காதல் தோல்வியை கொடுத்து வாழ்க்கையில் வெற்றிபெற செய்தமைக்கு நன்றி கூறுங்கள்!!

Subscribe to Boldsky

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி... வாழ்க்கையின் அர்த்தத்தை மொத்தமாய் உணர்த்தும் ஒரே தோல்வி காதல் தோல்வி தான். ஆயிரம் முறை தேர்விலும், வியாபாரத்திலும் தோற்றவர் கூட மீண்டும் அதே தவறை செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆனால், காதலில் அப்படி செய்பவர்கள் மிகவும் ஒருசிலர் மட்டுமே.

பெரும்பாலும் இல்வாழ்க்கையை பாதிக்கும் அந்த மூன்று தவறுகள்!!!

காதல் தோல்வியினால் அமில வீச்சு, கற்பழிப்பு, திட்டி தீர்ப்பது, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பரப்புவது போன்றவை அநாகரீகம். உங்களுக்கு நல்லது செய்தவருக்கு நீங்கள் முதலில் நன்றி தான் கூற வேண்டும். ஆம், காதல் தோல்வி கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் ஏராளம்...

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் 1

வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, எல்லாமே கடந்து போவது தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் செயல் காதல் தோல்வி. எதற்காகவும் கண்ணீர் சிந்தி பயனில்லை, நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது மட்டுமே நமது பணி.

காரணம் 2

வலிமையை தரும்! ஓர் ஆணின் வாழ்க்கையில் காதல் தோல்வியை தாண்டிய பெரும் தோல்வி வேறேதும் இல்லை. இது அவனுக்கு வாழ்க்கையின் வலிமையை தரவல்லது. மனதளவில் முதலில் பாதிப்படைந்தாலும், பின்னாளில் இதே வலிமையாக அமைகிறது.

காரணம் 3

மேலும் வாய்ப்புகள் இருக்கிறது என உணர்த்துவதும் காதலே. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி அல்ல. அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் எனும் பாடத்தை கற்பிப்பது காதல் தோல்வி தான்.

காரணம் 4

அடுத்தக் கட்டம்!!! வாழ்க்கையில் விளையாட்டாக இருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைய வைப்பது சில காதல் தோல்விகள் தான். இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்ன என்று உணர்த்துவதும் சில காதல் தோல்விகள் தான்.

காரணம் 5

எல்லாம் நன்மைக்கே!!! நமது வாழ்க்கையில் தானாக நடக்கும் அனைத்துமே நன்மைக்கே என்பதை உணர்த்துவது காதல் தோல்வி தான். நூற்றில் பத்து பேர் தங்களுக்கான சிறந்த துணையை இழப்பது உண்டு. ஆனால், மற்ற 90 பேர் காதல் தோல்விக்கு பிறகு தான் தங்களுக்கு ஏற்ற உண்மையான துணை யாரென அறிகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Reasons You Should Thank The Person Who Broke Your Heart

Dont feel bad, when you got break up with your love partner. There are five Reasons thank That Person Who Broke Your Heart.
Story first published: Tuesday, November 24, 2015, 16:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter