For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவை பற்றிய அறிவியல் சார்ந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

|

உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் ஏற்படும் ஓர் இணைப்பு என்று மட்டும் கருத முடியாது. இதற்கு உடல்திறனும் அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அறிவியல் இதை வேறு விதமாக கூறுகிறது. நமது உடலை விட பெரிய அதிசயிக்கத்தக்க அறிவியல் ஊடகம் வேறெதுவும் இல்லை.

ஆதலால், உடலுறவில் ஈடுபடும் முன்னர் அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆண், பெண்ணை பற்றியும், பெண் ஆணை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுறவில் முழு திருப்தி அடைய வேண்டும் என்று எண்ணுவோர் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த கொழுப்பு ஊக்குவிக்கிறது

குறைந்த கொழுப்பு ஊக்குவிக்கிறது

குறைந்த கொழுப்புச்சத்து இருப்பவர்கள் உடலுறவில் சிறந்து செயல்படுகிறார்களாம். ஒருவேளை நீங்கள் உடலுறவில் நன்கு செயல்பட முடியவில்லை எனில் அதற்கு உங்கள் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சி விளையாடுதல் அவசியம்

கொஞ்சி விளையாடுதல் அவசியம்

உடலுறவில் ஈடுபட்ட பிறகு கொஞ்சி விளையாடாமல் இருந்தால், ஒருபோதும் நீங்கள் உங்கள் துணையை முழுமையாக திருப்திப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். கொஞ்சி விளையாடுவதால் உடலில் வெளிப்படும் ஆக்ஸிடாஸின் தான் பெண்களை முழுமையாக உடலுறவை அனுபவிக்க உதவுகிறதாம்.

விழிப்புணர்வு அவசியம்

விழிப்புணர்வு அவசியம்

உடலுறவு என்பது அசுத்த செயல் அல்ல. உடலுறவை பற்றிய முழுமையான விழிப்புணர்வு தேவை. இதைப் பற்றிய தகவல்கள் தெரிந்துக் கொண்டு உறவில் ஈடுபடுவது தான் சிறந்தது. ஒருவருக்கு ஒருவர் மத்தியில் முழு புரிதல் அவசியம் அப்போது முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியும் என்கிறார்கள்.

உடலுறவில் ஈடுபடுவதால் கலோரிகள் குறைகிறதா?

உடலுறவில் ஈடுபடுவதால் கலோரிகள் குறைகிறதா?

ஆம், உடலுறவில் ஈடுபடுவது உடற்பயிற்சி செய்வதற்கு சமம் தான். நீங்கள் முழுமையாக உடலுறவில் ஈடுபடுவது, 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதற்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

மூளை தான் அனைத்திற்கும் காரணம்

மூளை தான் அனைத்திற்கும் காரணம்

சிலர் உடலுறவில் ஈடுபட மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தினமும் கூட உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். இதற்கு அவரது மூளை தான் காரணமாம். மூளை எவ்வாளவு ஆக்டிவாக இருக்கிறதோ அந்த அளவு உடலுறவு சார்ந்த எண்ணங்களும் அதிகமாகுமாம். ஒரு ஆய்வில், உடலுறவு சார்ந்த புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு, அதைப் பார்க்கும் போது யாருக்கெல்லாம் மூளை அதிகமாக ஆக்டிவாக இருந்ததோ, அவர்கள் எல்லாம் உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Shocking Scientific Facts About Love Making

Do you know about the Five Shocking Scientific Facts About Love Making? read here.
Story first published: Saturday, September 19, 2015, 13:54 [IST]
Desktop Bottom Promotion