For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மீது யாரேனும் காதலில் விழுவதற்கான விந்தையான உளவியல் காரணங்கள்!!!

By Ashok CR
|

சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்தவர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கான அறிவுரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.

சில நேரங்களில் மனம் போன போக்கு காரணமாக ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படலாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், அவர் அணிந்திருக்கும் ஆடை நிறம், அவர் வைத்திருக்கும் செல்லப்பிராணி போன்ற காரணங்களை சொல்லலாம்.

இங்கு உளவியல் ரீதியான ஈர்ப்பின் மீது நடந்த சில ஆராய்ச்சிகளை வைத்து ஏன் ஒருவர் காதலில் விழுகிறார் என்பதற்கான சில காரணங்களை இன்று நாங்கள் கூற போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்ரில்லிங்காக சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டுமா?

த்ரில்லிங்காக சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டுமா?

1974 ஆம் வருடம், பாலின ஈர்ப்பு மற்றும் பதற்றத்துக்கு இடையேயான இணைப்பை சோதிக்க நினைத்தார்கள் டொனால்ட் டட்டன் மற்றும் ஆர்தர் ஆரோன் என்பவர்கள். ஜர்னல் ஆஃப் பெர்சனாலிடி அண்ட் சைகாலஜியில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், ஆண்களை இரண்டு நிபந்தைகளின் கீழ் பிரித்தனர்.

முதலாமானவர் உயர்ந்த ஆடிக்கொண்டிருக்கும் தொங்கும் பாலத்தை கடந்தார். மற்றவரோ உயரம் குறைவான வலிமையுள்ள பாலத்தை கடந்தார். அதன் பின் ஒரு பெண் சோதனையாளரை அவர்கள் சந்தித்தனர். அவர்களிடம் அவர் தொடர்ச்சியான கேள்விகளை கேட்டு விட்டு, அவரின் தொலைப்பேசி எண்ணையும் கொடுத்தார்.

உயர்ந்த பாலத்தை கடந்த ஆண் அந்த பெண்ணை அழைக்க விரும்பினார். ஆனால் இந்த எண்ணம் உயரம் குறைவாக இருந்த பாலத்தை கடந்தவருக்கு இல்லை. இந்த நிகழ்வை விழிப்புணர்ச்சியின் தவறான பொறுப்பேற்றல் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்த பாலத்தை கடக்கையில் பதற்றத்தால் விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அது பெண்ணால் ஏற்பட்ட ஈர்ப்பு என அந்த ஆண் தவறாக புரிந்து கொண்டார். அதனால் தான் முதல் முறை டேட்டிங் செல்கையில் த்ரில்லிங்கான விஷயத்தை செய்ய விரும்புவார்கள் - உதாரணத்திற்கு, கேளிக்கை பூங்கா செல்லுதல், ஸ்கை டைவிங் செய்தல் அல்லது பைக்கில் பயணித்தல்.

அவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தால்...

அவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தால்...

உணர்ச்சி ரீதியாக மட்டும் ஒருவரிடம் நெருக்கமாக இருந்தால் போதாது. உடல் ரீதியாகவும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பது அவசியம்.

அதற்கு காரணம் அவர்கள் உயிர்ப்பற்ற உரையாடல்களே அதிகமாக செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஆங்காங்கே சந்திக்கையில் சின்ன உரையாடல் மட்டுமே இருக்கும். இது நாளடைவில் ஒருவித நெருக்க உணர்ச்சியை ஏற்படுத்தும். இதனை வெளிப்பாட்டின் தாக்கம் எனவும் கூறலாம். அதாவது ஈர்ப்பில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது.

நீங்கள் அழகிய வீட்டில் இருக்கிறீர்களா?

நீங்கள் அழகிய வீட்டில் இருக்கிறீர்களா?

அழகிய கார்களை கொண்ட ஆண்களின் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படும் என்பதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் விலை உயர்ந்த வீட்டில் இருக்கும் படி புகைப்படம் எடுத்துள்ள ஆண்களின் மீதும் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. காட்ரிஃப் மெட்ரோபாலிடன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் படி, ஒரு ஆணை மிகவும் விலை உயர்ந்த வீட்டில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதே போல் மற்றொரு ஆணை கொஞ்சம் சாதாரண வீட்டில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

விலை உயர்ந்த வீட்டில் உள்ள ஆண் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார் என அதிகமான வாக்குகளை பெண்களிடம் பெற்றுள்ளார். அந்தஸ்து அதிகமாக உள்ள ஆண்களிடம் ஈர்ப்பும் அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?

நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?

மிசிகன் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, ஆண்களின் சிற்றலங்காரத்தையும் பெண்கள் கவனிப்பார்கள். நாய்களை வளர்க்கும் ஆண்கள் என்றால் பெண்கள் மத்தியில் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், நாய் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் அவர்கள், வரப்போகும் பெண்ணையும் மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். மேலும் உங்களை பார்க்க மிகவும் அமைதியானவராக, அணுகக்கூடியவராக மற்றும் சந்தோஷமானவாரக தெரிவீர்கள்.

மேலும், டாக்நிஷன் நடத்திய சர்வேயின் படி, 82% பேர்களுக்கு ஈர்க்கக்கூடிய ஆண்களை நம்பிக்கையுடன் அணுக அவர்கள் நாய் வளர்க்கும் ஆண்களாக இருக்க வேண்டுமாம். முதல் அபிப்ராயத்தை பெறுவதற்கு நீங்கள் என்ன ஆடை அணிகிறீர்கள் என்பதை விட நாய் வளர்க்கிறீர்களா என்பது தான் முக்கியமாம்.

முதல் சந்திப்பில் அவர்களை பிடிக்கவில்லையா?

