For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் செல்லப் பிராணிகளிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 உறவு பாடங்கள்!!!

By Ashok CR
|

மனிதர்களாக பிறந்த நாம் 6 அறிவு படைத்த சிந்திக்க கூடிய மிருகமே. நமக்கும் மிருகத்திற்கும் உள்ள அந்த வித்தியாசமே அந்த ஆறாவது அறிவே. அதுவே மனித இனத்தை இவ்வளவு தூரம் வளர்த்து வந்துள்ளது. இன்றைய நவீன வளர்ச்சிகளை நம்மால் சாதிக்க முடிந்ததற்கு காரணமும் அதுவே. பெருவாரியான அளவில் வளர்ச்சியை அடைந்து விட்டோம் என மார் தட்டி கொண்டாலும் நாம் இழந்தவைகள் பல. அதில் முக்கியமானவை அன்பை செலுத்துவது, பிறரை நேசிப்பது; முக்கியமாக மனித நேயத்தை! சரி இதெல்லாம் முழுமையாக இல்லாமல் போய் விட்டதா என்றால் அது தான் இல்லை.

நிலையான காதல் வாழ்க்கையைப் பற்றி அறிவுரையை தேடி அலைகிறீர்களா? ஏன் ஊரெல்லாம் தேடி அலைகிறீர்கள்? உங்கள் வீட்டிலேயே அதற்கு பதில் உள்ளது. என்ன புரியவில்லையா? நீங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? அது போதும், அவைகளிடம் இருந்து கற்று கொள்ள பல விஷயங்கள் உள்ளது. அதற்கு வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான்! நீங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டும்.

செல்லப் பிராணிகள் கடவுளின் ஒரு அருமையான படைப்பாகும். நம்மை விரும்பும், நம்முடன் பய பக்தியோடு இருக்கும்! அதற்கு கைமாறாக அவை எதிர்ப்பார்ப்பது பதிலுக்கு அவையிடம் அன்பை செலுத்த வேண்டும். ஏன் மனித உறவுகளும் அப்படி இருக்க முடியாது? ஏன் நம்மால் சரியான காதலை கொண்டிருக்க முடியாது? சரி வாங்க, உங்க செல்லப் பிராணிகள் அப்படி என்ன தான் கற்றுக் கொடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதிப்பீடு செய்பவராக இருக்காதீர்கள்

மதிப்பீடு செய்பவராக இருக்காதீர்கள்

நீங்கள் கோட் சூட் அணிந்திருக்கிறீர்களா அல்லது கிழிஞ்ச ஆடையை அணிந்திருக்கிறீர்களா என்பதை பற்றியெல்லாம் உங்கள் செல்லப் பிராணி அக்கறை கொள்வதில்லை. வீடு குப்பையாக இருக்கிறதே அல்லது சமைப்பதற்கு பதில் வெளியே சென்று சாப்பிட வேண்டியிருக்கிறதே என்றெல்லாம் அது கவலை கொள்வதில்லை. பிராணிகள் மதிப்பீடு செய்வதில்லை, அவைகளுக்கு தெரிந்ததெல்லாம் காதல் மட்டுமே! மிகச்சிறந்த அறிவுரை இது! இதை கேட்டால் கண்டிப்பாக உறவுகளில் நடக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் குறையும்.

விசுவாசம் முக்கியம்

விசுவாசம் முக்கியம்

ஒரே வாழ்க்கை துணையுடன் வாழ்வது, அவர்களிடம் அடிமைப்பட்டதை போல் சிலர் உணர்வார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், ஒரே துணையுடன் விசுவாசத்துடன் வாழ்வது காதலின் மிக உயரிய செயலாகும். செல்ல பிராணிகள் விசுவாசிகள். நம்மிடம் அவர்கள் நிபந்தனையற்ற காதலை கொண்டிருப்பார்கள். நம்முடைய காதல் உறவில் இந்த பாடத்தை நாம் பின்பற்றினால், கண்டிப்பாக நம் உறவு மேம்படும்.

சேர்ந்து சந்தோஷமாக இருப்பது

சேர்ந்து சந்தோஷமாக இருப்பது

எப்போதுமே சண்டை போட்டு கொண்டிருப்பதற்கு பதிலாக நீங்களும், உங்கள் செல்ல பிராணியும் சந்தோஷமாக இருக்க முடிகிறதல்லவா? அப்படியானால் மனிதர்களான நம்மால் மட்டும் ஏன் எப்போதும் ஒன்றாக இருந்து சந்தோஷத்துடன் வாழ முடியாது? ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்தால், உங்கள் உறவில் காதலும் சந்தோஷமும் உயிர்ப்புடன் இருக்கும். முட்டாள் தனமாக நடந்து கொள்ளுங்கள், வேடிக்கையாக நடந்து கொள்ளுங்கள்... ஆனால் சந்தோஷமாக இருக்க பயப்படாதீர்கள்!

வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்

வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்

உறவுகளில் நாம் அதிகமாக காணப்படும் ஒன்று - ஒரே நபருடன் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருப்பது. இதனால் இருவரும் எரிச்சலடைவது. அது சரி தானே, தொலைகாட்சி பார்த்து கொண்டு, புத்தகம் ஏதேனும் படித்துக் கொண்டு, உங்கள் உறவை எப்போதுமே வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தால் எப்படி? வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்க்கை அனுபவத்தை நீங்கள் ஒன்றாக பெற வேண்டாமா? இது உங்கள் செல்லப் பிராணிகளுக்கு நன்றாக தெரியும். நற்பதமான காற்றைப் பெற, வெளியே கூட்டி போக சொல்லி உங்கள் செல்ல பிராணிகள் உங்களிடம் கெஞ்சி கூத்தாடும். ஆகவே உங்கள் துணையையும் வெளியே கூட்டி செல்லுங்களேன்.

சிரித்து விளையாடுங்கள்

சிரித்து விளையாடுங்கள்

சதுரங்கம், வீடியோ கேம்ஸ்... இதையெல்லாம் மீறி உங்கள் துணையுடன் சிரித்து விளையாட பல வழிகள் உள்ளது. உங்கள் செல்லப் பிராணிகளுக்கு எப்படி விளையாட வேண்டும் என தெரியும். அதனால் அவர்களிடம் இருந்து கொஞ்சம் அறிவுரை பெற்றுக் கொள்ளுங்கள். கயிறு இழுத்து விளையாடுங்கள், தலையணையை கொண்டு செல்ல சண்டை போடுங்கள், உங்கள் அனுபவங்களை ஒன்றாக பேசி சிரித்து மகிழ்ந்திடுங்கள்.

அடிக்கடி கட்டிப்பிடித்துக் கொள்ளவும்

அடிக்கடி கட்டிப்பிடித்துக் கொள்ளவும்

சந்தோஷமாக இருக்கும் பல தம்பதிகளும் மறக்கும் விஷயம் ஒன்று உள்ளதென்றால், அது தான் அடிக்கடி கட்டிப்பிடித்து, அரவணைத்து கொள்வது! நம்மில் பலரும் வேலையில் பிஸியாக இருந்து விடுவோம், பின் வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி பார்ப்போம், அதன் பின் போர்த்தி தூங்கி விடுவோம். நம் துணையை நாம் கட்டிப்பிடிக்கிறோம் என்றால் அது அநேகமாக படுக்கையில் மட்டுமே இருக்க கூடும். அதுவும் நமக்கு இருக்கும் அசதியில் அந்த அரவணைப்பை முழுமையாக அனுபவிக்க முடியாது.

செல்லப் பிராணிகளிடம் இருக்கும் பெரிய விஷயமே அப்பப்போ கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதை அது நமக்கு நினைவுப்படுத்தும். மனிதர்களுக்கு கண்டிப்பாக இந்த பாச உணர்வு இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் உறவு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அதனால் உங்கள் துணையை நீங்கள் அடிக்கடி கட்டிப்பிடிக்க வேண்டும். இரண்டு பேரும் தனித்தனியாக ஒரு மூலையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதற்கு பதில், ஒன்றாக கட்டிபிடித்து அமர்ந்து, ஒரு பாப்கார்னை சேர்த்து ஒன்றாக உண்ணுங்கள். உங்களது பிஸியான வாழ்க்கையில் நாளை நாளை என அனைத்தையும் தள்ளி வைத்தால் எதுவுமே நடக்காது. ஒன்றே செய், அதை நன்றே செய், அதையும் இன்றே செய்.... அதனால் இன்றே கட்டிப்பிடிப்பதை தொடங்குங்கள். காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு ஐந்து நிமிடமாவது கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஏற்கனவே தெரியும்.

கெட்ட பழக்கத்தை சீக்கிரமாகவே நிறுத்துங்கள்

கெட்ட பழக்கத்தை சீக்கிரமாகவே நிறுத்துங்கள்

உங்கள் செல்ல நாய், நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு, உங்களுக்கு பிடித்த செருப்பை கடித்து, கார்பெட் மீது சிறுநீர் கழித்து, சோஃபா குஷன்களை கடித்து குதறினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அது தன் ஒழுக்க பாடத்தை கற்பிக்கும் வரை அதை சும்மா விட மாட்டீர்கள் தானே! இது உங்கள் உறவிற்கும் பொருந்தும்!

