For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் உடனே நிறுத்த வேண்டிய ஜிம்மில் செய்து வரும் உடற்பயிற்சிகள்!!!

By Maha
|

சிக்ஸ் பேக் வைக்க முயற்சிப்போர் ஏராளம். அதற்காக பலர் ஜிம்மில் பல கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி நாம் ஜிம்மில் செய்து வரும் சில உடற்பயிற்சிகள் நம் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

அதுவும் அந்த உடற்பயிற்சிகள் அடிப்படையானது மட்டுமின்றி, பார்ப்பதற்கு சாதாரணமாகவும் இருக்கும். ஆனால் சிலர் தன் உடல் வேகமாக நல்ல அமைப்பைப் பெற வேண்டுமென்று அதை அளவுக்கு அதிகமாக செய்வார்கள். அப்படி செய்தால், தசைகள் கிழிந்துவிடும். எனவே அந்த உடற்பயிற்சிகளை அதிகம் செய்வதை நிறுத்துங்கள். சரி, இப்போது அந்த உடற்பயிற்சிகள் எவையென்று பார்ப்போமா!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெக் எக்ஸ்டென்சன் (Leg Extensions)

லெக் எக்ஸ்டென்சன் (Leg Extensions)

தொடையில் உள்ள தசைகளை வலிமையாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் ஓர் உடற்பயிற்சி தான் லெக் எக்ஸ்டென்சன். இந்த உடற்பயிற்சி செய்யும் போது, அதிகளவு எடையைப் போட்டு செய்தால், மூட்டுகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தொடைகளில் உள்ள முன்புற தசைநார்கள் கடுமையாக பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே அதிக எடை போட்டு செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

செஸ்ட் ஃப்ளை (Chest Fly)

செஸ்ட் ஃப்ளை (Chest Fly)

மார்பக தசைகள் நல்ல வடிவத்தைப் பெறவும், மார்பக தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் மேற்கொள்ளும் செஸ்ட் ஃப்ளை உடற்பயிற்சியை செய்யும் போது, அளவுக்கு அதிகமான எடையுடன் நீண்ட நேரம் செய்தால், மார்பக தசைகள் கிழிவதோடு, தோள் சுற்றுப்பட்டையும் கிழியும். எனவே இதை அதிகம் செய்வதை உடனே நிறுத்துங்கள்.

நெக் ஷோல்டர் பிரஸ் (Neck Shoulder Press)

நெக் ஷோல்டர் பிரஸ் (Neck Shoulder Press)

இது மிகவும் சிம்பிளான உடற்பயிற்சியாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான எடையை தூக்கி இறக்கும் போது, தோள் சுற்றுப்பட்டையில் அழுத்தம் அதிகரித்து, அதனால் சரியான நிலையில் செய்ய முடியாமல் போய், அதுவே தீவிரமான விளைவை உண்டாக்கிவிடும்.

க்ரஞ்சஸ்/சிட் அப்ஸ் (Sit Ups/Crunches)

க்ரஞ்சஸ்/சிட் அப்ஸ் (Sit Ups/Crunches)

ஆப்ஸ் வருவதற்கு க்ரஞ்சஸ் செய்யும் போது, மேல் உடலின் எடையை அடி முதுகுப்பகுதி தாங்கும். இப்படி நீண்ட நேரம் அதிகப்படியான எடையுடன் இயங்கும் போது, அடி முதுகுப்பகுதி கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். வேண்டுமானால் ஆப்ஸிற்கு கேபிள் க்ரஞ்சஸ் அல்லது பால் க்ரஞ்சஸ் செய்யலாம்.

லேட் புல்டவுன் (Wide-Grip Lat Pulldown)

லேட் புல்டவுன் (Wide-Grip Lat Pulldown)

ஜிம்மில் பொதுவாக காணப்படும் ஓர் இயந்திரம் தான் லேட் புல்டவுன். இது தோள்பட்டைக்கு மிகவும் ஆபத்தான ஓர் பயிற்சி. இந்த உடற்பயிற்சியின் போது தோள் சுற்றுப்பட்டை வெளிப்புறமாக சுழலுவதால், தோள்பட்டையில் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Classic Gym Exercises You Should Stop Doing Right Away

Want to know classic gym exercises you should stop doing right away? Here are some of the worst exercises you have been doing for the longest time.
Story first published: Wednesday, November 4, 2015, 15:28 [IST]
Desktop Bottom Promotion