காதல் வாழ்க்கையை "வேற லெவலுக்கு" எடுத்து செல்ல உதவும் எட்டு டேட்டிங் டிப்ஸ்!!!

Subscribe to Boldsky

"உன்னாலே, உன்னாலே.." திரைப்படத்தில் இடைவேளைக்கு பிறகு ஓர் காட்சி வரும். அதில், ஓர் காளை ஒரே பசுமாட்டுடன் இன்னொருமுறை சேர்க்கை வைத்துக்கொள்ளது என்பதால், ஏற்கனவே சேர்க்கை செய்த பசுமாட்டை வாசனை திரவம், வண்ணம் எல்லாம் மாற்றி மீண்டும் சேர்க்கையில் ஈடுபட வைப்பார்கள்.

இது, மாட்டிற்கு மட்டுமல்ல மனிதனுக்கும் பொருந்தும். ஒரே மாதிரியான விஷயங்கள் மனிதனை எளிதாக சலிப்படைந்து போக செய்துவிடும். இது காதலுக்கு மிகவும் பொருந்தும் விஷயமாகும். தினமும் காலை "குட் மார்னிங்", "இரவு குட் நைட்" இடையே இரண்டு முறை "ஐ லவ் யூ.." மட்டுமே கூறுவது, இரவில் ஒரு மணிநேரம் அலைபேசியில் பேசுவது, வார இறுதியில் வெளியே செல்வது மட்டுமல்ல காதல்.

உங்கள் காதலை "வேற லெவலுக்கு" கொண்டு செல்ல நீங்கள் "அதுக்கும் மேல" சில விஷயங்களை செய்ய வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புதியதாக உணர வைக்க வேண்டும்

பெரும்பாலும் பார்க், பீச், திரையரங்கு, ஷாப்பிங் மால் என்று சென்றாலும் கூட, உங்களோடு இருக்கும் போது, உங்கள் துணை புதியதாக உணரும் வகையில் நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும் தருணங்கள் மனதை விட்டு அகலாத வண்ணம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பான மனநிலை

உங்களோடு இருக்கும் போது உங்கள் துணை பாதுகாப்பான மனநிலையை உணர வேண்டும். வெறும் காதலனாக மட்டுமில்லாமல் சிறந்த நண்பனாகவும் இருத்தல் வேண்டும். உங்களிடம் பயமின்றி அனைத்தையும் வெளிப்படையாக கூறும் வகையில் உறவினை அமைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சுதல், மிஞ்சுதல், கெஞ்சுதல் என மூன்றும் கலந்த கலவையாய் காதல் இருத்தல் அவசியம்.

பயணங்கள்

உள்ளூராகவும் இருக்கலாம், வெளியூராகவும் இருக்கலாம். ஆனால், சரியான இடைவேளையில் எங்கேனும் இருவரும் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது, உங்கள் இருவருக்கும் நிலையான, இன்பமான தருணங்களையும், மறையாக நினைவுகளையும் பரிசளிக்கும். இது காதலை வளர்க்க ஓர் கருவியாக பயன்படும்.

முதல் பார்வையில் வீழ்த்த வேண்டும்

பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, முதல் பார்வையிலேயே தங்களது துணையை ஈர்க்க வேண்டியது அவசியம். இல்லையேல் அவர்கள் பார்வை வேறு பக்கம் திரும்பிவிடும். இதற்கு, அழகான ஆடையோ, அலங்காரமோ தேவையில்லை. காதல் வயப்பட வைக்கும் ஒற்றை பார்வை போதுமானது (கவுண்டமணி அண்ணனின் அந்த ரொமாண்டிக் லுக், நினைவிருக்கிறதா.....)

அனைத்தையும் உளறிக்கொட்டிவிட வேண்டாம்

காதலில் இரகசியங்கள் மறைக்கக் கூடாதுதான். ஆனால், சில விஷயங்களை அப்பட்டமாக உளறிக் கொட்டிவிடவும் கூடாது. அப்படி சொல்லாமல் மறைத்த விஷயத்தை பாதுகாக்க வேண்டியதும் அவசியம். மறுநாளோ, சில நாட்களிலேயோ தெரிந்துவிட்டால், அதன் விளைவாக கண்மணி ஓரிரு வாரங்கள் பேசாமல் சண்டையிட்டுக் கொண்டே கூட இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒத்திகை பார்க்கக் வேண்டியது அவசியம்

நாடகத்தில் மட்டுமல்ல, உங்கள் காதலியிடம் சிலவற்றை கூறும் முன்பு ஒத்திகை பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், பெண்கள் கதையாக, வர்ணித்து அழகாக கூறும் காதல் விஷயங்களை, ஆண்கள் வெண்ணெய் திருடும் போது, பானை உடைப்படுவது போல சட்டென கூறிவிடுவார்கள். இதில், சுவாரஸ்யமே இருக்காது. எனவே, ஒவ்வவொரு நொடியும், ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்களாக செதுக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உங்கள் கண்மணிக்கு முன்னாள் நீங்கள் ஒரு ஹீரோ ரேஞ்சில் திகழ வாய்ப்புகள் இருக்கிறது.

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும்

விட்டுக்கொடுத்து வாழ்வது காதல் மற்றும் இல்லற வாழ்க்கையில் மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும். ஆனால், அதற்காக உங்களது இயல்பான குணாதிசயங்களையும் இழந்துவிட கூடாது. பிறகு இதுவே உங்கள் காதலில் ஓர்நாள் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும். ஆதலால், நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டியது அவசியம்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம்

சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டியது அவசியம் எனிலும் கூட, சில தருணங்களில் சிலவற்றை இழந்துவிடவும் கூடாது. காதல் அருவியாக கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு சில முத்த பரிவர்த்தனை செய்வதில் தவறே இல்லை. தருணத்தை தவறவிட்ட பிறகு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Dating Tips To Transform Your Love Life

Eight dating tips to transform your love life to another love. Take a look.
Story first published: Tuesday, August 4, 2015, 14:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter