நாட்டில் தெருக்களில் உட்கார்ந்து பேச அனுமதியுண்டு. ஆனால், உடலுறவுக் குறித்து பேசினால், அவனை கேவலமாக, தீண்டத்தகாதவனாக பார்க்கும் நமது சமூகம்.

தடைசெய்யப்பட்ட ஒன்று

தடைசெய்யப்பட்ட ஒன்று

குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்றாக விளையாடி வந்தவர்களை திடீரென, பதின் வயதுகளில் பிரித்துவிடும் நமது சமூகம். அதிலும் பெண்களை ஒதுக்கிவிடும். இந்த திடீர் பிரிவுக்கு முக்கிய காரணமே, எங்கு உடலுறவு கொள்வார்களோ என்ற தாய்களின் அச்சம் தான்.

ஈர்க்கக்கூடிய செயல்

ஈர்க்கக்கூடிய செயல்

நமது நாட்டில் ஓர் பெண் அல்லது ஆண் தனது எதிர் பாலின நபர்களை ஈர்க்க முதலில் பயன்படுத்துவது, தங்களது உடல் ரீதியான யுத்திகள் தான்.

கண்டதும் காதல்

கண்டதும் காதல்

கண்டதும் காதலென்ற முறை எவ்வாறு துளிர்க்கிறது என இன்று வரை தெரியாத புதிராக இருக்கிறது. முதல் பார்வையில் அகம் தெரியாமல் முகம் மட்டும் பார்த்து காதல் கொள்வதும் கூட இதற்கான ஓர் காரணமாக இருக்கிறது.

மரியாதை குறித்த செயல்பாடு

மரியாதை குறித்த செயல்பாடு

உடலுறவு இல்வாழ்க்கையின் அடிப்படை என்று தெரிந்தும் கூட, அதைக் குறித்து தெரிந்துக் கொள்வது அநாகரீகமான செயலாக தான் பார்க்கப்படுகிறது. இணையத்திலோ, புத்தகத்திலோ அல்லது நேரடியாகவோ ஒருவர் சந்தேகங்கள் கேட்டல், அவர் பிஞ்சிலே பழுத்தவர் என முத்திரை குத்தப்படுவார். ஒருவேளை நடுவயது உடையவராக இருந்தால் காமப் பேய் என்று தூற்றுவர்.

உத்தமன்

உத்தமன்

பொதுவாகவே நமது சமூகத்தில் ஓர் பெண் உடலுறவு குறித்து தெரிந்து வைத்திருந்தால் அவள் நல்லவளாக இருக்க மாட்டாள் என்ற தீய எண்ணம் காட்டுத்தீ போல பரவி இருக்கிறது. எனவே, உடலுறவுக் குறித்து ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தாலே அவர்கள் உத்தமர்கள் இல்லை என்ற வழக்கு நமது சமூகத்தில் உள்ளது. பின், ஏன் நமது முன்னோர்கள் கோவில் சிலைகளில் உடலுறவுக் குறித்த சிற்பங்கள் செதுக்கு வைத்தனர். கலைநயத்தை போற்றுவதற்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Intercourse In India Is Outwardly Denied Yet Secretly Desired

Do You Know About The Reasons Why Intercourse In India Is Outwardly Denied Yet Secretly Desired? Read Here.
Story first published: Tuesday, June 23, 2015, 12:26 [IST]
Desktop Bottom Promotion