For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடலை போடுவதால் உறவுகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

By Ashok CR
|

நீங்கள் காதலிக்கும் பருவத்தை அடைந்து விட்டீர்களா? அப்படியானால் உங்கள் காதல் கைக்கூடி, நீண்ட காலம் நிலைத்து, வெற்றிகரமான உறவில் முடைய எல்லோரையும் போல நீங்களும் ஆசைப்படுவீர்கள். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய காலகட்டத்தில், நம்மிடம் இருக்கும் அனைத்தையும் உரிந்து எடுத்து விடும் இந்த போட்டி மிக்க உலகம். நாம் உருகி நேசிக்கும் நம் காதலன்/காதலியையும் அன்றாட இடைக்கால வேளையில் மூழ்குவதால் இழந்து விடுகிறோம்.

சுவாரஸ்யமானவை: ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!

அதிகமாக கடலை போடுபவர்களுக்கு குருதி வெள்ளையணு அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.

கடலை போடுவதால் உறவுகள் ஆரோக்கியமானதாக ஏன் விளங்குகிறது என்பதை கீழ்கூறியவைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Why Flirting Is Good For Relationships

1. கடலை போடுவதில் நல்ல உணர்வுகள் அடங்கியுள்ளது. இதனால் உங்களிடம் இருந்து நேர்மறையான ஆற்றல் திறன் அதிகளவில் வெளிப்படும். அதில் பாதியளவாவது உங்கள் காதலன் அல்லது காதலிக்கும் செல்லும். கடலை போடுவது உங்கள் உறவுக்கு நல்லது என்பது இந்த ஒட்டுமொத்த நேர்மறையான ஆற்றல் வெளிப்பாட்டால் உங்களுக்கு புரிந்திருக்கும்.

2. வேகமாக நகரும் போட்டிமிக்க இன்றைய உலகத்தில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் துணை உங்களை சந்தோஷப்படுத்தி உங்களுடன் கடலை போட்டால், உங்கள் மன அழுத்தம் எல்லாம் பறந்து போகும் அல்லவா? கடலை போடுவது உறவுகளுக்கு ஆரோக்கியமாக விளங்கும் என்பதற்கு மற்றொரு காரணம் இது.

3. நீண்ட நேரம் நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியிடம் கடலை போட்டாலும் கூட அதை அவர்கள் அசால்ட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை உங்களால் உணர முடியும். அதனால் உங்களின் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அதிகரிக்கும். கடலை போடுவதால் நல் உறவு அமைவதற்கு இதுவும் கூட ஒரு நல்ல காரணமே.

4. காதலில் விழுந்த ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்ட மனக்கிளர்ச்சி, கடலை போடுவதால் மீண்டும் உண்டாகும். இது தம்பதியர்களின் நெருக்கத்தை அதிகரித்து அவர்களின் தாம்பத்திய உறவை மேம்படுத்தும். கடலை போடுவதால் ஆரோக்கியமான உறவு அமைய இந்த காரணத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. அமைதியான, மனதுக்கு இதமான உரையாடல்கள் நடைபெறும் போது உங்கள் உணர்வுகள் அதிகரிக்கும். இதனால் ஒரு வித மன நிம்மதி உண்டாகி தணிவை ஏற்படுத்தும். கடலை போடுவது உறவை மேம்படுத்தும் என்று சொல்வதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

6. அதே உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் போது, உங்களுக்கு சொகுசை உண்டாக்கினாலும் அலுப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் உறவு சலிப்பு தட்டுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டால், உங்கள் துணையுடன் நன்றாக கடலை போடுங்கள். கடலை போடுவது எப்படி உறவை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள்.

7. கடலை போடுவதால் ஒருவருக்கு நல்ல உணர்வும் ஈர்ப்பும் உண்டாவதாலும் கூட, நல்ல உறவுக்கு அது பயன்பட ஒரு காரணமாக அமைகிறது. உங்களை ஒருவர் தலையில் தாங்கி கொண்டு நடக்கையில், அதுவும் அவர் எதிர் பாலினமாக இருக்கும் போது, அது உங்களுக்கு பிடிக்காமல் போகுமா? அதுவும் அந்த நபர் உங்கள் மனதுக்கு பிடித்தவராக இருந்தால், என்ன கேட்கவா வேண்டும்?

8. கடலை போடும் போது டோபமைன், செரோடோனின் மற்றும் அட்ரினாலின் போன்ற சுரப்பிகள் வெளியாகும். இவையனைத்தும் சந்தோஷத்தை அளித்திடும் ரசாயனங்கள். இவைகள் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து உங்களை மகிழ்வுடன் கவர்ச்சியாக வைத்திருக்கும். இது போதாதா, நல்ல உறவுக்கு கடலை போடுவது எப்படி பயனளிக்கிறது என்பதை புரிந்து கொள்ள?

பல வருடங்கள் ஒன்றாக வாழ்பவர்களுக்கு மத்தியில் சந்தோசம், குதூகலம் போன்றவைகள் நீடிப்பது அறிய ஒன்றே. ஆனால் உங்கள் உறவை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திட, உங்கள் பக்கத்தில் இருந்து, சிறிது முயற்சியை எடுத்திட வேண்டும். உங்கள் உறவில் இருக்கும் சந்தோஷ தீப்பொறி எப்போதும் எரிந்து கொண்டிருக்க சிறிது கடலை போடா பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் உறவு எங்கே போகிறது என்பது தெரியாமல், இருட்டுக்குள் செல்வதை போல் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், தீமை ஏற்படுத்தாமல் கடலை போடுவதில் ஈடுபடுங்கள். அப்படி செய்வதால் உங்கள் உறவில் உண்டாகும் மகிழ்சியை மீண்டும் அனுபவிக்க தொடங்குங்கள்.

English summary

Why Flirting Is Good For Relationships

Know why flirting is good for your relationship. Flirting is healthy for relationships and helps build confidence between partners. Read on to know why flirting is healthy in relationship.
Desktop Bottom Promotion