முதல் சந்திப்பில் அவர்களை பிடிக்கவில்லையா?

முதன் முறை ஈர்க்க தவறியவர்கள் மீது தான் சிறிது காலம் கழித்து ஈர்ப்பு ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கு பெற்றவர்கள், தற்செயலாக தங்களைப் பற்றி சோதனையாளர் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக கூறிய கருத்துக்களை கேட்டனர். இதனால் முதலில் சோதனையாளருக்கு எதிர்மறை மதிப்பெண் அளித்தவர்கள் சிறிது காலத்தில் நேர்மறை மதிப்பெண்ணை அளித்தார்கள். இது யார் மனதையாவது ஜெயிப்பதை ஒரு பெரிய வெகுமதியாக பார்க்கின்றார் என்பதை எடுத்துக்காட்டும்.

உங்கள் நடை வேகத்தை அவர்களுடன் ஒப்பிடுவது

உங்கள் நடை வேகத்தை அவர்களுடன் ஒப்பிடுவது

மக்கள் நடக்கும் வேகத்தை பற்றி சம்பைக்ன்-அர்பானாவில் உள்ள இல்லினோயிஸ் பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் படி, காதல் கொண்ட பெண்ணுடன் ஆண் நடக்கையில், அந்த பெண்ணை விட ஆண் மெதுவாக நடப்பார் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதே சமயம், ஈர்ப்பு ஏற்படாத இருவர் நடக்கையில், ஒருவர் வேகத்திற்கு மற்றவர் ஈடு கொடுக்க மாட்டார்கள்.

அவர்கள் உங்களை விட குறைவான அல்லது உங்களுக்கு சமமான அழகை உடையவர்கள்

அவர்கள் உங்களை விட குறைவான அல்லது உங்களுக்கு சமமான அழகை உடையவர்கள்

1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு சர்வேயின் படி, ஒவ்வொரு பங்கேற்பாளரையும் தங்களின் உடல் ரீதியான கவர்ச்சியின் படி மதிப்பெண் கொடுத்தனர். அதன் பிறகு ஒரு பங்கேற்பாளர் மற்றொரு பங்கேற்பாளருடன் டேட்டிங் செல்ல ஜோடி சேர்க்கப்பட்டனர். அதன் பின் டேடிங் சென்றதால் ஏற்பட்டுள்ள திருப்தியை மதிப்பிட அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மிகவும் கவர்ச்சிகரமாக இருந்த பங்கேற்பாளர்களின் தீர்ப்புகள் தான் கடுமையாக இருந்தது. இத்தனைக்கும் டேட்டிங் சென்ற இருவரும் சரிசமமான அழகில் தான் இருந்தனர். ஒருவர் அழகாக இருந்தால், அவரின் திருப்தி அளவு குறைவாகவே இருந்தது. ஆனால் உண்மையிலேயே கவர்ச்சியான நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இவர்கள் போக மீதமுள்ளவர்கள் திருப்தி அடைந்தார்கள்.

அதிகமாக புன்னகைத்தீர்களானால்?

அதிகமாக புன்னகைத்தீர்களானால்?

ஈர்ப்பு மற்றும் சந்தோஷத்திற்கு இடையேயான உறவை ஆராய சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதன் படி, ஒருவரின் ஈர்ப்பும் மதிப்பும், அவரின் முகத்தில் காணப்படும் புன்னகையின் அளவை பொறுத்தே அமைகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இசை

இசை

பாலின தேர்வு இசையுடன் தொடர்பில் இருக்கிறது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு ஆராய்ச்சியின் படி, கையில் கிடார் கவர் அல்லது விளையாட்டு பையை வைத்திருந்த ஒரு இளைஞனின் தொலைப்பேசி எண்ணை கிட்டத்தட்ட 300 இளம் பெண்கள் கேட்டுள்ளனர். அதுவும் கிடார் கவரை கையில் வைத்திருந்த இளைஞனுக்கு பல பெண்கள் தங்களின் எண்ணை கொடுக்க முன் வந்தனர்.

சிவப்பு நிற ஆடையை அணிந்தால்...

சிவப்பு நிற ஆடையை அணிந்தால்...

ச்லோவகியன் நாட்டில் நடந்த ஒரு ஆய்வின் படி, சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களுக்கு தான் டேட்டிங் அதிகளவில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதை பாலின ஈர்ப்பாக கருதலாம். காரணம், தங்களுக்கேற்ற ஆணை தேர்வு செய்யும் பெண்கள் அவர்களை ஈர்க்க சிவப்பு நிறத்தை பயன்படுத்துகிறார்கள்.

தலை முடி ஒரு குறிப்பிட்ட வகையில் இருந்தால்...

தலை முடி ஒரு குறிப்பிட்ட வகையில் இருந்தால்...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் படி, அடர்த்தியான தாடி, குறைவான தலை முடி, சுத்தமாக தாடி இல்லாத ஆண்களை விட அடர்த்தியான தலை முடியை கொண்ட ஆண்கள் தான் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர்.

ஈர்ப்பையும் மீறி கருவுறுதலில் கூட முக முடியின் தாக்கம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் அதிக முடியுள்ள ஆண் அதிக ஆண்மை உடையவராக பெண் பார்க்கிறாள். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் கருவுறும் வேளையில் முழுவதுமாக தாடி வளர்த்திருந்தால், அதிக பெற்றார் தன்மையும் ஆரோக்கியத்தையும் அது குறிக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Psychological Reasons Someone Might Fall In Love With You

Sometimes, people are attracted to each other for seemingly arbitrary reasons, such as what color you wear or whether you have a pet. We pored through research on the psychology of attraction and found some fascinating reasons why people fall in love.
Desktop Bottom Promotion