அதற்காக உங்கள் துணையை அதே போல் கட்டிபோட்டு மிரட்டி திருத்த வேண்டும் என கூறவில்லை. நீங்களும் உங்கள் துணையும் ஒன்றாக சேர்ந்து பேசி, உங்கள் கெட்டப் பழக்கங்களை நிறுத்த வழிவகுக்க வேண்டும். சின்ன சின்ன கெட்டப் பழக்கங்களை ஆரம்பத்திலேயே நிறுத்தவில்லை என்றால் தம்பதிக்கு இடையே பிரச்சனை வளர்ந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்!

குப்பைகளை உண்ணாதீர்கள்!

குப்பைகளை உண்ணாதீர்கள்!

உணவு மேஜைக்கு வந்து கெட்டு போன மிச்ச மீதி உணவிற்காக கெஞ்சக் கூடாது என உங்கள் செல்லப் பிராணிக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்திருப்பீர்கள். இதை ஏன் நீங்கள் வாழ்க்கையில் பின்பற்ற கூடாது? அனைத்து உறவுகளுக்கும் சிறிதளவாவது சமரசம் தேவைப்படும். எதிலுமே எதுவும் 100% சரியாக இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது நீங்கள் இருவர் மட்டும் 100% சரியாக இருக்க முடியுமா?

இருப்பினும் சின்ன சின்ன விஷயங்களுக்காக சமரசம் செய்ய தேவையில்லை. ஆரோக்கியமாக மற்றும் உங்களுக்கு நல்லதாக இல்லாத விஷயத்திற்காக நீங்கள் சமரசம் செய்து கொள்ள கூடாது. உங்களுக்கு தகுதி அளிக்கப்படாத விஷயத்திற்காக கண்டிப்பாக நீங்கள் சமரசமாக கூடாது. ஆனால் இது தெரியாமல் எல்லாத்திற்கும் வளைந்து கொடுத்து போவது சிலரது பழக்கமாகி விட்டது. அதனால் உங்கள் செல்லப் பிராணியிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்: குப்பைகளை விட உங்களுக்கு பல விஷயங்கள் முக்கியமாக உள்ளது.

பகிர்தல்

பகிர்தல்

தங்கள் செல்லப் பிராணிகளிடம் உணவை பகிர்ந்து கொள்ளும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் தங்கள் துணையிடமோ அவர்களுக்கு தேவையான உணவை தனியாக போட்டுக் கொண்டு உண்ணச் சொல்வார்கள். ஒரு வேளை, நம் துணையிடம் நாம் அதிகமாக பழகி போனதாலோ (நல்லதுக்கும் சரி கெட்டதுக்கும் சரி) என்னவோ, அதனால் தான் அவர்களிடம் நாம் அப்படி நடந்து கொள்கிறோம் போல! பகிர்தல் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். உங்கள் செல்லப் பிராணிகளிடம் எப்படி பகிர்ந்து கொள்கிறீர்களோ, அதே போல் உங்கள் துணையிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நன்றியுடன் இருங்கள்

நன்றியுடன் இருங்கள்

உங்கள் செல்லப் பிராணியிடம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய கடைசி பாடம் இது, ஆனாலும் கூட ஒரு உறவில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமிது. உங்களுக்கு கிடைத்ததை எண்ணி என்றுமே நன்றியுடன் இருப்பது. நாம் காட்டும் அன்பினால் நம் செல்லப் பிராணிகள் நம்மிடம் எப்போதும் நன்றியுடனும், அன்புடனும் நடந்து கொள்ளும். அதேப்போல் உங்கள் துணையும் மிக நல்லவராக, உங்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவராக இருந்தால், அதற்காக நீங்கள் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு அவர் கிடைத்து விட்ட காரணத்தினால், அவரிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். அவருக்கு உங்கள் காதலை திருப்பி கொடுங்கள்.

செல்லப் பிராணிகள் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதை நம்மில் பலரும் உணர மாட்டோம். பின்ன என்ன இந்த பாடங்களை எல்லாம் அவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள முடிகிறது என்றால் சும்மாவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Relationship Lessons You Can Take From Your Pet

Pets are amazing creatures. They can teach you many things about your relationships. Here are some relationship lessons you can take from your pet.
Desktop Bottom Promotion